சட்ட திருத்தமும் சமூக சீர்திருத்தமும்

Vinkmag ad

சட்ட திருத்தமும் சமூக சீர்திருத்தமும்

A.ஆயிஷா மர்யம் –திருச்சி

சமீபத்தில் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிரூபயா மிகக் குரூரமாக வன்புணர்ச்சி செய்யப் பட்டு கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ஒரு தண்டனை  குற்றவாளியை மைனர் என்றுக் கூறி நீதிமன்றம் விடுவித்து அவனுக்கு பத்தாயிரம் பணமும் ஒரு தையல் இயந்திரமும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது அதாவது இந்திய சட்டத்தின் படி 18  வயதிற்கு உட்பட்டவர்கள் மைனராக கருதப் படுவர்.விடுவிக்கப் பட்ட குற்றவாளி அவன் குற்றமிழைத்த போது வயது பதினேழு  வயதே ஆகும்.எனவே சட்டத்தின் படி இவன் மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது போல தண்டிக்கப் பட மாட்டான்.சில ஆண்டுகள் சிறை தண்டனையும் அதனைத் தொடர்ந்து விடுதலை மற்றும் எதிர்கால வாழ்வுக்கு அரசின் நிவாரணம் என்ற நிலையில் பணமும் தையல் இயந்திரமும் அவனுக்கு அளிக்கப் பட்டுள்ளது. இவனைத் தவிர அந்த வன்புணர்ச்சி மற்றும் குரூர கொலையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப் பட்டு தீர்ப்பளிக்கப் பட்டது.

நிரூபயா பெற்றோர் , பெண்ணுரிமை இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாட்டின் சட்டம் இயற்றும் உயர் பீடமான நாடாளுமன்றம் 16 வயதிற்கு மேற்ப் பட்டவர்களை மேஜராக கருதி இனி குற்றங்களில் ஈடுபடும் அவர்களுக்கும் தண்டனை அளிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தம் செய்யப் பட்டது.எனினும் இதிலிருந்து நிருபயா வன்புணர்ச்சி மற்றும் குரூர கொலையில் ஈடுப் பட்ட மைனர் குற்றவாளி இறுதித் தீர்ப்பு நீதி மன்றத்தால் வழங்கப் பட்டதால் அவன் இந்த தண்டனையில் இருந்து தப்பி விட்டான்.

இந்த சட்டம் மட்டுமே இச்சிறார்களின்  குற்றங்களை தடுத்து விடுமா? என்பதுதான் கேள்வி. ஏனென்றால் ஆபாச களஞ்சியங்கள் நம்மை சுற்றி சமூகத்தில் இணையம், திரைப்படம்,விளம்பரம், தொலைக்காட்சி,செய்த்திதாள்கள்,அலைப் பேசிகள் என நாம் பார்க்கும் அனைத்திலும் நிரம்பி வழிகின்றன..அவற்றின் சின்னஞ்சிறு முற்றங்களில் நாம் மோதினாலும்  நாமே மிக மோசமான குற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுவோம் என்ற அச்சம் ஏற்படுகிறது.

இணைய தளத்தை திறந்தால் ஆபாச இணைய பக்கங்கள்,நீங்களாக அப்பக்கத்திற்கு செல்லவில்லை என்றாலும் விபச்சாரத்திற்கு  நேரில் வந்து அழைக்காத குறையாக விளம்பரங்களே உங்களை சற்று கிளிக் செய்யுங்கள் என்று அழைக்கும்.

டிவியில் பேஷன் ஷோ என்ற பெயரில் அரைகுறை ஆடையுடன் சுதந்திரம் என்ற பெயரில் ஏமாற்றப் பட்ட பெண்களின் ஆபாச ஆட்டங்கள் சுத்தமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஆணையும் சுண்டி இழுக்கும்.

ஆண்களின் உள்ளாடை,ஷேவிங் கிரீம் விளம்பரங்களில் கூட அரைகுறை ஆடையுடன் ஒரு பெண்ணின் படம், தூய்மையான ஆண்களையும் பெண்ணை  ரசித்துப் பார்க்கத் தூண்டும்.

ஏன் பெண்களே சுதந்திரம் என்ற பெயரில் ஆணாதிக்க தந்திரம் மூலம்  அரை குறை ஆடைகள் அணிவிக்கப் பட்டு  அந்நிய  ஆடவர்களுடன்  தனிமையில் இருக்கும் சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டு அழிவினில்  தீயில் விழும் விட்டில் பூச்சிகளாய் மாறிப் போயிருக்கிறார்கள்.

தன் மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை பிழைப்புக்கு வழி அமைத்து தர வக்கில்லாத அரசுகள் சிவப்பு விளக்குப் பகுதிகளை அனுமதித்து பெண்கள் தாங்களே வழிய வந்து விபச்சாரத்துக்கு தங்களை விற்க வழி அமைத்து தந்துள்ளன.

அன்றாட ஆண்களின் கூலியையும் அவன் மனைவி தாலியையும் வாங்கிக் கொண்டு அவனை புதைகுழிக்கும் அவனது மனைவியை விதவை நிலைக்கும் தள்ளும் மது கடைகள், வன்புணர்ச்சியில் ஈடு படும் ஒவ்வொருவனையும் போதையில் மனித உணர்ச்சியை விட்டும்  தள்ளி மிகக் குரூரமாக பெண்ணை பலாத்காரம் செய்து படுகொலையும் செய்ய செய்கின்றன..

இன்னொருபுறம் தொலைக் காட்சிகளில் திருமணமான பெண்கள் ஆண்கள்  கூட எப்படி கள்ள உறவு  வைக்க வேண்டும் என்று பாடம் நடத்தாத குறையாக நடத்தப் படும் சீரியல்கள்,ரொமாண்டிக் படம் என்ற பெயரில் எப்போதும் படுக்கையறை காட்சிகளையே காட்டி, மிகக் கேவலமாக விபச்சாரம் செய்பவள் கூட விவரிக்க முடியாத அளவுக்கு பெண்ணிண் உடலை  வர்ணித்து வார்த்தைகளிலேயே அவளை நிர்வாணப்படுத்தி ஆண்களை அவன் அருகில் இருக்கும் பெண்ணை கூட வக்கிரமாக சிந்திக்க, வழிவகை செய்யும்  திரைப் படங்கள்.

ஓரினச்சேர்க்கை உரிமை என ஒப்பாரி வைக்கும் மனித உரிமை (?) அமைப்புகள்,

திருமணமாகாமல் சேர்ந்து  வாழும்  living together வாழ்க்கையை நீதி மன்றங்களே நியாயப் படுத்தி அளிக்கும் தீர்ப்புகள்,

பொது வெளியில் மிக எளிதாக கிடைக்கும் கருத்தடை, கருக்கலைப்பு சாதனங்கள் என சமூகத்தை அழிவில் கொண்டு செல்லும் வழிகளை  அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படி குற்றம் செய்ய அனைத்து வாசல்களையும் சிறு இடை வெளி கூட விடாமல் திறந்து விட்டு விட்டு திடீரென இப்படி ஒரு சட்டத் திருத்தம் செய்து விட்டால் குற்றங்கள் குறைந்து விடுமா?அப்படி ஒரு குற்றவாளியை பிடித்தாலும் வெளியே வர சட்டத்தில் அத்தனை ஓட்டைகள் அதுவும் அக்குற்றவாளி வசதி உள்ளவனாக இருந்தால் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.சட்டத்தில் ஒரு வாசல் அமைத்து அவனை மிக ஆடம்பரத்தோடு வரவேற்கும் அவல நிலை ,எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்நாடு?

நச்சு மரத்தின் வேர்களை விட்டு விட்டு அதன் கிளைகளை மட்டும் அழித்தால் அது அழிந்து விடுமா? என்ன? மீண்டும் வெட்ட வெட்ட அவை வளரும்.கோடி போல படர்ந்து கொண்டே போகும்.

முதலில் தண்டனைகளை சீர் செய்ய வேண்டும். கொடூரமான  குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.அக்குற்றங்களை மீண்டும் எவனும் செய்யாத வகையில் தண்டனை இருக்க வேண்டும்.ஆனால் என்ன செய்வது குற்றவாளிகள்தானே ஆட்சி என்ற பெயரில் நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்து மக்களாகிய நாம் சிறு விஷயங்களில் கூட நேர்மையாக,ஒழுக்கமாக வாழ முயற்சிக்க வேண்டும்.சீர்திருத்தம் சமூகத்தில் தனி மனிதனிடம் இருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும்.ஆட்சியாளர்கள் என்பவர்கள் இச்சமூகத்தின் வெளியில் இருந்து  இருந்து வந்தவர்கள் அல்லர் அவர்களும் இச்சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான்.எனவே நாம் மாறினால்  அவர்களும் மாறிவிடுவர்.. வேண்டும்.அவ்வாறு உருவாகும் சமூக மாற்றங்கள் மூலம்  இக்குற்றங்கள் எல்லாம் தானாய் குறைந்து விடும்.இல்லையெனில்  சமூகம் திருந்தாத வரை சட்டங்களை திருத்திக் கொண்டே இருப்பதால் எந்த பயனும் இல்லை .நாளை 16 வயது என்பது 6 வயதிற்கு கூட திருத்தப் படலாம்.ஆச்சரியப் படுவதற்கில்லை.

——————————————————————————————————————————————

 

News

Read Previous

ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை

Read Next

வெற்றிச் சக்கரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *