சங்க கால இலக்கியம்

Vinkmag ad
சங்க இலக்கியம் எவை ?
 சங்க கால இலக்கியம் என்று நம் முன்னோர்கள் வகுத்த நூட்கள் குறித்த ஒரு மீள் பார்வை.
    கிருஸ்த்து பிறப்பதற்கு முந்தைய காலத்தையே நாம் தமிழ் இலக்கிய சங்க காலம் என்று குறிப்பிடுறோம்.
தொன்மையான தமிழ் மொழியின் மிக மூத்த நூல் அகத்தியர் எழுதிய ’அகத்தியம்’ என்று கூறப்படுகிறது.
அந்நூல் இப்போது கிடைக்கவில்லை. அகத்தியம் ஓர் இலக்கண நூல். இலக்கியம் தோன்றிய பிறகே
அதனை ஒழுங்குபடுத்த இலக்கணம் தோன்றி இருக்க முடியும் என்பதால், அகத்தியத்திற்கு முன்பாகவே –
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் சிறப்பான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.

இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல் “ தொல்காப்பியம் “ இதுவும் ஒரு இலக்கண நூல்தான்.
   ( கி, மு. 300 — கி.மு 100 )
      இந்தக் காலகட்டத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்க முற்பட்டனர் தமிழ் அறிஞர்கள்.அப்போது
  தோன்றியவையே ” சங்க இலக்கியம் ” என்று வழங்கப்படுகிறது.
                   சங்க இலக்கியம்
 சங்க இலக்கியத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1, பத்து பாட்டு  2. எட்டுத் தொகை  3, பதினெண் கீழ்க்கணக்கு.
     இவற்றுள் பத்து பாட்டு என்பது தனிப்பட்ட நூல் அல்ல. பல நூல்களின்  தொகுப்பு. மொத்தம் எட்டுப் புலவர்கள்
     எழுதிய பாடல்கள். பத்தைத் தொகுத்து  பத்துப்பாட்டு என்று கூறினர். இவற்றில் ஒவ்வொரு பாட்டும், தனி நூல்
என்று சொல்லத்தக்க அளவில் முழுமையானவை. இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் 100 அடிகளுக்கு மேலான்வை.
     500 அடிகள் வரை கூட் சில போகும், பத்துப் பாடலகள்.
             முருகு, பொருநாறு, பாண் இரண்டு, முல்லை,
              பெருகு,  வளமதுரைக் காஞ்சி — மருவிய
             கோல நெடுநல் வாடை, கோல் குறிஞ்சி,
பட்டின பாலை, கடாத்தொடும் பத்து.

அதாவது,
     1.   திருமுருகாற்றுப்படை,
     2 .   பெரும்பாணாற்றுப்படை,
     3.    சிறுபாணாற்றுப்படை
     4.    பொரு  நாற்றுப்படை.
     5.    முல்லைப் பாட்டு.
     6.    மதுரை காஞ்சி
     7.    நெடு நல்வாடை
     8.     குறிஞ்சிப்பாட்டு.
     9.    பட்டினப்பாலை.
    10.    மலைபடுகடாம்
             — ஆகிய பத்து நூட்கள் பத்துப்பாட்டு

எட்டுத் தொகை
      எட்டு தொகை நூற்களும், பல புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பே.
ஆனால், இவற்றுள் எந்தப் பாடலையும் 100 அடிகளுக்குக் கீழ்ப்பட்ட இந்த எட்டுத்
தொகை நூல்களை ஒரு பழம்பாடல் இப்படி விவரிக்கிறது.
   1. நற்றினை
   2. குறுந்தொகை
   3. ஐங்குநூறு
   4.பதிற்றுப்பத்து
   5. பரிபாடல்
   6. கலித்தொகை.
   7. அகநானூறு
   8. புறநானுறு
       — இந்த எட்டு நூட்கள் ஆகும்

       பதினெண் கீழ்க்கணக்கு.
 கி.பி மூன்றாம் நூற்றாணடில் களப்பிரர்கள் என்போஎ பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து,
பாண்டியர்களை வென்று மதுரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில்தான்
முச்சங்கத்தின் கடைசியான  கடைச்சங்கம் அழிந்தது. தமிழர்களின் கலை, கலாச்சாரம், நாகரீகம்
நசியத் தலைப்பட்டது. தமிழகத்தின் இருண்ட காலம் என்பார்கள். இதனை, இந்தக் காலகட்டத்தில்
  “ சங்கம் மருவிய கால, “ என்று பெயர். அப்போது  தோன்றிய நுட்கள் பதினெண் கீழ்க்கணக்கு
நூல்கள் ( பத்துப்பாட்டு, எட்டுத்தொகை }

   ஐந்தோ அல்லது அதற்குத் கீழே அடிகளைக் கொண்டு அமையப் பெற்றவை கீழ்க்கணக்கு நூல்.
அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் (பத்துப் பாட்டு, எட்டுத்தொகை }

    அறம்,பொருள், இன்பம் ஆகிய மூன்றையோ அல்லது மூன்றில் ஒன்றையோ விளக்கி வெண்பாவில்
எழுதப்படுவது கீழ்க் கணக்கு நூட்கள்.
இந்த வரிசையில்….,
 நாலடி, நாண்மணீ, நாநாற்பது, ஐந்திணை, முப்பால், கடுகம், கோவை, பழமொழி
 மாமூலம், இன்னிலை சொல் , காஞ்சியோடு ஏலாதி என்பதும்  கைநீலையுமாம் கீழ்கணக்கு.

    நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனிவை நாற்பது, திரிகடும்,
    ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, முப்பால், ஆசாரக்க் கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம்
         …. ஆகிய 11  அற ஒழுக்க நூல்களும்…,

ஐந்திணை ஐம்பது ,  ஐந்திணை ஏழுபது,   திணைமொழி ஐம்பது,   திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை,
   கார் நாற்பது, களவழ நாற்பது ஆகிய 7 அகத்துறை ( காதல் ) நூல்களும் சேர்ந்து 18 நூல்கள் பதினெண் கீழ்க்
   கணக்கு நூல்களாக வருகின்றன.   இவையே   சங்க   இலக்கியம்
                                    *********************************
***  இவை மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. பல விடுபட்டுப் போய்  இருக்கலாம்  ******
    காலமும், கரையானும், கடற்கோளும்…  தமிழ்ர்களின் DONT CARE மெத்தன தன்மையும்தான்.
 ஏட்டுச் சுவடிகளைப் பல வீட்டுப் பரன்களில் கிடந்த இந்த சங்க இலக்கியகளை  தேடிக் கண்டுபிடித்து
அச்சேற்றியவர்கள் அறிஞர்கள்…, உ,வே, சா., பின்னத்தூர் அ. நாராயணசாமி, சி.வை  தாமோதரம்
போன்றோர் ஆவர். தமிழ் கூறும் நல்லுகமும் தமிழ் இலக்கிய வரலாறும் அவர்களுக்கு எந்நாளும்
நன்றிக்கடன்பட்டிருக்கிறது

🍀அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை

தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

………………..
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

News

Read Previous

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read Next

மனிதநேயம் பிறக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *