திருக்குறளை தினம் ஓர் ஓவியமாக வரையும் பெண்

Vinkmag ad

thirukkural - Artist Iyal2.jpg

https://www.facebook.com/Dinamalardaily/videos/902798626894771/

மற்றும் 

பிபிசி 

thirukkural - Artist Iyal.jpg

https://youtu.be/YIuFej6G5ak

திருக்குறளை தினம் ஓர் ஓவியமாக வரையும் பெண்

 

source – https://www.bbc.com/tamil/india-53702466

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்த்தவர் இளம் ஓவியர் சௌமியா இயல். இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிருக்கிறார்.

அனிமேஷன் பயின்ற இவர், அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப தளங்களில் பணியாற்றிருக்கிறார். இவருக்குச் சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு இருப்பதால், ஒருபுறம் ஓவியம் வரைவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழையும், ஓவியத்தையும் ஒன்றிணைத்து தமிழின் அடையாளமாகத் திகழும் ஓவியங்களை உருவாக்க விரும்பினார். அதற்கான முதல் முயற்சியாக, திருக்குறள் தொடர்பான ஓவியங்களை வரையத் தொடங்கினார் இயல். திருக்குறளில் உள்ள 1330 குறளையும், 1330 ஓவியங்களாக வரைந்து, அதனை 1330 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டார்.

கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கிய இந்த முயற்சியில், நாள்தோறும் ஒரு குறள் வீதம் இதுவரை 218க்கும் அதிகமான திருக்குறள் ஓவியங்களை வரைந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தவறாமல் ஒரு திருக்குறள் தொடர்பான ஓவியம் வரைவதன் மூலம், அனைத்து திருக்குறளுக்கும் 2023 ஆகஸ்ட் 23ஆம் தேதியோடு இப்பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

தினம் ஒரு திருக்குறளை அதன் பொருளுக்கேற்ப உருவகம் செய்து ஓவியமாக்கி வருகிறார் சௌமியா இயல்.

News

Read Previous

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

Read Next

சத்தியம் [Ethics] என்பதற்குத் தமிழ்ச்சொல்

Leave a Reply

Your email address will not be published.