65 வயதை கடந்தவர்கள் ……

Vinkmag ad

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

1. கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.

2. வேகமாக திரும்பாதீர்கள்.

3. கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.

4. நின்றவாறு கால்சட்டை(Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள்.

5. Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.

6. இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.

7. பின்புறமாக நடக்காதீர்கள்.

8. எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்.

9. படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள்.

10. உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

பின்வரும் நான்கு விசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும்.

2. சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.

3. கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.

4. திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.

News

Read Previous

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்

Read Next

உதவும் மனப்பான்மை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *