காக்கா முட்டை

Vinkmag ad

காக்கா முட்டை (பட விமர்சனம் )

காக்கா முட்டை என்றொரு படம். எல்லோரும் பார்க்க வேண்டிய (குடும்பத்துடன் என்று சேர்த்துக்கொள்ளலாம்). வழக்கமான தமிழ் வில்லத்தங்கள், வன்முறைகள், ஸ்விஸ் சினிமாப் பாடற்காட்சிகள் அற்ற நல்ல படம். உலகத்தரத்தில் எடுத்திருக்கிறார்கள். சேரி வாழ்வைச் சொல்வதானால் அது சோகத்தில் முடிய வேண்டுமென்ற தொன்மத்தை மாற்றி சேரியில் வாழ்வோரும் நம்மைப் போலவே வாழ்கின்றனர் என்றும். வசதி அடிப்படைகளில் வேறுபாடு இருந்தாலும் அவர்கள் வாழ்வில் சுகாதாரமும், கண்ணியமும், ஒழுங்கும், நேர்மையும் இருக்கிறது என்று காட்டும் முதல் தமிழ்ப்படமிது. எவ்வகை மிகைக்காட்சியமைப்புமற்ற படம். No wonder! வந்த முதல் நாளிலேயே அபாரமாக வணிகப்படங்களுக்கு நிகராக வசூலைக் காண்பித்த படமிது. இனிமேலும் சத்தியஜித்ரே, மலையாள இயக்குநர்களை வழிபட்டு யதார்த்தப் படங்கள் எடுக்க வேண்டுமென்ற தொன்மம் இங்கு முதன்முறையாக உடைந்திருக்கிறது. உலகத்தரத்தில் படமெடுக்க தமிழனால் முடியுமென்று காட்டியிருக்கிறார்கள். ஏழை வாழ்வைக்காட்டும் அத்தனை படங்களும் இதுவரை சோகத்திலேயே முடியும் போது (குறிப்பாக வங்காள, மலையாளப்படங்கள்) இப்படம் மிகவும் பாஸிடிவாக முடிந்திருப்பது வளரும் தமிழகத்தின், மாறும் தமிழகத்தின் சாட்சிக்குரலாகப் படுகிறது. எப்படித்தொழில்நுட்பம் சேரிவரை ஊடுருவி ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தப் போகிறது என்பதற்கு அத்தாட்சி போல் அமைகிறது இப்படம்.  மிக நல்ல சுவையான நகைச்சுவை எவ்வித வக்கிரமும் இல்லாமல், எந்த கொச்சைத்தனமும் இல்லாமல் காட்டப்பட்டிருப்பது பார்க்கும் சுவையை மேலும் கூட்டுகிறது. எப்படி ஆங்கிலம்-தமிழ் மணிப்பிரவாளம் என்பது சேரிவரை ஊடுருவி விட்டது என்பதையும் இப்படம் காட்டுகிறது. எனவே அதுவொரு மேட்டுக்குடி ஆளுமை என்று இனிமேலும் சொல்வதற்கில்லை.

‘காக்கா முட்டை’ உடைத்து நொறுக்கிய தமிழ் சினிமா மூடநம்பிக்கைகள்! – தி இந்து

http://tamil.thehindu.com/opinion/blogs/article7289330.ece

News

Read Previous

மகளுக்குத் தாயின் அறிவுரை !

Read Next

ஜுன் 23 துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *