சுயநலமும்- பொதுநலமும்

Vinkmag ad

” சுயநலமும்- பொதுநலமும்”..
…………………………….

சுயநலம் – பொதுநலம் என்று இரண்டாகப் பார்க்கும் எண்ணம் தோன்றுவதற்கு, நம் மனதில் குடி கொண்டிருக்கும் ஆசைகளே அடிப்படை.

எங்கே ஆசை நிறைவேறாமல் போகுமோ என்ற பரபரப்பில் அதை நிறைவேற்றும் உந்துதலில் சுயநலம் விரிவு அடைகிறது.

சுயநலம் எதிலும் இருக்கக் கூடாது, பொதுநலம் மட்டும் இருக்க வேண்டும்!

ஒருவருக்காக மட்டும் செய்வது அது சுயநலம்!

எல்லோரும் பலன் அடைய வேண்டும் என்று நினைத்துச் செய்வது அது பொதுநலம்!

சூரியன் எல்லோருக்கும் ஒளி வழங்குகிறான். சந்திரனும் அப்படித்தான். காற்றும் மழையும் எல்லோருக்கும் பொதுவாகச் செயல்படுகிறது.

வாழ்க்கையின் தத்துவமே பொதுநலன் எனும் குறிக்கோளில் செயல்படுகிறது. சிந்தனை விரிவடையப் பொதுநலன் பயன்படும்.

தனி மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்கு, அவனது பொதுநல அக்கறையே அளவுகோள்.

ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் மாலை நேரங்களில் தனியாக படித்துக் கொண்டு இருந்தனர்.

அதில் இரண்டு மாணவர்கள் மிகப் புத்திசாலிகள்.
ஒரு முறை தங்களில் யார் மிகவும் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. செய்தி ஆசிரியருக்குத் தெரிய வந்தது.

அவர் அந்த இரண்டு மாணவர்களை மட்டும் அழைத்து இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. .
அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.

அந்த இரண்டு மாணவர்களும் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள் செடிகள் சுற்றி நின்றன.

முதல் மாணவன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தைத் தொட்டான்.

பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் ஆசிரியருக்கு முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான்.

அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினார்கள்.

மாணவனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்து ஆசிரியரிடம் கொடுத்தான்.. ஆனால் அவன் வருவதற்கு கொஞ்சம் காலதாமதாகி விட்டது..

இப்போது ஆசிரியர் முதல் மாணவனிடம், இரண்டாவதாக வந்த மாணவன் தான் அதிபுத்திசாலி என்றார்.

முதலாமவன் கோபப்பட்டான்.அய்யா.. இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படிச் சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.

ஆசிரியர் அவனிடம், ‘ நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது.

ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.

இரண்டாமவனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும்.

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.

ஆம்.,இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்.
ஆம்.,நண்பர்களே.

ஆசையற்றத் தெளிவான மனம் பொது நலனில் அமைதி காணும். அமைதி வேண்டுமா.? அதற்குப் பொதுநலனே மருந்து…

பொதுநலன் ஆசையில் ஈர்ப்பு இல்லாத மனநிலையைத் தோற்றுவிக்கும். அதுதான் உண்மையான மகிழ்ச்சி………….

(ஆக்கம்.உடுமலை.சு.தண்டபாணி)

News

Read Previous

கொரோனா ஆத்திசூடி

Read Next

ஆட்கொல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *