மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு

Vinkmag ad

மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு

 

கடந்த மார்ச் 25 அன்று பொதுமுடக் கம் அமல்படுத்தப்பட்டது தொடங்கி, ஜூலைமாதம் வரையிலான 4 மாத காலத்தில்,1 கோடியே 89 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக பொருளாதாரக்கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

முக்கியமாக, இவர்கள் அனைவரும் முறைசாரா தொழிலாளர்கள் அல்ல; மாறாகநிலையான சம்பளத்தில் (Salaried Jobs) பணியாற்றி வந்தவர்கள் என்ற அதிர்ச்சித்தகவலையும் சிஎம்ஐஇ வெளியிட்டுள்ளது.அதாவது, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த ஏப்ரல் – மே காலத்தில், முறைசாரா கூலித் தொழிலாளர்கள் மட்டுமே (Informal Sector) அதிகமான அளவில்வேலையிழந்தனர். தற்போதோ நிலையான சம்பளம் பெற்ற ஊழியர்களும் (Salaried Jobs) சுமார் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையை இழந்துள்ளதாக பொருளாதாரக் கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

சிஎம்ஐஇ அமைப்பின் தரவுகள்படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில்இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பைஇழந்துள்ளனர். மே மாதத்தில் 1 லட்சம்பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும்வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இறுதியாக கடந்த 4 மாதங்களில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை 1.89 கோடி என்றுசிஎம்ஐஇ கூறியுள்ளது.இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில், நிலையான வேலைவாய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அவை வெறும் 21 சதவிகிதம்தான். இதுமுறைசாரா துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை விட மிகக் குறைவுதான்.ஆனால் இந்த 21 சதவிகித வேலைவாய்ப்புகள்தான், நாட்டின் பொருளாதாரம் மற்றும்வர்த்தகச் சந்தை கட்டமைப்பிற்கு மிகவும்முக்கியமானது என்று சிஎம்ஐஇ தெரிவிக்கிறது.

 

நகர்ப்புற வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் மாதச் செலவுகளைக் குறைத்து, குறைவாக செலவு செய்கின்றனர் என்பதற்கான தரவுகள் பல்வேறு அறிக்கைகளில் உறுதியாகி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களின் தேவை தொடர்ந்து குறையுமானால், அது முறைசாரா மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திலும் கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாட்டை உருவாக்கும்; இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத் தும் என்று எச்சரிக்கிறது.ஏற்கெனவே, பணவீக்கம், மொத்தஉள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, தொழிற்சாலைசெயல்பாட்டுத் தரவு மற்றும் நிதிப் பற்றாக் குறை போன்ற முக்கிய குறிகாட்டிகள் தொடர்ந்து கவலையளிக்கும் விதமாகவே இருக்கின்றன என்பதையும் சிஎம்ஐஇ நினைவுபடுத்தியுள்ளது.

 

நமது நாட்டைப் பொறுத்தவரை, நிலையான சம்பள வேலைவாய்ப்புகள் எளிதாககைவிட்டுப் போகக்கூடியன அல்ல. ஆனால் ஒருமுறை  இந்தச் சம்பள வேலைவாய்ப்புகள் பறிபோனால் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமற்றது என்று கூறும் பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பு, முறைசாரா துறை மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது; ஆனால், நிலையான வேலைகளில் முன்னேற்றம் இல்லைஎன்ற யதார்த்த நிலையையும் பதிவு செய்துள்ளது.

News

Read Previous

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே!

Read Next

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு

Leave a Reply

Your email address will not be published.