சோறு உண்ணலாம் வாங்க…….

Vinkmag ad

சோறு உண்ணலாம் வாங்க…….

 unnamed (1)

 

 



சோறுஇன்று தமிழர்கள் மறந்துவிட்டமறக்கடிக்கப்பட்ட உயிர்ச் சொல். 

ஆம் இதுதான் தமிழர் அடையாளம். இதுதான் தமிழனின் முதல் உணவு.

வந்தவர்களை, சோறு உண்ணுட்டு போகாலம் இருங்க என்று விருந்தோம்பும் பண்பாட்டில் இருக்கும் தமிழர் தொல் குடி தொலைத்து விட்ட உயிர்ச் சொல் இதுவே.

சோழ நாடு சோறுடைத்துபாண்டி நாடு முத்துடைத்துசேர நாடு தந்தமுடைத்து என்ற பண்பாட்டு நெறிக்கு உரிமை கொண்ட ஒரே இனம். 

சோறு, நாம் சொல்லக் கூசிய சொல்லாக மாறியது எப்போது ??

சோறு என்பதனை சாதம் என்று மேம்படுத்திக் கொண்டு, பிறகு ரைஸ் என்று இன்று மழுங்கிய தமிழனுக்கு சோறு என்பதனை சொல்லித் தர வேண்டிய அவசியம் வந்து விட்டது.
வெங்காய சீர்திருத்தம் நடந்த நாட்டில் இன்று வெங்காயத்தையும் ஆணியன் என்று தலையில் ஆணி அடித்துச் சொல்கின்றனர். 

 

உணவகங்களில் ரைஸ், ஆணியன் என்று உணவகப் பணியாளர்கள் சொல்லும் போது காது புளித்தாலும், அது வீட்டிலேயே கைவிடப்பட்டதின் விளைவு. கூடவே மேட்டுக் குடியினராலும், வடுக ஊடகங்கள் சொல்லும் ரெசிப்பி, கிரேவி, சைட் டிஷ் போன்ற மொழியழிப்பையும் நாம் தடுக்க வேண்டும். இல்லையேல் நாம் அழிந்துகொண்டிருக்கின்றோம் என்பது மட்டும் உறுதி செய்யப்படும்.
சோறு உண்ணலாம் வாங்க, சோறு ஆக்கலாம் வாங்க, என்று கைவிடப்பட்ட நம் உயிர்ச் சொல்லை உரக்கச் சொல்வோம் வீடுகள் தோறும் வாருங்கள். இன்று இல்லையேல் இனி என்றும் இல்லை. களவாடப்பட்டது நம் பண்பாடு. அழிக்கப்பட்டது நம் மொழி என்பதை உணர்வீர்.

நித்தம் நித்தம் ……….. நெல்லுச் (நெல்லி) சோறு,
நெய் மணக்கும் கத்திரிக்காநேற்று வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதயா…
நெஞ்சுக்குள்ள அந்த நினைப்பு இன்னும் இருக்குதையா…..

 

அன்புடன்,
காசி விசுவநாதன்.
 ” வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு “

News

Read Previous

மலேசியா : அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில்

Read Next

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *