இணைய இணைப்பு இல்லாத போதும் Google Chrome இணைய உலாவி மூலம் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த இணையதளங்களை பார்ப்பது எப்படி?

Vinkmag ad
internettamilinfotech.com

இணைய இணைப்பு இல்லாத போதும் Google Chrome இணைய உலாவி மூலம் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த இணையதளங்களை பார்ப்பது எப்படி?

  • by Tit Admin
  •  July 26, 2014
  •  1 min read
  •   original

கணனி மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் Google Chrome இணைய உலாவிக்கு தனிச்சிறப்பு உண்டு.

சிறந்த வேகத்துடன் ஏராளமான வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த இணைய உலாவியில் இன்னும் சில வசதிகள் மறைந்தவாறு காணப்படுகின்றன.

அந்த வகையில்  Google Chrome இணைய உலாவியில் மறந்திருக்கக் கூடிய சில வசதிகளையும் அவற்றினை எவ்வாறு செயற்படுத்திக் கொள்ளலாம் என்பதனையும் நாம் ஏற்கனவே பின்வரும் பதிவுகள் மூலம் பார்த்திருந்தோம்.

1. வலிமையானதொரு கடவுச்சொல்லை உங்களுக்கு பரிந்துரைக்கும் Google Chrome இணைய உலாவி (மறைந்திருக்கும் வசதி)

2. Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் Tabs தொடர்பான ஒரு வசதி. (Chrome உலாவி பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டியது)

3. Google Chrome இணைய உலாவியில் மறைந்திருக்கும் Profile Manager வசதியினை செயற்படுத்திக் கொள்வது எவ்வாறு?

 

மேற்குறிப்பிட்டவைகள் போன்றே இணைய இணைப்பு இல்லாத போதும் நாம் ஏற்கனவே பிரவேசித்த இணைய தளங்களுக்கு பிரவேசிக்கக் கூடிய வசதியும் மறைந்து காணப்படுகின்றது.

 

 

இதனை நீங்கள் செயற்படுத்திக் கொள்ள பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

 

  • Chrome இணைய உலாவியின் Address Bar இல் chrome://flags என தட்டச்சு செய்து Enter அலுத்துக. (படம் இல: 1)
  • பின் நீண்டதொரு பட்டியலை அவதானிப்பீர்கள்
  • பின் அதில் Enable Offline Cache Mode என்பதை தேடிப்பெருக.
  • இதனை இலகுவாக தேடிப்பெற Ctrl+f அல்லது f3 இனை அழுத்தும் போது தோன்றும் Search சாளரத்தில் Enable Offline Cache Mode என்பதை தட்டச்சு செய்க. (இல: 2)
  • இனி அது Highlight செய்யப்படும். பின் அதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Enabled என்பதை சுட்டுக (இல: 3)
  • பின் கீழிருக்கும் Relaunch என்பதனை அலுத்துக (இல: 4)
அவ்வளவு தான்.

இனி இணைய இணைப்பு கிடைக்காத சந்தர்பத்திலும் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த தளங்களை பார்க்க முடியும்.

News

Read Previous

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?

Read Next

2014 தேர்தலுக்குப் பின் …… முஸ்லீம்கள் என்ன செய்ய வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published.