மீன்கள் சில உண்மைகள்!!!

Vinkmag ad

fish

* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.

* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.

* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.

* மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.

* பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

* மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.

* மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.

* காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

* மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.

* ‘லங் ஃபிஷ்’ என்ற மீன் நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.

* ஆழ்கடலில் ஒளியை உமிழும் மீன்கள் வசிக்கின்றன.

* பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரத்திற்குத் தாவிச் செல்லக்கூடியவை.

* மிக வேகமாகச் செல்லக்கூடியது செயில் ஃபிஷ்

* பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது ‘க்ளீனர்’ மீன்.

* ‘பஃபர் ஃபிஷ்’ தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்!

* ‘சூரிய மீன்’ என்ற வகை மீன் கோடிக்கணக்கில் முட்டைகள் இடும்.

* ‘சர்ஜன் மீன்’ என்ற மீனின் வால் பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளன.
தினகரன்

News

Read Previous

புனித மதிநா நகரில் அஜ்மான் பிரமுகருக்கு வரவேற்பு

Read Next

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *