தமிழகத் தொல்லியல் கழகத்தின் வரலாறு

Vinkmag ad

ஆவணம்

http://www.aavanam.org

 

 

தமிழகத் தொல்லியல் கழகத்தின் வரலாறு

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், கோயிற்கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் பிற கலைகளில் ஆர்வம் மிக்க ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் தாங்கள் கண்டுபிடித்தவற்றை செய்தித்தாள்களிலும் பிற இதழ்களிலும் அங்கொன்றும் இங்கொன்றும் எழுதிய காலகட்டத்தில் இச்செய்திகள் அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதற்காகவும் ஆர்வலர்கள் பலர் தாங்கள் கண்டுபித்தவற்றை செய்தித்தாள்களில் எழுதிய போக்கை மாற்றும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட ஓர் அமைப்பு தேவை என்பதைக் கருத்தில் கொண்டும் தமிழகத் தொல்லியல் ஆய்வுக் கழகம் பேராசிரியர் எ.சுப்பராயலு, மறைந்த பொறியியல் அறிஞர் கொடுமுடி சண்முகம் டாக்டர் கலைக்கோவன் பேராசிரியர் ப. சண்முகம், புலவர் செ. இராசு, பேராசிரியர் இராஜன், முனைவர் சு. இராசகோபால், முனைவர் வேதாசலம் முனைவர் சொ. சாந்தலிங்கம், முனைவர் சு. இராசவேலு, முனைவர் நளினி ஆகியோர் அடங்கிய குழுவால் 1991-1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்துறைகளில் ஆர்வம் மிக்க ஆர்வலர்கள் பலரும் தமிழகத்தொல்லியல் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

தொடக்க காலத்தில் ”ஆவணம்” என்ற இதழ் ஆண்டுக்கு இரண்டு இதழ்களாகப் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வெளிவரத் தொடங்கியது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பொறுப்பை முனைவரும் கண் மருத்துவருமான டாக்டர் கலைக்கோவன் ஏற்றுக்கொண்டுத் திறம்பட செயல்பட்டார். அவருடன் இணைந்து டாக்டர் நளினி அவர்களும் தொடக்க காலத்தில் ஆவணம் இதழ் வெளிவர உதவினார்.
1993 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் ஆய்வுக் கழகத்திலிருந்து பிறிந்த இக்கழகம் புதிய பெயரில் தமிழகத் தொல்லியல் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்று ஆவணம் இதழ் வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இன்று ஆண்டிற்கு ஒரு இதழ் என்ற வகையில் இவ்வாய்விதழை வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் ஆவணம் மூன்று என்ற இதழ் தமிழகத் தொல்லியல் கழகம் வெளியிட்ட முதல் இதழாகும். ஆவணம் 1 மற்றும் ஆவணம் 2 ஆகிய இதழ்கள் தமிழகத் தொல்லியல் ஆய்வுக்கழகம் என்ற பெயரில் 6 திங்களுக்கு ஒரு இதழ் என்ற வகையில் வெளிவந்த நிலை மற்றப்பட்டு இனி ஆண்டுக்கு ஒரு முறை கருத்தரங்கம் நடத்தி ஆவணம் இதழ் பதிப்பித்து வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
மூன்றாவது இதழ் தமிழகத் தொல்லியல் கழகம் முதல் கருத்தரங்கை சிறப்புடன் நடத்திய காரைக்குடியில் நடத்தவெளியிட்டது. இவ்விதழின் முதல் பதிப்பாசிரியராக பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் செயல்பட்டார். தமிழகத் தொல்லியல் கழகம் 1993 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடத்தி ஆவணம் இதழை வெளியிட்டு வருகின்றது. தொடக்க காலத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் என்ற நிலை இருந்தது உறுப்பிணர்கள் எண்ணிக்கை அதிகமான காரணத்தாலும் கட்டுரைகள் படிக்க ஒரு நாள் போதவில்லை என்ற குறையை நீக்கியும் இரண்டு நாள் கருத்தரங்கமாக தற்பொழுது தொடர்ந்து தனது 24 ஆவது கருத்தரங்கை தஞ்சாவூரில் நடத்துகிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் முக்கிய குறிக்கோளான தமிழக வரலாற்றை வளப்படுத்தும் அடிப்படைச் சான்றுகள் குறித்து பரிமாற்றம் செய்யும் வகையில் ஆவணம் தொடர்ந்து 25 இதழ்களாக வெளிவந்துள்ளது.

 

இவ்விதழ்களில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள், தொல்பொருள்கள் தொன்மையான ஊரிருக்கைச் சின்னங்கள், கலைப்பொருள்கள், காசுகள், செம்பு- ஓலைப்பட்டயங்கள் போன்றவை முதன்மையாக விளங்குகின்றன.
இதுவரை இருந்த தலைவர்கள் தொடக்க காலத்தில் பதிப்பாசிரியர் மற்றும் பதிப்புக்குழு மட்டுமே ஆவனம் இதழ்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றது. கருத்தரங்கு மற்றும் பிற நிகழ்வுகளை இக்கழகத்தை உருவாக்கியவர்களுள் இளைஞர்களாக இருந்தவர்கள் கவணித்துக் கொண்டனர். அவ்வகையில் இக்கழகத்தின் முதல் செயலராக பேராசிரியர் கா.இராஜன் அவர்களும் இணைச் செயலராக பேராசிரியர் சு.இராஜவேலு அவர்களும் செயல்பட்டன.

 

தமிழகத் தொல்லியல் கழகம்,
கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை,
தமிழ் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
தமிழ்நாடு.
இந்தியா.
பின்கோடு - 6130 010.

மின்னஞ்சல்: editoraavanam@gmail.com, editor@aavanam.org

News

Read Previous

இளைஞர்களிடம் பேஸ்புக், வாட்ஸ்அப் மோகம் அதிகரிப்பு

Read Next

கவிஞர் குட்டிரேவதியுடன் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published.