தன்னம்பிக்கை

Vinkmag ad

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது

வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது

வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது

அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது

அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது

வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது

வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது

உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது

தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது

அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது

தங்கள் தகுதிக்கும்,திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது

தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது

சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது

விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது

அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது

குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது

கடமைகள் காத்துக் கிடக்க,பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது

நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது

அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது…

ஆம்…தன்னம்பிக்கையே வாழ்க்கை…

News

Read Previous

உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..

Read Next

பேனா

Leave a Reply

Your email address will not be published.