விட்டுக் கொடுங்கள்

Vinkmag ad

இன்றைய சிந்தனை..
………………………………………

” விட்டுக் கொடுங்கள்.( forgiveness..)..”
………………………………………

ஒரு சமயம் டென்னிஸ் விளையாட்டின் இறுதிப் போட்டி இலண்டனில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது..

அதில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களான ஜான் மெக்கன்ரோ..( அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்), என்பவரும்,விஜய் அமிர்தராஜ்.( இந்தியாவை சேர்ந்தவர்) என்பவரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்..

ஆட்டத்தில் தனக்கு ஒரு புள்ளி.( point) தரவில்லை என்று நடுவரிடம் மிக கடுமையாக வாக்குவாதம் செய்து சண்டை புரிந்தார் ஜான் மெக்கன்ரோ..

அவரிடம் இருந்து கடுமையான வார்த்தைகள் உஷ்ணமாக வெளிப்பட்டது..

இதை மறுபுறத்தில் இருந்த விஜய் அமிர்தராஜ் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.

பின்பு நடுவரிடம் விஜய் அமிர்தராஜ் சென்று அந்தப் புள்ளியை அவருக்கே கொடுத்து விடுங்கள் என்று
கூறினார்..

இந்தப்புள்ளியை அவருக்கு வழங்கியதால் அந்தப் போட்டியில் விஜய் அமிர்தராஜ்.தோல்வியை தழுவினார்..

ஆனால் அந்த போட்டியை காணவந்த மக்கள் விஜய் அமிர்தராஜ் அவர்களின் அணுகுமுறையை வெகுவாக பாராட்டினார்கள்.. அந்த மக்கள் மத்தியில் உயர்ந்து நின்றார்..

இன்றளவும் டென்னிஸ் விளையாடும் அந்த களத்தில் விஜய் அமிர்தராஜ்.அவர்கள் மதிப்பாக நினைக்கப் படுகிறார்..

அடம்பிடிக்கும் தன்மை குழந்தைகளிடம் வெகுவாக காணப்படும்.. அவர்கள் வளர,வளர பக்குவம் ஏற்படுகின்றபோது விட்டுக் கொடுத்தல்,மற்றவர்களை அனுசரித்து போகுதல் என்கின்ற பண்புகள் வளர்கின்றன..

ஆம்.,நண்பர்களே..,

விளையாட்டிலும் சரி,வாழ்க்கைப் பாதையிலும் சரி
இந்த பிடிவாத குணத்தை குழந்தைப்பருவத்தில் இருந்தே சரி செய்யப் படாததால் உடல் வளர்ந்து விட்ட பின்பும் பலர் குழந்தைகளாக இருக்கின்றார்கள்..

முடிந்தவரை விட்டுக்கொடுங்கள், விட்டுக் கொடுப்ப வர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை

ஆம்..,

பெருந்தன்மை கொண்ட உள்ளமே பாராட்டினைப் பெறுகின்றது..

News

Read Previous

அணுவிலிருந்து ஆற்றல்

Read Next

எளிய இயற்கை வைத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *