தலைகுனிவு

Vinkmag ad

”தலைகுனிவு”..
………………………..

போராடத் துணிந்தவர்களுக்குத்தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, ‘நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்’ என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்..

அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைகுணிவும், அவமானமும் ஏற்படுகிற போதுதான். அதனால் அவமானத்தைச் சேமித்து வைக்க வேண்டும்.

அதுதான் வெற்றிக்கான உந்து சக்தி. அவமானத்தைப் போற்ற வேண்டும். அதுதான் உங்கள் லட்சியக் கனவுகளைத் திறக்கும் சாவி.

அவமானம் ஒரு தீ.அதை அணையவிடக் கூடாது. ஒவ்வொரு அவமானமும் ஒரு போதிமரம். அதுதான் வெற்றி என்ற கனியைத் தரும்.

ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு அரசு அதிகாரி ஒருவர், சில அதிகாரிகள் முன்னிலையில் அவரை குரங்கு மூஞ்சி என்று திட்டி விட்டார்.

ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு தன்னைத் திட்டியவரைக் கடுமையாகத் தண்டிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக அவருக்கு பல நல்ல பொறுப்புகளை கொடுத்தார் லிங்கன்.

இதற்கு என்ன காரணம் என்று கேட்க, அவர் என்னை அவமானப்படுத்தியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. எனினும் அது என்னுள் காயத்தை ஏற்படுத்தியது.

காயத்தை ஆற்ற என்னை மேலும் தகுதியுள்ளவனாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அதற்கான முயற்சியைத் தொடங்கினேன்.
உழைத்தேன். அந்த முயற்சியாலும், உழைப்பாலும் இந்தப் பதவியை இப்போது அடைந்து உள்ளேன்.

இந்தப் பதவியை அடைய அவரும் ஒரு காரணம். என் நன்றிக் கடனை அவருக்குச் செலுத்த ஆசைப் பட்டு இந்தக் கூடுதல் பதவி களை வழங்கினேன் என்றார்.

ஆம்.,நண்பர்களே..,

எவ்வளவு பெரிய கரிய இருட்டையும் ஒரு சின்ன விளக்கின் வெளிச்சம் நீக்கி விடும். அந்த விளக்கின் வீரியத்தை நாம் கொள்ள வேண்டும்.

இனியும் அவமானத்தைக் கண்டு ஏன் சோர்ந்து போக வேண்டும்?

சாதனைகளுக்கு எண்ணங்கள்தான் எரிபொருள். அவமானங்களை சேமியுங்கள். அதுவும் வெற்றிக்கான மூலதனம்தான்..(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி…)

News

Read Previous

வாழ்க்கை வரலாறுகள்

Read Next

ஓய்வில் உற்சாகம் இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *