கெடிமேடு புதிர்நிலை கண்டுபிடிப்பு

Vinkmag ad

imageswwefdகெடிமேடு புதிர்நிலை கண்டுபிடிப்பு

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள பண்டைய வணிகப் பெருவழியான வீரநாராயணப் பெருவழியில் (பாலக்காட்டுக் கணவாய் முதல் அழகன்குளம் வரை பொள்ளாச்சி,உடுமலை, கொழுமம், திண்டுக்கல், மதுரை மற்றும் திருத்தங்கல் வழியாகச் சென்றது) அமைந்துள்ள கெடிமேட்டில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த துரான்.சு.வேலுச்சாமி, க.பொன்னுச்சாமி, சு.சதாசிவம் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் நடத்திய மேற்ப்பரப்பு ஆய்வில் சுமார் 2௦௦௦000 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்காலப் பகுதியில் ஏழு சுற்றுக்கோட்டை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ள பகுதியில் பழைமையான புதிர்நிலையைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது,புதிய கற்காலத்திலிருந்தே புதிர் நிலைகள் உலகெங்கும் இருந்துள்ளமையைத் தொல்லியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். வட்டப்புதிர்வழிகள் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழைமையானவையாகும். உள் / வெளிச் செல்ல இயலாத பல்வேறு சூழல்நிலைப் பாதைகளுடன் மையத்தே விடையைக் கொண்டு விளக்குபவை புதிர் நிலைகள் எனப்படும். எடுத்துக்காட்டாக மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு உயிரிழந்த சக்கரவியூகம் இவ்வாறான ஒரு புதிர் நிலையே ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளாக அரிய ஒன்றை அடைய நினைக்கும் மனிதமனம் ஏற்படுத்திய சிக்கல் மற்றும் அதற்க்கான தீர்வை வைத்திருப்பவை இப்புதிர்நிலைகள் எனலாம்.

 

கிரீட் தீவில் கிடைத்த ஃபைலோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்ட களிமண் தாயத்து கி.மு.12௦௦00 ஆண்டுகள் பழைமையானது ஆகும். சார்டீனியத்தீவுப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லுசன்னா என்ற புதிர்நிலை கி.மு.2௦௦oo ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனக் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. சிரியாவில் புதிர் நிலைகள் வரையப்பட்ட பானைச்சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை கி.மு.1௦௦௦000 ஆண்டுகள் பழைமையனவையாகும். முக்கியமான வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய புதிர்நிலைகள் கிரேக்க மற்றும் ரோமானியர்கள் காலத்தை சேர்ந்தவை மட்டுமல்ல அவை ஆய்வாளர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டுமுள்ளன. உலகமெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிர்நிலைகள் அதிகமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் காணப்படுகின்றன.

 

வரலாற்றுக்காலத்திற்கு முந்தையதான புதிர்நிலைகள் இந்தியாவில் வெகு அரிதாகவே உள்ளன. பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை ஒன்று தெற்குக் கோவாவில் செங்கும் வட்டத்தில் ரிவோனா கிராமத்தினருகே உள்ள பன்சாய்மோல் என்றழைக்கப்படும் உள்கலிமோல் பகுதியில் உள்ளது. பெருங்கற்காலத்தை அடுத்து கி.பிஆறாம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள உண்டவல்லி குகையில் கிடைத்த வட்டப் புதிர்நிலை குறிப்பிடத்தக்கதாகும். ஓய்சாளர்கள் காலத்திலும் இவ்வாறான தொடர்ப்புச்சிற்பங்களில் இடம்பெற்றிருந்ததை ஹளபேடு ஓய்சாளஸ்வரர் கோவிலில் இருக்கும் அபிமன்யுவின் சக்கரவியூக வட்டப்புதிர்நிலையைக் காட்டலாம். நமது வீடுகளில் தினந்தோறும் வரையப்படும் கோலங்களில்தான் புதிர்நிளைகளின் செல்வாக்கு இறுதியாக வந்து நிற்கிறது என்பது வெறும் சொல்லல்ல, ஆய்வுகள் தீவிரப்படுதலில் ஒரு பண்பாட்டின் அடியாளமும் தொடமுடியும் என்பதுதான் புதிர்நிலைகள் காட்டுகின்றன.

 

குறுச்சேத்திரத்தில் உள்ள காளி கோவிலில் வரையப்பட்டிருக்கும் சதுரப்புதிர்நிலையானது மகாபாரதக் கதையொன்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. யுத்தத்திற்குச் செல்லும் முன் இது போன்ற புதிர்நிலைகளைப் பற்றிப் பாண்டவர்கள் அறிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அபிமன்யு இவற்றை அறியாததாலேயே துரோணரின் சக்கரவியூகத்தில் சிக்கிக்கொண்டதகவும் இத்தொன்மாங்கள் காட்டுகின்றன. தென்னிந்தியாவில், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிர் நிலைகளிலேயே மிகப்பெரியதான புதிர்நிலையைத் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பையநல்லுரில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் கண்டுபிடித்துள்ளார்.

 

இங்கு கெடிமேடு பொள்ளாச்சியில் இருந்து கிழக்கே 16KM தொலைவில் அமைந்துள்ளது. தமிழில் கெடி என்றால் கோட்டையை குறிக்கும். இது ஒரு சதுரப்புதிர்நிலை ஆகும். ஏறக்குறைய56’X56’ அடி பரப்பில் உள்ளது. எழு பாதைகள் கொண்டது. ஒவ்வொரு பாதையும் 2’6”அடி அல்லது 3’6” அகலம் உடையது. ஐந்தாவது சுற்றில் 2’6”X2’6”வடிவில் பாதை அடைபட்டுள்ளது. இன்று மக்கள் வழிபாட்டில் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்படும் வழிபாடுகள் மூன்று நிலைகளில் உள்ளன. 1. பிள்ளைப் பேறு வேண்டுதல், 2. எண்ணிய யாவும் அடைய வேண்டுதல், 3. கால்நடைகள் நோய் தீர வேண்டுதல் இவையாவும் தொன்றுதொட்டு விளங்கிவரும் வளமைச்சடங்கின் நிட்சியே!

 

எல்லாவற்றுக்கும் மேலாக இப்புதிர்நிலையை வெற்றிகரமாக எழுபட்டைத் தளப்பாகையில் நடைபயின்று, வெற்றியடைபவர் மனதில் நினைத்ததைப் பெறுவர் என்பதும் கற்களைத் தாண்டிச்செல்பவர் நற்பலங்களை இழப்பர் என்பதும் மக்களின் நம்பிக்கை. புதிர் நிலைகள் பற்றிய இதே நம்பிக்கைதான் உலகமெங்கும் இருக்கிறது என்பது அதிசயம் ஆகும். இந்த புதிர் நிலை 60%சிதைந்துள்ளது.

 

கெடிமேடு அருகில் உள்ள வடபூதிநத்தத்தில் மண் கலயத்தில் ரோமானிய வெள்ளி நாணயங்கள் 1500 கிடைத்துள்ளதும், மேலும் சி.கலயமுத்தூரிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளதும், இதன் அருகில் அமைந்துள்ள கல்பதுக்கை அருகில் நெடுங்கல் சுடு மண்ணால் ஆன சேர முத்திரை, தாங்கிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் மற்றும் பல வண்ணக்கள் மணிகள் மூலமும் இது பண்டைய பெருவழியில் அமைந்துள்ளதால் இப்புதிர்நிலை அமைந்துள்ள கெடிமேடு கிராமம் 2000 ஆண்டுகள் பழைமையானது ஆகும் என்றார்.

 

தகவல் :

தென்கொங்கு சதாசிவம்.சு

News

Read Previous

இஸ்லாமிய இல்லறம்

Read Next

ஆரஞ்சு மிட்டாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *