சமூக மாற்றத்தை ஏற்படுத்த..

Vinkmag ad

இன்றைய சிந்தனை..( 03.08.2019..)
…………………………………….

” சமூக மாற்றத்தை ஏற்படுத்த..”..
…………………………………….

மக்கள் நல்ல அறிவுள்ளவர்களாகவும், தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் பின் பற்றும் தலைவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள்..

இது உண்மை. எனவே மக்களிடம் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் தரம் வேண்டும்.

அதைவிட வேகமான மாற்றத்தை மக்களை வழி நடத்தி செல்லும் தலைவர்கள் மற்றும் சமுதாயத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்களாலும் மாற வேண்டும்.

ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்து இருந்தார்.
விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மாளிகையை சுத்தப் படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.

அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது.

வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து,

`ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார். வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள்.

அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம்.
ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம்.

அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே? என்று வேலை செய்பவர்கள் நினைத்தார்கள்..

சரி நமக்கு எதற்கு இந்த வம்பு.ஜமீன்தாரர் என்ன சொல்கிறாரோ அதை செய்துவிட்டு போகலாம் என்று அனைவரும் எண்ணி அவர் சொல்லியபடி துடைத்தார்கள்.

ஆம்.,நண்பர்களே..,

எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால், அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்..

சமூகத்தை மாற்றும் எழுச்சி உணர்வு மிக்க இளைஞர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை; இவர்களால் மட்டும்தான் நாம் எதிர்பார்க்கும் நல்ல சமுகத்தை உருவாக்க முடியும்.

News

Read Previous

தலாக் தலாக் தலாக்…

Read Next

குழந்தைகளின் திரைநேரத்தைக் குறைப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *