குழந்தைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும்

Vinkmag ad

குழந்தைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும்
( GROWTH & DEVELOPMENT )
————————–

குழந்தைகள் சமூகத்தின் மட்டுமல்ல தேசத்தின் சொத்து. குழந்தைகள் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றம்.

குழந்தைகள் உடல் மற்றும் உடலியல் ரீதியாக வளர்ச்சியடையாதவர்கள் (Physically Physiologycally immature). எனவே அவர்கள் செய்யும் எச்செயலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வளர்ச்சி (Growth) என்பது உடல் வளர்வது. உதாரணமாக எடை கூடுதல்.

குழந்தைகள் முன்னேற்றம் ( Development) என்பது செயல் வளர்ச்சி. உதாரணமாக நிற்பது, நடப்பது, ஓடுவது, பேசுவது.

இரண்டும் சரிவிகித அளவில் நடக்க வேண்டும்.

எடை :

பிறந்த குழந்தை எடை பிறக்கும் போது சராசரியாக மூன்று கிலோ இருக்கும். முதல் பத்து நாளில் பத்து சதவீதம் குறைந்து 2.7 கிலோ இருக்கும். பின்னர் ஒரு நாளைக்கு 25 கிராம் எடை அதிகரிக்கும். அதனால் ஆறு மாதத்தில் எடை இரட்டிப்பாகும். ஒரு ஆண்டில் எடை மூன்று மடங்கு ஆகும்.அதாவது 9 கிலோ ஆகும்.

உயரம்:

பிறந்த குழந்தை 50 cm நீளம் இருக்கும். ஒரு மாதத்திற்கு 2.5 cm அதிகரிக்கும்.ஒரு வருடத்தில் உயரம் 75 cm . நான்கு வருடத்தில் உயரம் இரட்டிப்பாகும் அதாவது 100 cm ஆகும்.

முன்னேற்றம் :

3 மாதம் : சிரித்தல் , தலை நிற்கும்

4 மாதம் : கை பயன்பாடு

5 மாதம்: திரும்பி பார்த்தல்

6 மாதம் : உட்கார்தல்

7 மாதம் : தவழ்தல்

9 மாதம் : நிற்பது

11 மாதம் : நடப்பது

உச்சிக்குழி :

பிறக்கும் குழந்தைகளுக்கு முன் பின் என இரண்டு உச்சிக்குழி இருக்கும். பின் உச்சிக்குழி ஒன்றரை மாதத்திலும் முன் உச்சிக்குழி ஒன்றரை வருடத்திலும் மூடும்.

குழந்தைகள் வளர்ச்சி முன்னேற்றத்தை நிர்வாகிக்கும் காரணிகள்:

1. ஜீன்கள்

2. பிறந்த எடை

3.சுற்றுப்புறம்

4.உணவு

5. விளையாட்டு

6. தூக்கம்

7. ஹார்மோன்

8. பொருளாதாரம்…

9. பிற

மேற்கண்ட காரணிகளை ஒழுங்கு படித்தினால் நல்ல வளர்ச்சியை குழந்தைகள் அடையாளம்…

மனித வளர்ச்சி நிலை
———————————–

0 – 28 நாள் –

Neonatal பச்சிளங்குழந்தை

1மாதம் முதல் 1 வருடம்-

சிசு ( Infant )

1 வருடம் முதல் 3 வருடம்

தத்து குழந்தை ( Toddler)

3 வருடம் முதல் 6 வருடம்

முன் பள்ளி பருவம் ( Preschooler )

6 முதல்12 வருடம்

பள்ளி பருவம் ( Schooler)

12 – 18 வருடம்

வளர் இளம் பருவத்தினர் ( Adolescent)

18 வருடம் முதல்

முதிர்ந்தவர் ( Adult )

குழந்தைகளை புரிந்து அவர்களின் வளர்ச்சியில் துணை நிற்க வேண்டும்….

கவிஞர் திரு.கலீல் ஜிப்ரான் அவர்களின் குழந்தைகள் பற்றிய கவிதை….

நம் குழந்தைகள்

நம் குழந்தைகள் அல்ல

அவர்கள் வாழ்க்கையின் குழந்தைகள்..

அவர்கள் நம் மூலம் வந்தவர்கள்
நம்மால் வந்தவர்கள் அல்ல

நாம் அன்பை செலுத்தலாம்
எண்ணங்களை
செலுத்தலாகாது..
அவர்கள் சொந்த
எண்ணங்களுடையவர்கள்..

நமது கனவுகளை விருப்பங்களை குழந்தைகள் மீது
திணிக்ககூடாது..

நன்றி.

பா.திருநாகலிங்க பாண்டியன்

M.Sc ( Pediatric Nursing)

Tutor in Nursing

Madurai Medical college

Madurai.

News

Read Previous

உடல்நல பிரச்சனைகளுக்கான சில பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள்!!!

Read Next

நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *