சிறுகதை பயிற்சிப்பட்டறை

Vinkmag ad

சிறுகதை பயிற்சிப்பட்டறை:

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் இலக்கிய பிரிவான கூடு அமைப்பின் சார்பாக இனி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் சிறுகதை பயிற்சிப்பட்டறை நடத்தவிருக்கிறது . இந்த ஆண்டு ஏற்காடு மலையில் மிக ரம்மியமான காட்டுப்பகுதியில் சிறுகதை பயிற்சிப்பட்டறை நடக்கவிருக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிப்பட்டறையில் நண்பர்கள் தங்குவதற்கும், உணவு ஏற்பாடு உள்ளிட்ட செலவுகளுக்கும் சேர்த்து பயிற்சிக்கட்டணமாக 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் சினிமா இரண்டும் சந்திக்கும் புள்ளி இந்த கதைகள்தான். கதைகளை எப்படி உருவாக்குவது, கதைகளை எழுதுவதற்கான நுட்பங்களை எப்படி அறிந்துக்கொள்வது, மொழியை எப்படி சரியாக பிழையில்லாமல் பயன்படுத்துவது, மொழியை எப்படி ஆள்வது உள்ளிட்ட சிறுகதை எழுதுவது சார்ந்த பல்வேறு விஷயங்களை நண்பர்கள் இந்த பயிற்சிப்பட்டறையில் தெரிந்துக்கொள்ளலாம். சினிமா மட்டுமில்லாது படிப்பதில் ஆர்வத்திருக்கும் வாசகர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொள்ளலாம்.
14-04-2018 & 15-04-2018 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை)
 
இடம்: ஏற்காடு, பயிற்சிக்கட்டணம்: 1500/- (தமிழ் ஸ்டுடியோ உறுப்பினர்களுக்கு: 1200) உணவு, தங்குமிடம் உட்பட.
பயிற்றுவிப்பவர்கள்:
 
எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் அழகிய பெரியவன்
எழுத்தாளர் & கவிஞர் தமயந்தி
எழுத்தாளர் & மொழியாளுநர் என்.சொக்கன்
நண்பர்கள் பியூர் சினிமா புத்தக அங்காடியில் பணம் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களை மட்டுமே சேர்க்கவிருக்கிறோம் என தமிழ் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. எனவே முதலில் வருபவ்ரக்ளுக்கே முன்னுரிமை. விரைவாக பணம் செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
முன்பதிவிற்கு: 044 42164630 , 9840644916


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com

News

Read Previous

தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018

Read Next

சேமுமு: அமீரக வருகை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *