காயிதேமில்லத்

Vinkmag ad

#Quaidemillath125
#June5

ஜீன்-05 இதே நாளில் 1896-ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த ஒரு சகாப்த நாயகர்…

கல்வி,வியாபாரம்,அரசியல், பொதுவாழ்வு என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி தனக்கென தனி முத்திரை பதித்து வைத்த ஒரே தலைவர்….

இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய பாதுகாவலர்….

இவர் 1937-ல் அகில இந்திய முஸ்லிம் லீக்கில் உறுப்பினரானார்….பிறகு மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவரானார்

அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்து தலித் மற்றும் சிறுபான்மையின மக்களின் உரிமையை அன்றே பெற்றுக்கொடுத்தவர்…

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று கர்ஜித்து அதை நடைமுறைபடுத்த தன்னால் இயன்ற அளவு போராடிய முதல் தமிழர்….

இவர் பிறந்தது தமிழகத்திலாக இருந்தாலும் கேரள மாநிலம் மஞ்சேரி தொகுதியில் ஒருமுறை கூட ஓட்டுக்கேட்டு செல்லாமல் மூன்றுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் இந்த வரலாறு இந்தியாவிலேயே இவர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமில்லை

இந்திய இஸ்லாமிய சமுதாயம் பிரிவினைவாத முத்திரை குத்தப்பட்டு தனித்துவிடப்பட்டபோது அந்த சமூகத்தை தன் கரத்தால் தாங்கிப்பிடித்த தன்னலமில்லா தலைவர்

1948-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை உருவாக்கி அந்த இயக்கத்தின் மூலம் இன்றுரை ஒரு சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல வித்திட்ட தொலைநோக்கு சிந்தனையாளர்

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், ஒருமுறை சென்னை மாகாண எதிர்க்கட்சி தலைவர் என அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் வியாபார ரீதியாகவும் இவர் வகித்த பதவிகள் ஏராளம்

இவருக்கு பிறகு இந்திய அரசியலுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் இவரின் இடத்தை நிரப்ப தகுந்த சிறந்த தலைவர் கிடைக்கப் பெறவில்லை என்பது எவர் ஒருவராலும் மறுக்க முடியாத உண்மை எனினும் இந்த நூற்றாண்டிலாவது அப்படி ஒரு தலைவர் நமக்கு கிடைக்க வேண்டிய பிரார்த்தனையோடு

இந்திய அரசியலில் இவரை தவிர்த்த வரலாறு இல்லை என்ற அளவுக்கு வாழ்ந்துகாட்டி மறைந்த கண்ணியத்தென்றல் காயிதெமில்லத்தின் மறுவுலக வாழ்விற்கும் துஆ செய்வோம்

News

Read Previous

கடவுளும் கொரோனாவும்

Read Next

மின்கவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *