தொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்!

Vinkmag ad

தொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்!

பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகவும்,முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகச் சிறந்த புலமையுடையவர். திருக்கோவில்களிலும், தமிழர்தம் வாழ்வியல் சடங்குகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று களப்பணியாற்றிய பெருமகனார். தம் எண்பத்தைந்தாம் அகவையிலும் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தம் அறிவார்ந்த உரையின் வழியாகத் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு உழைத்து வருபவர். தொல்காப்பியம் குறித்து இவர் ஆற்றிய உரைகளை மூன்று பிரிவுகளாகப் பகுத்து, காணொளியாக முனைவர் மு.இளங்கோவன் தம் உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் வெளியிட்டுள்ளார்.

தமிழின் சிறப்பை அறிய விரும்புபவர்களுக்குத் தமிழ் இலக்கண, இலக்கியம் குறித்த அறிமுகம் இருப்பது நன்று. அவ்வகையில் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் குறித்த அரிய சிறப்புப் பேருரையினைக் கேட்டு மகிழுமாறு தமிழ் ஆர்வலர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் அறிமுகம்

https://www.youtube.com/watch?v=_mfnvLKEnd0

தொல்காப்பியம் சொல்லதிகாரம் அறிமுகம்

https://www.youtube.com/watch?v=IacWD6zV1ro

தொல்காப்பியம் பொருளதிகாரம் அறிமுகம்

https://www.youtube.com/watch?v=8AHc5oOcTuU

News

Read Previous

நல்ல நண்பர்கள் தேவை!

Read Next

குடியிருந்த கோவில் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *