SDPI கட்சியின் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள்-2021

Vinkmag ad

SDPI கட்சியின் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள்-2021

விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

SDPI கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 4 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது.  இறைவன் நாடினால் இந்த ஆண்டும் (2021) சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர்களை பரிந்துரை செய்யக்கூடியவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விருதுகளும் – தகுதிகளும்

1. டாக்டர் அம்பேத்கர் விருது – ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபடுபவர்களில் ஒருவருக்கு.

ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித்கள், பழங்குடியின மக்கள், முஸ்லிம்கள் இவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து களப்பணியாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். அதில் அந்தந்த சமூக மக்கள் நன்மை பெற்றிருக்க வேண்டும்.

2. தந்தை பெரியார் விருது – மனித உரிமை களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களில் ஒருவருக்கு.

பாதிக்கப்பட்டவருக்காகவோ, பொது சமூகத்தின் நீதிக்காகவோ போராடக்கூடியவராக இருக்க வேண்டும்.

3. காமராஜர் விருது – கல்வி சேவை புரிந்தவருக்கான விருது.

கல்வியை சேவையாக வழங்குபவர். வறியவர்களின், ஒடுக்கப்பட்டோரின் கல்வி உயர்வுக்காக போராடுபவர்.

கல்வித்துறையில் சிறந்து பணியாற்றுபவர். கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகளை அகற்ற போராடுபவர். இவர்களுக்கான விருது.

4. காயிதே மில்லத் விருது – சிறந்த பொது வாழ்விற்கான விருது.

பொது வாழ்வில் நேர்மை-தூய்மை மக்கள் தொண்டு, சமூக சமுதாய பணி இவைகளுக்கான விருது.

5. பழனி பாபா விருது – பாசிச அடக்குமுறைக்கு எதிராக களம் கண்டவர்கள்

பாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்பு களத்தில் தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுப்பவர்களுக்கான விருது.

6. நம்மாழ்வார் விருது – சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கான விருது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகள்-போராட்டங்கள்-செயல்திட்டங்கள் இவற்றில் சிறந்து விழங்குபவர்களுக்கான விருது.

7. அன்னை தெரசா விருது – சமூக சேவைக்கான விருது.

சமூக சேவைப்பணிகளில் சாதிப்பவர்கள். சிறந்து விளங்குபவர்கள். உதாரணமாக மாற்றுத்திறனாளிகள், அனாதைகள், நோயாளிகள் இதுபோன்று பாதிக்கப்பட்டோர். கீழ்நிலையில் உள்ளோருக்காக தன்னலம் பாராமல் உழைக்கும் சாதனையாளர்களுக்கான விருது.

8. கவிக்கோ விருது – தமிழ், இலக்கியம்-எழுத்து-வரலாறு- இவைகளில் சிறந்து விளங்குவதற்கான விருது.

சிறந்த கவிதை, இலக்கிய நூல், கட்டுரை தொகுப்புகள் சிறந்த தமிழ் தொண்டு – இவைகளில் சிறந்து விளங்கியதற்கான விருது.

தங்கள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

SDPI விருது தேர்வுக்குழு 2021
SDPI கட்சி தலைமை அலுவலகம்
4 / 7, இப்ராஹிம் சாஹிப் தெரு,
மண்ணடி, சென்னை – 600 001
தொலைப்பேசி: 044 25230136
மின்னஞ்சல்:sdpiaward@gmail.com
வாட்ஸ்அப்: 90259 09149

இப்படிக்கு
SDPI விருது தேர்வுக்குழு 2021

News

Read Previous

புத்தகம் வாசிப்போம்..!

Read Next

மஃரூஃபின் டைரியிலிருந்து:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *