சினிமாவும் சித்தாந்தமும்

Vinkmag ad

சினிமாவும் சித்தாந்தமும்
இந்தியச்சினிமா வரலாறு 1896-ல் லூமியர் சகோதரர்கள் பிரான்ஸ் நாட்டில் நிகழ்வின் பின்னர் பாம்பேயில் 1899-ல் தொடங்குகிறது.

ஹரிச்சந்திரபட்வேகிகர் என்பவர் 1899-ல் இந்தியாவின் முதல் குறும்படத்தின் முதல் மைல்கல் அங்கு தான் நடப்பட்டது.

பின்னர் 1913-ல் ராஜஹரிஸ்சந்திரா என்ற முழுநீலா முதல் மௌனப்படத்தை னூரனெசையத புழஎiனா Phயடமந-என்பவர் அதாவது தாதா சகிப் பால்கே எனன அiவைராலும் அழைக்கப்பட்;டவர் தயாரித்து வெளியிட்டர்
1930-களில் தொழில் துறையில் நிகழ்ந்த மகத்தான மாற்றங்களினால் நிகழ்ந்தன.1931-ல் இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் அராஆர் டர்பசிர் ஐராணி (யுசனநளாசைஐசயni)என்பவர் இயக்கத்தில் வெளியானது.
அதே ஆண்டு வங்காள மொழியில் ஐPமை சாஸ்தி(லுரஅயi ளாயதவாi) தெழுங்கு மொழியில் பக்தப்பிரகலாதாஇதமிழில் காளிதாஸ் என்ற பெயரில் படங்கள் வெளியாயின.

1931 முதல் வசனங்களுடன் கூடிய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
1939-ல் மெட்ராஸ் சட்டமன்றம் ஒப்புதல் அளித்த ‘பொழுதுபோக்கு வரிச்சட்டம் 1939’ அக்காலத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரைப்படங்களின் பார்வையாளர் வட்டமும் பெரிதாக இருப்பதாகக்கருதப்படுகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் வாழும் தமிழரின் தமிழ்த்திரைப்படங்கள் உடனுக்குடன் கேரளம்இஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேரடியாகவோ மொழிமாற்றியோ காண்பிக்கப்படுகின்றன.
1930 கள் – ஆண்டுக்குச்சராசரி – 22.5 திரைப்படங்கள் வெளியீடு
1940 கள் – ஆண்டுக்குச்சராசரி – 22.1 திரைப்படங்கள் வெளியீடு
1950 கள் – ஆண்டுக்குச்சராசரி – 32.6 திரைப்படங்கள் வெளியீடு
1960 கள் – ஆண்டுக்குச்சராசரி – 43.0 திரைப்படங்கள் வெளியீடு
1970 கள் – ஆண்டுக்குச்சராசரி – 62.5 திரைப்படங்கள் வெளியீடு
1980 கள் – ஆண்டுக்குச்சராசரி – 104.6 திரைப்படங்கள் வெளியீடு
1990 கள் – ஆண்டுக்குச்சராசரி – 101.2 திரைப்படங்கள் வெளியீடு

தமிழரின் அன்றாடவாழ்விலும் ஆர்வங்களிலும் தமிழ்த்திரைப்படத்துறை ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது.தமிழ்த்திரைப்படத் துறையைச் சார்ந்து பல தொலைக்காட்சியின் இதழ்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழ்த்திரைப்படங்கள் ஊடாக நாட்டு விடுதலைக்கருத்தின் சமூக சீர்திருத்தக் கருத்;துகள்இஅரசியல் இயக்கங்களின் முழக்கங்கள் ஆகியவை மிகவும் வெற்றிகரமாக பரப்பப்பட்டுள்ளன. மேலை நாடுகளில் இருப்பது போல் வணிகரீதியில்.தனித்தியங்கும் இசைஇநடனஇகலை முயற்சிகள் தமிழ்நாட்டின் மிகக்குறைவு என்பதால்இதமிழ்த்திரைப்படத்துறை தமிழ்நாட்டின் வாழ்க்கைமுறைஇ கயளாழைn இ கலையார்வம் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.எனவே ‘சே சே’வோண்டாம் எனத் தமிழர் சினிமாவைப் புறந்தள்ளமுடியாது.
அவ்வகையில் தமிழர் வாழ்வியலில் தவிர்க்க இயலாது பங்குவகிக்கும் சினிமா சொல்லும் சித்தாந்தங்களை இங்கு காண்போம்.
சித்தாந்தம் என்றால் என்ன? எத்துணையோ அறிஞர்கள் எவ்வளவோ விளக்கங்களைத்தந்திருக்கலம் சினிமா சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா?
“தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்-அது
தேரியாமல் போனாலோ வேதாந்தம்”
தமிழ்சினிமாக்களின்
கதைகள் சொல்லும் சித்தாந்தம்
காட்சிகள் சொல்லும் சித்தாந்தம்
வசனங்கள் சொல்லும் சித்தாந்தம்
பாடல்கள் சொல்லும் சித்தாந்தம்
என வகைப்படுத்தி ஆராயலாம்இ காலச் சுருக்கம் கருதி ஈண்டு சினிமாப்பாடல்கள் வழி அறியலாகும் சித்தாந்தக் கருத்துகளை மட்டும் இனிக் காணவிழைவோம்.

உலகின் இயங்கு தத்துவம்
உலகின் இயக்கம் எதனால் என்பதனை “சுழன்றும் ஏர்பின்னது உலகம்” என்று கூறி திருவள்ளுவர் துவக்கிவைக்கிறார்.
இதனையே பட்டுக்N;காட்டை கல்யாணசுந்தரனார் “ஏற்ற முன்னா ஏற்றம் இதிலேயிருந்து முன்னேற்றம்” என்று தொடங்கி
“உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே” என்று அரசிளங்குமரி என்ற திரை படத்தில் இடம் பெறும் பாடல் வழி வலியுறுத்துகிறார்.
சிந்தித்துப்பார்
உன்னையே நீ அறிவாய் எனக்கூறி கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடிஸ் தொடங்கி வைத்த தத்துவப்பாதையை சினிமாப்பாடல்களும் வழிமொழிகின்றன.
சிந்தனை செய்மனமே செய்தால்
தீ வினை அகன்றிடுமே….சிந்தனை செய் மனமே
என விளிப்பதோடு நில்லாமல்…
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து – தவறு
சிறிது இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா –அது
திரும்பவும் வராமே பாhத்துக்கோ –என்று
வாழ்க்கையில் தடுமாற்றங்கள் வரும் போது தடம்மாறாமல் காப்பது நாம் சிந்தித்து எடுக்கும் முடிவுகளே என்பதைப் பாடல் வலியுறுத்துகிறது.
அதனோடு திருடாதே பாப்பா திருடாதே –என விளித்து வாழ்வில் விழுமியங்களைக் கற்றுத்தரும் பாடலாகவும் இதனைப் பட்டுக்கோட்டையார் இல்லை.. பட்டுக்கோட்டையார் படைத்திருக்கிறார் அதனோடு அமையாது “திட்டம் போட்டு திருடற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது – அதைச்
சட்டமும் போட்டுத் தடுக்கிறக்கூட்டமும்
தடுத்துக்கொண்டே இருக்குது.
திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது” என
உளவியல் ரீதியாகவும் விளக்கம் தற்றுவிட்டு கம்யூனிசக் சித்தாந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதையும் கட்டியங்கூறுகிறார்.
“கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்க அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாப் போனால்
பாதுக்கிற வேலையும் இருக்காது”
என மிகப்பெரிய அரசியல் சீர்திருத்தங்களை தனக்குள் பொதிந்து நிற்கும் வாமன அவதாரப் பாடல் இது எனில் மிகையாகாது.

பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்
வள்ளுவ பேராசானின் உயர்ந்த தத்துவத்தை இரும்புத்திரைப்பாடல் நமக்கு எடுத்து இயம்புகிறது.
மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
வள்ளுவப் பெருமான் மெல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை
உழைப்பை மதித்து பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்
அண்ணன் தம்பியால் அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கேற்றிடுவோம்இ
என்ற பாடல் உலகில் சமாதானம்இசகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்க உதவும் சமதர்மப் பாடல்

முரட்டு உலகம்
உலக மக்கள் நம்மைச் சுற்றியுள்ளவர் நன்மை பாதி தீமை பாதி கலந்து செய்த கலவையாக உள்ளனர். இவ்வுலகில் யார் எப்படிஇஎவ்விதம் நடந்துக்கொள்ளுவார்கள் எனத் தெரியாது. எனவே நம்மை எச்சரிக்கும் விதமாக .
மகாதேவி என்ற படத்தில் எச்சரிக்கை மணியாக பாடல் ஒலிக்கிறது.
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா.இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்துசொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய முரட்டு உலகமடா
விளையும் பயிரை வளரும் கொடியைய வேறுடன் அறுத்து விளையாடும் மனம்
வெந்திடும் தோட்டக்காரணிடம் மிரட்டல் வார்த்தைகளோடும் பல
வறட்டு கீதமும் பாடும் விதவிதமான பொய்களை வைத்துப்
புரட்டும் உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா”

காலமே சிறந்த ஆசான்
காலமும் இஅனுபமும் மனிதனைச் செம்மைப்படுத்துவதில் செம்பாதி இடம் வகிக்கின்றன. அரசிளங்குமரி திரைபடப்பாடல்இ
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான்சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப்பாரடா –நீ எண்ணிப்பாரடா?
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி –உன்
நரம்போடுதான் பின்னி வளரனும் தன் மான உணர்ச்சி
என்பதிலிருந்து காலம் தரும்பயிற்சி கோடிட்டுக் காட்டியுள்ளார் பட்டுக்கோட்டையார்.

அழகியல் தத்துவம்
உலகப்படைப்புகளில் உள்ள அழகியல் கண்டுரசிக்கும் உணர்வு மனிதனுக்கு வேண்டும்
அழகியல் அனைத்தையும் சாந்தமாக்கும்இ மனதை உற்சாகம் கொள்ளவைக்கும்.
இரத்னபுரி இளவரசி என்ற படத்தில்

“ஆகாய நிலவின் ஆசைந்தாடும் மலரின்
அழகையும் காண்பது கண்ணிலே –பெரும்
ஆனந்தம் அடைவது பண்ணிலே”
என்ற பாடல் முருகியல் உணர்வு முகிழ்க்கும் விதத்தைப் படம் பிடித்துக்காட்டப்படுகிறது.
“பொன்னந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்பநினைவு-என
கண்ணதாசனும் இயற்கையோடு இயைந்து வாழ புலமைப்பித்தன் வலியுறுத்துகிறார்.
அதோ அந்தப்பறவைப் போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போலே ஆடவேண்டும்
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே
காதல் பாசம்தாய்மை நம்மை மறப்பதில்லையே
அட்டமின்றி ஆடிப்பாடவேண்டும் விடுதலை –
என்று அடிமை நிலையிலும் முருகியல் உணர்வு ஒரு மனிதனை தைரியம் கொள்ளவைத்;து தனக்கும் தனி காட்டத்திற்க்கும் விடுதலை தேடித்தரவழிவடுப்பதை இப்பாடல் உணர்த்திநிற்கிறது.

நிலையாமை
மனிதனிடம் எப்போதும் எந்த உணர்வுகளும் நிலையாய் இருப்பதில்லை. முனித மனம் சார்ந்ததன் வண்ணமாக மாறிவிடும். உலக பொருட்களில் எது நிரந்தரம்இ என்ற எண்ணஅலைகள் ஓடுவதுண்டு. யாக்கை நிலையாமைஇ செல்வம்நிலையாமைஇ இளநிலையாமை என நிலையாமைகளைச் சமயமும் தத்துவமும் வரையறுத்துள்ளன. அவற்றை எளிமையாக ஒற்றைவரியில்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கு எது தான் சொந்தமடா? என்ற கேள்விகள் மூலமாகப் பாசவலை படத்தில் பட்டுக்கோட்டையார் சுருங்கக் கூறியுள்ளார்.
வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?
என்பது கண்ணதாசன் உணர்த்தும் நிலையாமை வரிகள்இ மருதகாசி தமது பாடலில்இ
“காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்தபையடா கேளும்
மாயனாராம் குயவன் செய்த மண்ணுபாண்டம் பேலடா

பற்றற்றதன்மை
அவள் ஒரு தொடர்கதை –என்ற சினிமா பெண்மையின் போராட்டவாழ்வைப் படம் பிடித்துக்காட்டியிருக்கும்.ஆனாலும் அதில் வரும் அண்ணன் கதாபாத்திரம் பாடல் ஒன்று
தெய்வம் தந்த வீடு
வீதியிருக்கு……..
ஆதி வீடு அந்தம் காடு..
இதில் நானென்ன அடியே நீயென்ன..
என பற்றற்றத்தன்மையில் வாழும்நிலையில் பறைச்சாற்றும் பாடலாக அது விளங்குகிறது.

ஆன்மாவின் தேடல்
எவ்வளவு தான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேடல் உண்டு. அத்தேடலினை புலமைப்பித்தன்
“ நான்யார்? ந{யார்? நாலும் தெரிந்தவர் யார்? யார்?
தாய்யார்? மகன்யார்? தெரியார் தந்தை என்பவர் அவர் யாரோ?
உறவர் பகையார்?உண்மையை உணராய் உனக்கே நீயாரோ?
வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ?
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் முடிந்தார் யார் யாரோ?
எனத் தேடி விடைக்காண முடியாது உறவுத்தொடர் விளங்குவதைத் தெளிவுப்படுத்துகிறார்.

தெய்வம் இருக்கும் இடம்
இருக்கு இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
அலைகிறாய் ஞனத்தங்கமே……
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே என திரைப்பாடல் ஒன்று மனிதனின் தெய்வத்தைத் தேடி அலையும் நிலையினனச் சுட்டுகிறது.
கண்ணதாசன்
“ தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறேங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே…
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்
இறைவன் திகழும் வீடு…
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை
இசையில் கலையில் கவியில் – மழலை
மொழியில் இறைவன் உண்டுஇ
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டுஇ
எனப் பேசாப் பொருளைஇ விளங்காப் புதிரை எளிய வரிகளில் உலகிற்குப் புரியவைத்து திரைப்பாடலில் தான் முடிந்தது.

உலகில் நடந்து கொள்ளும் முறைமை
சந்தர்ப்பவாதம் பெரிதென்று பலரும் எண்ணுவர்.பச்சோந்திப் பொழப்பு ஒரு பொழப்பு என்பாரும் உண்டு. எவ்வாறு நம் செய்யல்கள் இருக்கவேண்டும் என்பதனைக் கண்ணதாசன் பின்வரும் பாடலில் உணர்த்தி வாழ்வியல் பாடம் நடத்துகிறார்.
“ பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது கருடா சௌக்யமா? யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதேயென்று மானமுள்ள மனிதனுக்கு
ஒளவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
(பரம)
வண்டி ஒடச்சக்கரங்கள் இரண்டுமட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஒடும் ?
உன்னைப் போல அளவோடு உறவாடவேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமையென்பது அதில் அர்த்தம் உள்ளது
விவாகரத்து வேண்டி ந{திமன்றத்தில் தவம்கிடப்பவரிடம்
இப்பாடலை ஒருமுறைக்கேட்கச் சொல்லிவிட்டால் விவாகரத்து வழக்குகள் hத்தாகிவிடும்இநாட்டில் விவாகங்களின் தத்துவத்தையும்இவாழ்வில் வாழும் முறையையும் காட்டும் பாடல்கள் -நீதிமன்றம் எதற்குஇவழக்கு எதற்கு –வாழ்வியல் முறைகளை வகையாகக் காட்டும் சித்தாந்தப்பாடல் இதுஇ
“ காவிரியைக் கமண்டலத்துள் அடக்கும் முயற்ச்சியே
இவ்உரை- விரிப்பின் விரியும்”
வாழ்க்கை வைபத்தினைப் பட்டை தீட்டும் வைரங்களாக சினிமாப் பாடல்களின் சித்தாந்த வரிகள் திகழ்கின்றன. திரையிசைப் பாடல்கள் அனைத்துமே தள்ளுவன அல்ல சினிமாப்பாடல்கள் சொல்லும் சித்தாந்தம் ஏற்றுக் கொள்ளுவன. என்றும் நம் நெஞ்சைஅள்ளுவன.

 

Malarvizhi Mangay <malarmangay64@gmail.com>

 

News

Read Previous

மன நல பாதிப்பை ஏற்படுத்தும் வாட்ஸ் அப்

Read Next

ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா? போலி ‘மொபைல் ஆப்ஸ்’… உஷார்

Leave a Reply

Your email address will not be published.