”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”?

Vinkmag ad

”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”?
……………………………………………

நேரம் விலை மதிப்பில்லாதது. இது அனைவருக்கும் பொருந்தும்.

குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள் அவர்கள் நேரத்தை சரியாக நிர்வகிக்காமல் போகும்போது, அவர்களோடு சேர்த்து அவர்களின் தொழிலாளர்களும் இழப்பை அடைகிறார்கள்..

சரி.,நேரத்தை எப்படிகையாள்வது..?

உங்கள் வியாபாரத்தின் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை திட்டமிடுங்கள் .

உங்கள் வியாபார இலக்குகளை அடைவதற்கான செயல்பாடுகளில் உங்கள் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

வருவாய் ஈட்டுவதும் தொழிலை வளர்ப்பதும் தான் உங்கள் முதல் வேலை. ஆகையால் உங்கள் எல்லா செயல்களும் இந்த குறிக்கோளை நோக்கியே இருக்க வேண்டும்.

நாள் முழுவதும் நீங்கள் செய்ய இருக்கும் வேலையை பட்டியலிடுங்கள்.

முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

“பிஸியாக இருப்பது” என்ற மாயையை வழங்கும் இந்தவிதமான வேலைகளை பிறகு கவனித்து கொள்ளலாம்.

நீங்கள் முன்னுரிமை கொடுக்கும் வேலைகளை குறித்து வையுங்கள்.

வேலையை முடித்தவுடன் உங்கள் குறிப்பிலிருந்து அதனை நீக்கி விடுங்கள்.

இது வேலையை முடித்த திருப்தியையும் அடுத்த வேலையை தொடர்வதற்கு ஒரு உந்துதலையும் கொடுக்கும்.

ஆம்.,நண்பர்களே..

உங்கள் வியாபாரத்திற்கு நடுவில், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

சரியான அளவு தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள உதவும்

கூர்மையான மூளை எப்போதும் அதிக செயல் ஆற்றலுடன் இருக்கும்.,மற்றும் அது உங்கள் பொன்னான நேரத்தையும் மிச்சமாக்கும்.🌹🙏🌷

News

Read Previous

ரீமா அக்குபஞ்சர் அகடமி

Read Next

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *