ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்….!

Vinkmag ad

சவூதி அனுபவம்-1
ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்….!
—————————————————
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும்
அரபு நாட்டு நினைவலைகள்….49
————————————————
அன்பிற்கினியவர்களே…..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..

அன்பானவர்களே….!

அரபு வாழ்க்கையில் பெரும் பாலா
னோா் சிரமத்திலேயே இருந்தனர்.
இது ஒருபுறமென்றால், அரபியர்கள்
படுத்தியபாடு மற்றொருபுறம்…..?

அரபுகளின் பழக்கம்.
—————————————–
அரேபியர்களிடம் ஓர் பழக்கமுண்டு.
(மாஃபி) அதாவது இல்லை என்று எது
ஒன்றைப் பற்றியாவது அவர்கள்
மறுத்து விட்டால் அதில் பின் வாங்க மாட்டார்கள்.பின் வாங்குவதை விரும்ப மாட்டார்கள்.அதை கௌரவக் குறை
வாக எண்ணுவர்.

ஆரம்ப காலங்களில் கடைக்குச்
சென்று இது என்ன விலை என்று
கேட்டால் 50/= ரியால் என்பான். 40/= ரியாலுக்கு வராதா என்று கேட்டால்
எ..ல்..லா ரூஹ் போ..போ..என்று விரட்டுவான்.சரிப்பா 50/=ரியாலுக்கே
தா என்று கேட்டாலும் தர மாட்டான்.
(இந்த மாஃபி முஹ்ஃ…? லேஸ் மாஃபி
சீல் அவ்வல்..) உனக்கு மூளை கிடையா
தா? முன்பே நான் சொன்ன விலைக்கு
ஏன் வாங்கவில்ல….?அதனால் கிடை
யாது போ என்று நம்மை விரட்டுவான். வியாபாரம் அவர்களுக்கு ஒரு பொருட் டேயல்ல.

நம்மவர்கள் கடைகள் வருவதற்கு
முன்னால் இந்த அரபிக் கடைக்காரர்
களின் அடாவடித்தனம் சொல்லும் தர
மன்று. ஒட்டு மொத்தமாக எல்லோரை
யும் குறை கூறி விட முடியாது.பண்
பான வியாபாரிகளும் உண்டு.

முன்பெல்லாம் இந்தியப் பொருட்கள்
விற்பனைக் கடைகள் பொதுவாக
சவூதியில் அதிகம் கிடையாது.1977
களில் அல்கோபரில் ஒரேயொரு
கடை இருந்தது. அதன் பெயர் பட்கல்
ஸ்டோர்ஸ்.(BHATKAL STORES)
அங்கேதான் நாங்கள் பொருட்கள்
வாங்குவோம்.

பட்கல் என்ற ஊரைச் சார்ந்தவர்கள். பலவருடங்களுக்கு முன்பாக சவூதிக்கு வந்து, மணம் முடித்து சவூதி பிரஜா
உரிமைப் பெற்றவர்கள்.அவர்களின்
ஊர் கலாச்சாரம் முழுக்க முழுக்க
நமதூர் கலாச்சாரம் போன்ற அமைப்பு
தான். சென்னை மௌலானா லுங்கி ஸ்தாபனமும் அந்த ஊரைச் சார்ந்தவர்
களுடையதே.

ஆரம்ப காலங்களில் இறைச்சிக்
கடைகளில் ஈரல் பல் குத்தி அந்த
ஒட்டு மொத்த ஐயிட்டமும் சும்மாதான் அரபிகள் அள்ளித் தருவார்கள். அதை கெடுத்தது கேரளாக் காரர்கள்தான். அரபிக்கு தனது விசுவாசத்தைக் காட்டு கிறோம் என்ற எண்ணத்தில், சிலர்
அதற்கும் விலை நிர்ணயித்து காட்டிக் கொடுத்ததால் பின்னால் அவைகளும் ஆட்டிறைச்சியின் விலையாக விற்கத் தொடங்கியது. கொழுப்பு நிறைந்த
அந்த அரபு நாட்டு ஆடுகளின்
இறைச்சி நம்மவர்களுக்கு சரி வராது.

ஆதலால் ஆஸ்திரேலியாவில்
இருந்து வெட்டி ஹலால் செய்யப்பட்ட ஆடுகள் வரும். அதை அப்படியே முழு
ஆடாக வாங்கி வெட்டி தேவைகேற்ப தனித்தனி பாக்கெட்டில் போட்டு ஐஸ் பெட்டியில் வைத்து விடுவோம்.அதைத் தொடர்ந்து அல்-கபீர் (AL-KABEER)
எனும் பெயரில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகள் கிடைத்ததும், அதன் ருசியில் மற்றவை
கள் ஓரம் தள்ளப்பட்டது.

எந்த இறைச்சியாக இருந்ததாலும்
களறிக்கறி வாசனையை கொண்டு
வருகின்ற பக்குவம், துக்பாவிலும்,
தமாம் பீனா மீனா காக்கா அவர்கள் இல்லத்திலும் சர்வ சாதாரணம்.

ஆரம்ப காலங்களில் போஸ்ட் ஆபிஸ் களில் நாங்கள் பட்டபாடு சொல்லில் அடங்காது.பெரு நாளைக்கு யாருக்கா
வது சட்டையோ அல்லது துணிமணி
களோ பார்சலில் அனுப்புவது அப்போ அவ்வளவு எளிதல்ல. ஹாங்காங்
போன்று சட்டையை கவரில் வைத்து
அனுப்ப முடியாது.துணியில் வைத்து
மூடி தைக்கனும். அதன் மேல் முகவரி எழுதனும். நாம் எவ்வளவு சரியாக செய்திருந்தாலும், கொஞ்சம் கூட
இங்கிதம் இல்லாமல் அது சரியில்லை
இது சரியில்லை என்று பார்சலை
தூக்கி வெளியில் வீசுவான்.அதையும் பொறுத்தோம்.

நானும் சாலிஹ் ஆலிம் அவர்களும்
போஸ்ட் ஆபீஸ் சென்றிருந்தபோது,
எங்களுக்கு முன்னால் ஹிந்திக்காரன்
ஒருவன் பார்சல் ஒன்றை கையில்
வைத்திருந்தான். அதில் முகவரியை
உர்துவில் எழுதியிருந்தான். அதைப்
பார்த்ததும் சாலிஹ் ஆலிம் அவர்கள்
தாஹா இப்போ நடக்க போகிற வேடிக்
கையைப்பாரு என்று சொல்லவும்
ஹிந்திக் காரன் பார்சலை உள்ளே கொடுத்தான்.அதை வாங்கிய அரபி
அப்படியும் இப்படியுமாக திருப்பிப்
பார்த்த அரபி, வென் அனுவான்
அட்ரஸ் எழுதவில்லையே என்று
கேட்க, இவன் அரே..ஹம் உருதுமே லிக்கானா நான்தான் உர்துவில்
எழுதியுள்ளேனே என்று சொல்ல, இங்கிலீஸ்…..இங்கிலீசில் எழுதிட்டு
வா என்று பார்சலை தூக்கி ஒரே
வீசாக வெளியில் வீசினான்.இதுதான்
அன்றைய நிலை.இப்போ எவ்வளவோ
பரவாயில்லை என்கிறர்.

நாம் அனுப்பிய ரிஜிஸ்ட்டர் லட்டர்
அல்லது பார்சல் ஏதோ ஒன்று நமக்கு கிடைக்கவில்லை என்று நாம் புகார் செய்தால்,நமது ரிசிப்ட்டை வாங்கி
பார்த்து விட்டு, அப்படி யா… கிடைக்க வில்லையோ என்று கேட்டு ரிஜிஸ்ட்டர்
சார்ஜ் பணத்தைத் திருப்பி தந்து எல்லா ரூஹ்….போ என்று விரட்டுவான். அட …. நாங்கள் அனுப்புன லட்டர், பார்சல்
என்ன ஆச்சு?அதற்கு பதில் கிடையாது.
இதுதான் அன்றைய ஆரம்ப நிலை.

அது மாத்திரமா…? விசாவின்
பெயரால் புதிய அடிமை வாழ்க்கை
வரும் பதிவில் பார்ப்போம்*

இன்ஷா அல்லாஹ்
ஏ.ஆா்.தாஹா(ART)|25-12-2020
வளைகுடா வசந்தங்கள் தொடரும்.
☎️ 97897 18293—80721 20303

News

Read Previous

சகோதரி ஜரீனா ஜமால் அவர்களின் அனுபவங்கள்

Read Next

இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை

Leave a Reply

Your email address will not be published.