பாசிசமும் முதலாளித்துவமும்

Vinkmag ad

பாசிசமும் முதலாளித்துவமும்: –

 

பாசிசத்தின் கோர முகத்திற்க்கு இறையாகி கொண்டிருக்கின்றது, பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, இது ஜெர்மனில் அமைத்த நாஜி அரசாங்கம் போல், இங்கு “இந்து, இந்தி, இந்தியா” என்ற போர்வையில் பார்ப்பனிய ராஜ்ஜியத்தை கட்டமைக்கப்படுகின்றது. அனைவருக்குமான இந்தியா என்ற நிலையை மாற்றி சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே ஒர் மத மோதல்களை தீவிரப்படுத்துவதுதான் இவர்களின் தத்துவமும், செயல்திட்டமும். அரசின் கல்வி, கலாச்சார, அறிவியல், வரலாற்று ஆராய்ச்சி மையங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்களை, அவ்வமைப்புகளின் தலைவர்களாக, இயக்குநர்களாக நியமிப்பதோடு, அந்த அமைப்புகளையே இந்துத்துவா கருத்தியல் தளங்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, இந்த அரசு. 

 

” பாசிஸ்டுகள் முன்கூட்டியே ஆயிரம் ஆண்டுகளுக்குத் திட்டம் தீட்டுகின்றனர்” என்றார் ஜெர்மானிய மார்க்ஸிய அறிஞர் வால்டெர் பெஞ்சமின், இது இப்போது இந்தியாவை ஆளும் வலதுசாரி அரசுக்கு மிக சரியாக பொருந்தும். (இந்தியா எதை நோக்கி?)

 

இந்திய மக்கள் எதிர்கொண்டிருக்கும் இருபெரும் சவால்கள், ஒன்று புதிய பொருளாதார கொள்கை, மற்றொன்று இந்துத்துவ பாசிசத்தின் கொடூர தாக்குதல்கள், இவை இரண்டும் பின்னி பிணைந்து பயணிக்கின்றது, இவைகள் பெரு முதலாளிகளை பாதுகாக்கிறது. இங்கு பாஜக அரசு; வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா என்ற வெறும் வார்த்தை மட்டுமே, இதற்கு இடையே தீவிர பார்ப்பனிய அரசியலை அமல்படுத்துகின்றது. 

 

பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதுதான். முதலாளித்துவத்தின் துனை இல்லாமல் பாசிச அரசியல் சக்திகள் அதிகாரத்தில் அமர்வதில்லை, இங்கு மார்வாடி பணியா பெரு முதலாளிக்கே இந்திய பொருளாதாரம் தாரைவாத்து கொடுக்கப்படுகின்றது, இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் பிடுங்கி கொடுக்கப்படுகிறது, மீனவர்கள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்த படுகிறார்கள், கடற்கரை கைமாறுகிறது பெரு முதலாளிகளுக்கு, இதை எதிர்த்து போராடுபவர்களை தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் படுகின்றனர், இது தான் காவி அரசியல்.

 

புதிய பொருளாதார கொள்கையில்; நிலத்தின் மீதான போர் தொடுக்கப்பட்டுள்ளது, வேளாண் நிலங்களை “பெட்ரோலிய மண்டலங்களாக” அறிவித்து, வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை விவசாயிகளிடம் யிருந்து அபகரித்து, அவர்களை அன்றாட காய்ச்சிகளாக, நடுத்தெருவில் நிறுத்துகின்றது அரசு, பல விவசாயகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்களது நிலங்களை விட்டு புலம்பெயர்ந்து வாழ்வுக்காக கூலிகளாக செல்கின்றனர். ஒரே நாடு ஒரே வரி (GST) மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தங்களது தொழிலிருந்து வெளியேற்றபட்டு செல்லாக்காசாக தூக்கிப்யேரியப்பட்டுள்ளனர்.

 

புதிய கல்விக் கொள்கை: இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கிய மாநில உரிமைகளை பறித்துவிட்டார்கள், மாநில அரசு அதிகாரத்திலிருந்து கல்வி இப்போது மத்திய அரசு அதிகாரத்திற்கு கிழ் கொண்டுவரப்பட்டுள்ளது, இப்போது கல்வி முற்றிலும் காவி மயமாக்கப்பட்டுள்ளது, அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அளிக்க மாறுகிறது அரசு, பல அரசு பள்ளிகள் மூடப்படுகிறது, இது தனியாருக்கு தாரைவாத்து கொடுக்கப்படுகிறது. புதிய புதிய தகுதி தேர்வு முறைகள் அறிமுக படுத்தபடுகின்றது, மருத்துவ கல்விக்கு நீட்  நுழைவுத் தேர்வு முறை, இது மேலும் அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்கும் நாடு முழுதும் நுழைவுத்தேர்வுக்கு வழிவகுக்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. மேலும், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை. இது பள்ளி படிப்பிலிருந்து வடிகட்டவே இவர்வளின் நோக்கம். இந்த பாசிச அரசு அறிவுக்கூர்மையுள்ள மக்களை விரும்புவதில்லை, கேள்வி கேட்பவர்களையும், சிந்திக்கும் மக்களும் இவர்களுக்கு தேவையில்லை, அரசு சொல்வதை கேட்டு செயல்படும் குடிமக்களை தான் இந்த அரசு விரும்புகிறது, அதனால் தான் அவர்கள் விரும்பும் கல்விவை வழங்குகின்றது.

 

காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது, அம் மாநில தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பதுதான் வலதுசாரி பரிவாரத்தின் நீண்ட நாள் செயல்திட்டம், அதை இப்போது நிறைவேற்றிவிட்டது பாஜக அரசு, இது தனது இந்து ராஜ்ஜிய கனவு, மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட கம்பெனியின் நலன்களுக்காக மாநிலத்தின் சுய ஆட்சி உரிமைகள் பறிக்கப் படுகின்றன.

ஊடகங்கள் கட்டு படுத்த படுகின்றன, இவைகள் உண்மையான செய்தியை வெளியிட மறுக்கிறது, எதைப் பேச வேண்டும், எதை பேச கூடாது, எதை விவாதிக்க வேண்டும் என்பதை பாஜக தீர்மானிக்கிறது, அதை அப்படியே ஊடகங்கள் செயல்படுகிறது.

இந்த தேசத்தில் இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவ பாசிச கும்பல், பசு பாதுகாப்பு படை என்று சொல்லி மாட்டுக்கறி இருந்ததாக, சாப்பிட்டதாக, என்று கூறி பல முஸ்லிம்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த குண்டர்கள் ‘’லவ் ஜிகாத், கர்வாபசி’’, என்ற பெயரில், காவி பயங்கரவாத தாக்குதல்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்றன, அவர்களின் வாழ்வாதாரங்கள் சூறையாடப்படுகின்றன. இது இப்போது சட்டத்தின் துணைகொண்டு வலதுசாரி பாஜக அரசு நடத்த விரும்புகின்றது. அதாவது, குடியுரிமை திருத்த சட்டம் CAA (2019) தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மூலம். இது இந்திய இறையாண்மைக்கு எதிரான சட்டம். இஸ்ரேலின் ‘அலியாஹ்’ “Aliyah- Law of Return” (திரும்புதல் சட்டம்) சட்டத்தின் மறு வடிவமே இது, உலகின் எப்பகுதியிலிருந்தும் வருகிற யூதர்களுக்குக் குடியுரிமை வழங்கும் இஸ்ரேலின் ‘அலியாஹ்’ எனப்படும் சியோனிசக் கொள்கையின் அடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

 

பாஜக ஆளுகிற மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை, காவல்துறை மூலம் கடுமையாக ஒடுக்குகிறது மாநில அரசு. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 300 இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வந்த குடியிருப்புகளை, கர்நாடக மாநில பாஜக அரசு புல்டோசர் மூலம் இடித்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல, அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கிளப்பிவிட்ட புரளியை, உண்மை என்று எடுத்துக் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர். வங்கதேசம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது, அந்த எளிய மக்களுக்கு, மேலும் இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்களை, உடனடியாக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் காவல்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநில பாஜக அரசு, அவர்கள் அந்த மாநிலத்தின் பூர்வகுடி மக்கள், ஆண்டாண்டு காலமாக அந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்கள், அவர்கள் எங்கே போவார்கள்?  இந்த சட்டம் முற்றிலும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களின் சொத்துக்களை முடக்கப்படுகின்றது, காவல்துறை மூலம் சூறையாடப்படுகிறது, அவர்களுக்கு எதிராக அரசு பயங்கரவாதம் நிகழ்தபடுகின்றது, சுதந்திரம் (ஆஸாதி) என முழக்கமிட்டால் தேசத் துரோக வழக்கு பாயும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்தியநாத் மிரட்டல் விடுகிறார். இது வரை இந்த சட்டத்திற்கு எதிராக போராடிய 27 பேர் போலீஸாரின் கொடூர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் பலவந்தமாக நுழைந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர், மிருகத்தனம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

 “நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி இறுதியில் அதை ஒழித்துக்கட்டினர் பாஸிஸ்டுகள்” என்கிறார் ஜெர்மானியச் சிந்தனையாளர் ஹன்னா அரெண்ட் (Hanna Arendt). இதுதான் இப்போது இந்த தேசத்தில் படிப்படியாக அறங்கேறிக்கொண்டிருக்கிறது.    வலதுசாரி அரசியலை பற்றி இவ்வாறு கூறினார் ராமச்சந்திர குஹா, இந்தியா; “1920-களின் இத்தாலியைப்போலவோ, 1950-களின் அர்ஜெண்டைனாவைப் போலவோ அதன்வழியில் சென்று, வலதுசாரிக் கட்சியால் அரசியல் ஆளப்படுவதும், அதன் தலை வராக வலதுசாரிக் கும்பல் தலைவன் தேர்வு பெறுவதும் – பொதுவிவகாரங்கள் அறிஞர்களாலும், சிந்தனையாளர்களாலும் முடிவு செய்யப்படாமல் குண்டர்களாலும், அவர்களின் வெறுப்புணர்வுகளாலும் தீர்மானிக்கப்படுவதும் நடக்கும்.” (இந்தியா எதை நோக்கி? – ராமச்சந்திர குஹா)

 

 

 

பாசிச அரசின் இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் மன்றத்தில்தான் தீர்வு கிடைக்கும், நீதிமன்றங்கள் முறைகேடான தீர்ப்பே வழங்கும் இந்த ஆட்சியில், பாபர் மசூதி தீர்ப்பு ஒரு உதாரணம், சமூக-அரசியல் சார்ந்த பிரச்சினைகளை ஒருங்கிணைந்த, ஜனநாயக ரீதியான போராட்டம் மூலமே வெல்ல முடியும், ஜல்லிக்கட்டு உரிமையை வென்றெடுத்து போல், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைத்து, பாசிசத்தை வீழ்த்துவோம், இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்.

 

  • நூர் முகமம்து-

News

Read Previous

இராமநாதபுரம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

Read Next

மௌனம் பேசும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *