மோடியின் மேக் இந்தியாவும்,கிளீன் இந்தியாவும்!

Vinkmag ad
மோடியின் மேக் இந்தியாவும்,கிளீன் இந்தியாவும்!
                               (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
தமது உழைப்பால் வளர்ச்சி அடைந்த நாடுகளின் உற்பத்தி பொருட்கள் MADE IN CHINA,MADE IN JAPAN,MADE IN KOREA,MADE IN MALAYSIA,MADE IN SINGAPORE,MADE IN TAIWAN,MADE IN KSA என்று அழைக்கப்படும் போது,
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டும் MADE IN INDIA என்று சொல்வதற்கு பதிலாக MAKE IN INDIA  என்று சொல்லும் மோடியின் சூழ்ச்சி புரிகிறதா மக்களே?
வெளிநாட்டுக்காரன் இந்தியாவுக்குள் வந்து தயாரிக்கும் பொருட்கள் என்பதால் அதற்கு பெயர் மேக் இன் இந்தியாவாம்.
இந்தியாவுக்குள் தொழில் செய்ய வரும் வெளிநாட்டுக்காரனுக்கு நிலம்,நீர்,மின்சாரம் ஆகியவை தடையில்லாமல் வழங்கப்பட வேண்டுமாம்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்யும்.
இதற்காகத்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறது மோடி அரசு.
ஏக்கர் கணக்கில் நிலம் எடுப்பதாக இருந்தால் விளை நிலங்கள் மட்டுமே சாத்தியமாகும்.அல்லது வனத்துறைக்கு சொந்தமான காடுகளை அழித்து கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு இந்திய விவசாயிகளின் பெயரில் இருக்கும் நிலத்தை பிடுங்கி வெளிநாட்டுக்காரனுக்கு கொடுத்து விட்டால் விவசாயம் இல்லாத கிளீன் இந்தியாவாகி விடும்.
இதுதான் மோடியின் மேக் இந்தியா,கிளீன் இந்தியா கொள்கையாகும்.
மோடியின் நில ஆர்ஜித சட்டத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஒவ்வொரு குடிமக்களும் எதிர்க்க வேண்டும்.

News

Read Previous

மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1.50 லட்சம் வழங்கல்

Read Next

மெய்யா?பொய்யா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *