மனம் விட்டு சிரியுங்க

Vinkmag ad

மனம் விட்டு சிரியுங்க…வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்!!

 

# ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் ‘செல்லம்மா’ பேசறேன்…

நான் மட்டும் என்ன ‘கோவமா’வா பேசறேன்?   அட யாருன்னு சொல்லுமா!

——————————————————————————————————————

# நோயாளி; “கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ

ஸ்வீட்டா இருக்கு சிஸ்டர்..

நர்ஸ் : “கர்மம்..”கர்மம்… நான் உண்மையிலேயே ‘ஸ்வீட்’..தான் குடுத்தேன்,

இன்னிக்கு எனக்கு ‘பர்த்டே’….”

————————————————————————————————————————

# டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க

விளம்பரதாரர் : கூட்டிட்டு வாங்க!!… தூக்கிட்டு போங்க!!

—————————————————————————————————————————–

# மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.

கணவன் : ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

——————————————————————————————————————————

ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது

மாணவன் : சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன்

கேட்டுக்கோங்க…

————————————————————————————————————————

# முதலாளி : எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?

ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!

முதலாளி : கீழே பாக்காதே-. நேரா என்னைப் பாரு!

—————————————————————————————————————————-

# மருத்துவர் : “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”

————————————————————————————————————————

# டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர்கிட்ட அனுப்பிடுவாரு…

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள்கிட்டேயே அனுப்பிடுவாரு…

—————————————————————————————————————————–

News

Read Previous

சுதந்திர தின வாழ்த்து

Read Next

சுக்கா? மிளகா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *