வீரத்துறவி விவேகானந்தர்!

Vinkmag ad
இளைஞன் ஒருவன்  விவேகானந்தரிடம்,
“பூஜை  தியானம் என்று எல்லாம் செய்கிறேன். ஆனாலும்  என் மனம் அமைதி அடையவே இல்லையே  ஏன்?” எனக்கேட்டான்.
அதற்கு விவேகானந்தர்,”உன்னால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவருக்கு பணிவிடை செய். நிச்சயம் உனக்கு மன அமைதி நேரும்” என்றார்!
********
1898ல் கல்கத்தாவில் ப்ளேக் நோய் பரவியதில் ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். அனைவரும் கூட்டம் கூட்டமாக  ஊரைவிட்டு  வெளியேறிய நிலையில் விவேகானந்தர் நிவாரணப்பணிகளைத் தொடங்கினார். விழிப்புணர்வு  பிரசாரத்தில் ஈடுபட்டார்.
‘இதற்கு  பணத்துக்கு என்ன செய்வது?’ என்ற கேள்வி எழுந்தது.
“நாம் மடத்துக்காக  வாங்கி உள்ள இடத்தை  விற்போம்  .துறவிகளான நாம்  மரத்தடியில் கூட வசிக்கலாம் .மக்கள்  துயர் துடைப்பதே முக்கியம்.”என்றார்  விவேகானந்தர்.

— *****

(விவேகானந்தர் நினைவுகளை இன்றைய நாளில் பகிர்ந்துகொள்வோம்)

**
“எழுமின்! விழுமின்! இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின்!”
சுவாமி விவேகானந்தர்

 

News

Read Previous

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Read Next

எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *