தோல்வி தரும் பாடம்..

Vinkmag ad

” தோல்வி தரும் பாடம்..”
…………………………..

வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், ஒரு வருடத்தின் பருவங்கள்..அது போலத்தான் மனித வாழ்விலும் சுகமும், துக்கமும் வந்து போகும்.

முள் செடியின் கீறல்களை சகித்துக் கொள்ளா விட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?.
கல்லில் கால்படாமல், முள்ளில் வதை படாமல். ஒருக்காலும் முன்னேற்றம் அடைய முடியாது..

உயர்வின் உச்சியிலே ஒளி வீசிக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோம்.,

ஆனால் அந்த நிலைக்கு உயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்த தொடர் முயற்சிகளையும் எண்ணிப் பார்ப்பது இல்லை.

எத்தனையோ கல்லடி, சொல்லடி, ஏச்சுக்கள்,ஏளனம் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும், நம்பிக்கையோடும், உறுதியோடு சமாளித்ததால்தான் இன்று பலர் வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார்கள்..

சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும்.அதுபோல நம்மை வருத்தும் துயரம் எல்லாம் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முட்டுக்கட்டைகளை சாதுரியமாக எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்..

ஒரு முறை தாமஸ் ஆல்வா அவர்களை சந்தித்த நண்பர்கள் பலர் இவரது வெற்றியைப் பாராட்டினார்கள்.

அவர்களில் ஒருவர் எடிசனிடம்,

”நீங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளைச் செய்து முடிவில்தான் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
1000 முறை தோற்றபோது உங்களது மனம் மிகவும் வருத்தப்பட்டிருக்கும்.

தோல்விகள் உங்கள் முயற்சிகளை தடை செய்தி இருக்கும் அல்லவா” என்று கேட்டார்.

தாமஸ் ஆல்வா எடிசன் சிரித்துக்கொண்டே அந்த நண்பருக்குப் பதில் தந்தார்.

”நான் எனது தோல்விகளைப்பற்றி கவலைப்படவே இல்லை. எனது சோதனைகள் தோல்வியடையும் போதெல்லாம் நான் ஒரு சோதனையை எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்துகொண்டேன்.

அந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அந்தத் தோல்விகள்தான் எனக்கு தொடர்ந்து முயற்சி செய்யும் சக்தியைத் தந்தன. இப்போது நான் வெற்றி பெற்றிருக்கிறேன்” என்று பதில் தந்தார்.

ஆம்.,நண்பர்களே.,

தோல்விகளும் வெற்றியை போல் மனிதர்களுக்கு வாழ்க்கையில்அவ்வப்போது ஏற்படும் அனுபவங்கள்.

தோல்வியை சவால்களாக பாவித்து அதை எதிர்கொண்டு தன்வசப்படுத்தி வெற்றிகண்டு வாழ்வதில்தான் வாழ்க்கையில் சுவாரசியமே அடங்கியுள்ளது–(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி…)…..💐💐💐💐

News

Read Previous

உலக கவிதை தினம்

Read Next

விடைகோடு கொரோனா……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *