பள்ளபட்டி மண்ணில் மலர்ந்த இறை ஞான இந்திய சுதந்திர போராட்ட வீரர்..

Vinkmag ad

பள்ளபட்டி மண்ணில் மலர்ந்த
இறை ஞான இந்திய
சுதந்திர போராட்ட வீரர்..

💎பள்ளப்பட்டி ‘மணிமொழி மெளலானா’ M.J.கலீலுர் ரஹ்மான் பாகவீ (ரஹ்)

29 -01 -1905ல் பள்ளப்பட்டியில்
பிறந்தவர்.மணி மொழி
பத்திரிக்கை ஆசிரியர்,
படிப்பை பாதியிலேயே
உதறியவர், 1941 ஆகஸ்ட் 8
முதல் 1945 ஆகஸ்ட் 15
வரை இந்தோ – சீனாவிலே
இருந்து இந்திய சுதந்திரப்போரிலே
பங்கேற்றவர், அவரே
மணிமொழி மெளலானா
என்று அழைக்கப்பட்ட
எம்.ஜே.கலீலுர் ரஹ்மான்
பாகவீ (ரஹ்) அவர்கள்.

இன்றைய வியட்நாமில்
அன்று சைகோன் என்று
அழைக்கப்பட்ட பெருநகரில்
இருந்துகொண்டு இந்திய
சுதந்திரத்துக்காகப் போராடியவர்
‘மணிமொழி மெளலான’
என்று அழைக்கப்பட்ட
எம்.ஜே.கலீலுர் ரஹ்மான்
பாகவீ அவர்களாவார்.
உணர்ச்சிப்பிழம்பாக இவர்
எடுத்துவைத்த கருத்துக்கள்
பலரை விடுதலைப்
போராட்டத்தை நோக்கி
ஈர்த்தன.

மணிமொழி மெளலானா
அவர்கள் “இந்தியாவை
ஆங்கிலேயர் கைப்பற்றியது
முஸ்லிம்களிடமிருந்தாகும்.
ஆகவே ஆங்கிலேயரிடமிருந்து
இந்திய நாட்டை மீட்க
முஸ்லிம்களே முன் நின்று
போராட வேண்டும்”
என்று முழங்கினார். நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ்
தற்காலிக சுதந்திர
இந்தியாவை அறிவிக்கும்
முன்பே சைகோன் நகரில்
“இன்டிபென்டன்ட் லீக் “ என்ற
விடுதலை இயக்கத்தைத்
தொடங்கி நடத்தியவர்
மணிமொழி மெளலானா
அவர்களாவார்கள்.
இந்த ஒரு அரிய பணியில்
அவர்களுடன் இணைந்து
நின்றவர் எஸ். ஏ. நூருத்தீன்
என்பவராவார். இவர்கள்
இருவரும் சைகோனில்
இரகசியமாக நேதாஜியை
சந்தித்துப் பேசிய நிகழ்வும்
நடந்தது. அவர்கள்
நேதாஜியின் மீது மிகுந்த
விருப்பமும் பாசமும்
கொண்டவர்கள். ஒரு
ஜப்பானிய அதிகாரி ஒருவர்
சைகோனில் மெஜஸ்டிக்
ஹோட்டலில் உள்ள ஒரு
தலைவரைக் காண
மெளலானாவை உள்ளே
அழைத்துச் சென்றார்.
அங்கே போன போது தான்
அந்த தலைவர் நேதாஜி
என்று அறிவித்தார்.
நேதாஜியை அன்று சந்தித்த
எட்டு இந்தியர்களில்
மணிமொழியும் ஒருவர்.

பின்னாளில் நேதாஜி
மெளலானாவை ‘மெளலவி
சாஹிப்’ என்றே அன்புடன்
அழைப்பார். நேதாஜி
நெருங்கிய நண்பராகவும்
மொழிப் பெயர்ப்பாளராகவும்
அவர் பணியாற்றினார்.
“மெளலவி சாகிப்” என்று
நேதாஜியால் பிரியமாக
அழைக்கப்பட்ட மணிமொழி
மெளலானா அவர்கள் நேதாஜி ,
இந்தியில் பேசிய வீர
உரைகளை தமிழில் மொழி
பெயர்த்து தொண்டாற்றியவர் ஆவார்கள்.சைகோனில் நேதாஜி
தங்கிய போது அனைத்து பேச்சுவார்த்தைகளிலும்
மணிமொழி மெளலானா
கலந்து கொண்டர். மூன்றரை
வருடங்கள் சைகோன்
ரேடியோவில் விடுதலை
ஆர்வைத்தை தூண்டும்
சொற்பொழிவுகளை செய்தார்.

இந்திய தேசிய இராணுவம்
விழ்ந்ததும். மிஸ்டர் பின்னி
என்ற ஆங்கிலேய இராணுவ
அதிகாரியிடம் அழைத்துச்
செல்லப்பட்ட மணிமொழி
மெளலானாவிடம் வாக்குமூலம்
பெறப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில்
ஜப்பானுக்கு உதவிய சுதந்திர
இந்தியப் படையில் சிலருக்குத் தலைமை
தாங்கினார் என்ற குற்றச்சாட்டு
மணிமொழி மெளலானா
அவர்கள் மீது ஆங்கில அரசால் சுமத்தப் பட்டு, அவருக்காக
ஒரு தூக்குக் கயிறு
காத்திருந்தது. ஆனால்
தண்டனை குறைப்பாக
அவர்கள் நாடு கடத்தப்
பட்டார்கள்

அஜாதி ஹிந்த் சர்க்காரில்
மந்திரியாகப் பணியாற்றிய மூ. ஹகீம் கனியுடன்
‘மலாயா நண்பன்’ என்ற
தினசரியில் துணை
ஆசிரியராகப் பணியாற்றி
பல ஊர்களில்
சொற்பொழிவாற்றி 1946
டிசம்பர் 5ல் ரஜிலா என்ற
கப்பலில் சென்னை வந்தார்.

தனது தாய் மீது மாறாத அன்பு
உடையவராக இருந்தார்
மணிமொழி மெளலானா
அவர்கள். நாடு கடத்தப்பட்டு
1946 – ல் நாட்டுக்குத்
திரும்பிய மணிமொழி
மெளலானா அவர்கள் ஏழு
ஆண்டுகளுக்குப் பிறகு தனது
தாயாரை சந்திக்கப்போகிறோம்
என்கிற ஆவலுடன் நாடு
திரும்பினார். ஆனால் தாய்
மண் ‘பள்ளபட்டி’ மிதித்தபோது, தாயார் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிய செய்தியை அப்போது அறிந்தார்கள்.
ஆனாலும் நாட்டுக்காக தான்
செய்த தியாகங்களுக்காத்
தான் மனம் மகிழ்வதாகவே
மணிமொழி மெளலானா
அவர்கள் கூறினார்கள்.
நேதாஜியின் படைவரிசையில் நாட்டு விடுதலைக்கு
வீட்டையும் மறந்து தியாகம்
செய்தவர் மணிமொழி
மெளலானா மீராஜ்ஜி
M.J.கலீலுர்ரஹ்மான்
பாகவீ (ரஹ்) அவர்கள்..

* மணிமொழி மெளலானா
அவர்கள் பயன்டுத்திய,
எழுதிய பல அறிய நூல்கள்
சென்னை பூந்தமல்லியில்
உள்ள ‘காஷிஃபுல் ஹுதா’
மதரஸா நூலகத்தில்
உள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.

* மீரான்ஜ்ஜி வகையரா

* இவர்களுக்கு ஒரு மகளும்,
இரண்டு மகன்களும் உள்ளனர்.
மகள் மறைந்து விட்டார்.

மூத்த மகன்: நஜிபுர் ரஹ்மான்
என்ற மௌலானா.
பள்ளப்பட்டியில் உள்ளார்
( பள்ளபட்டி நகர ஐக்கிய ஜமாத் மற்றும்மேற்கு பள்ளிவாசல்
நிர்வாக குழு உறுப்பினர்)

இளையவர்: கலிகுஜ்ஜமான் சென்னையில் உள்ளார்.

* பள்ளபட்டியில் மறைந்த
மணிமொழி மெளலானா
பெரிய பள்ளிவாசல் மதரஸா
வளாகத்தில் அடக்கம்
செய்யப்பட்டுள்ளார்.

* பள்ளப்பட்டி பேருந்து
நிலையத்தில் இவர்களின்
நினைவு தூண்
நிறுவப்பட்டுள்ளது..

News

Read Previous

கலைஞருக்கு அஞ்சலி

Read Next

செந்தமிழ் நாடெனும் போதினிலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *