ஏன் அவர்கள் மவுனமாக இருந்தார்கள் ?

Vinkmag ad


 

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

thahiruae@gmail.com

தோஹா – கத்தார்

 

 

தவ்பீக் சுல்தானா, பதின்மூன்று வயதே ஆன அச்சிறுமி அன்று அறுபத்து ஏழாம் ஆண்டு நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாட பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். .அவளுக்குத் தெரியாது அன்றுதான்  அவளின் சுதந்திரம் மட்டுமல்ல அவளின் உயிரே பறிக்கப் படப் போகிறது என..

வடக்கின் டெல்லி முதல் தெற்கின் திருச்சி வரை கொடியேற்றிய பிரமுகர்கள் சுதந்திர தின முழக்கங்களை வழக்கம் போல் நீட்டி முழங்கினார்கள்.கூடியிருந்த மக்களுக்கு இனிப்பை வழங்கினார்கள்

இந்தியாவில் ஆங்கிலேயர் போனதுதான் மாற்றமே தவிர மற்றபடி சுதந்திரம் எனபது தினமாகத்தான் அனுசரிக்கப் படுகிறது  என்பதும்  தினம் தினம் அச்சமும் வன்முறையுமே அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தியா ஆங்கிலேயர் கால அடிமை இந்தியாவை நினைவுப் படுத்துகிறது .என்பதும்தான் அனைவருமே அறிந்த உண்மையாகும் .

சுதந்திரம் எனபது கார்ப்பரேட் முதலாளிகள் ,ரவுடிகள் ,கொலைகார்கள் கொள்ளைக் காரர்கள் ,அரசியல்வாதிகள் ,கிரிக்கெட்காரர்கள் ,சினிமாக் காரர்கள் என இவர்களுக்குத்தான் கருத்து சுதந்திரம் முதல் கருப்பு பூனை பாதுகாப்பு வரை இருக்கிறதே தவிர சாதாரண மக்களுக்கு மற்றும்  சமூகத்தில் சரிபாதியான பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

திருச்சியில் சுதந்திர தினமன்றே நிகழ்ந்த தவ்பீக் சுல்தானா என்ற சிறுமிப் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை, அதனை கண்டுப் பிடிக்க காவல் துறைக் காட்டிய மெத்தனம் ,கண்டுக் கொள்ளாமல் இருந்த அரசியல்வாதிகளின் கல்நெஞ்சத்தனம்;பேசாமல் ஒதுங்கிய மாதர் மனித உரிமை அமைப்புகளின்  ஓர வஞ்சனை , பாலிய வயது சிறுமி என்றுக் கூட பாராமல் அவதூறு எழுதிய, கழிவறையில் பயன் படுத்தக் கூட தகுதியற்ற பத்திரிக்கைகள் ஆகியவற்றினை நினைக்கும் போது இன்னும் சுதந்திரம் கிடைத்தாலும் பொழுதுதான் விடிகிறதே தவிர ஏழை பெண்களுக்கு ,அபலைப் பெண்களுக்கு ,சிறுபான்மையினருக்கு இன்னும் சுதந்திரத்தில் காலை இன்னும் விடிய வில்லை என்பதையே இவை காட்டுகிறது .

இதில் கற்பழித்து படுகொலைச் செய்யப் பட்ட சிறுமியின் படுகொலையில் ஈடுப் பட்ட கயவர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி  முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைந்து திருச்சி மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தின.வருத்தமான உண்மை என்னவென்றால் காரைக்கால் மாணவி வினோதினி ,டெல்லி மாணவி அமானத் ,ஸ்ரீ லங்கா தமிழ்ப் பெண்கள் கர்ப்பழிப்பு ,படுகொலைகளுக்கு போர்க் கோடி தூக்கிய ,போராட்டம் நடத்திய ,கண்டனம் தெரிவித்த ,கண்ணீர் வடித்த தலைவர்கள் ,இயக்கங்கள் , கட்சிகள் ,அமைப்புகள் ஏதோ வேறு நாட்டிலோ அல்லது எதோ வேறு கிரகத்திலோ நடந்த மாதிரி மனசாட்சி மறந்து தொலை காட்சி செய்தியாக பார்த்து விட்டு மவுனமாகி விட்டனர் .

பிணத்திலும் கூட இனம் பார்த்து ஆறுதல் தெரிவிக்கும் அனுதாபம் தெரிவிக்கும் ,கொடி தூக்கும் கண்டிக்கும் ,கண்ணீர் வடிக்கும் மிக மோசமான சிந்தனை உடையவர்கள் கொலைகார்களை விட மோசமானவர்கள் இல்லை என்றாலும் அவர்களின் மவுனம் மனசாட்சியின் மரணம். ஆழ்ந்த மவுனத்தின் அர்த்தம் மனிதாபிமானமே இல்லை என்பதே .

தலைநகரில் இருபத்து மூன்று வயது மாணவி வன்புணர்ச்சி  செய்யப் பட்ட போது சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிச் சென்று அங்கே என்னமோ கேட்க ஆளே இல்லாதது போல முழங்கிய மாதர் சங்கங்கள் ,அருகில் உள்ள திருச்சியில் பதின்மூன்று வயதுச்சிறுமி வன்புணர்ச்சி மட்டுமல்ல மிகக் கொடுரமாக படுகொலையே செய்யப் பட்டதை கண்டும் காணாதது போல இருக்கும் மவுனத்தின் மர்மம் என்ன?

அந்த சிறுமியை கற்பழித்து படுகொலைச் செய்த கயவர்களை பற்றி எழுத மறுக்கும் பத்திரிக்கைகள்,அச்சிறுமியைப் பற்றியும் அவளது குடும்பம் பற்றியும்  ஒழுக்கமற்றவர்களாக  சித்தரித்து வருகின்றன . பெண்ணின் தொப்புளையும் தொடையையும் படமாக போட்டு விபச்சார எழுத்து நடத்தும் இவர்கள் இதற்க்கு முன் பெரிய வயது பெண்கள் கற்பழிக்கப் பட்ட போது கூட அவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகலாம் அவளது உரிமை ,கற்பழிக்கப் பட்டதுதான் கொடுமை என எழுதின .இப்போது இப்படி எழுதுவது பத்திரிக்கை தர்மமா என்ன ?

கொலையாளியை கண்டுப் பிடிக்க வேண்டிய மக்களின் நண்பர்கள் தற்கொலை என்று கோப்பை மூடி விடப் பார்த்தார்கள் .ஏனென்றால் மிகவும் இலகுவானது இதுதான். இதன் மூலம் அச்சிறுமி ஒழுக்கமற்றவள் அவள் ஏதோ தவறாக போய் வெளியில் சொல்ல வெட்க்கப் பட்டு தற்கொலை செய்துக் கொண்டாள் என்று இழிவும் பழியும் அவள் மீதே  விழும் உண்மை குற்றவாளி தப்பிக்க வழி கிடைத்து விடும். காவல் துறைக்கு வழக்கை சீக்கிரம் முடித்ததற்கு விருதும் கிடைத்து விடும் .

ஓட்டுப் பொறுக்க தெரு தெருவாக வரும் எந்த அரசியல்வாதியும் அன்று அந்த சிறுமியை இழந்த குடும்பத்திற்கு  ஆறுதல் சொல்ல ஏன் அனுதாப அறிக்கைக் கூட விட முன் வரவில்லை .இத்தனைக்கும் அன்று எந்த கட்சியும் வழக்கமாக கட்சியை வளர்க்க விடும் அறிக்கை கூட விட வில்லை.

உயிரோடு இருந்தப் பெண்கள் மீது  நிகழ்த்தப் பட்ட பாலியல் பலாத்காரம் ,ஆசிட் வீச்சு ,இயக்குனர் மகளை இழுத்து விட்டு போக வந்த நிகழ்வு ,ஆகியவற்றுக்கெல்லாம் கவலைப் பட்ட கண்ணீர் விட்ட நீதிக் கேட்ட நிதி உதவி செய்த நல்ல மனிதர்கள் கூட அன்று  ஏழை குடும்பத்தின் பாலிய வயதான பதினொன்று வயது சிறுமி தவ்பீக் சுல்தானா வன்புணர்ச்சி செய்யப் பட்டு வக்கிரமாக படுகொலையே செய்யப் பட்டு தண்டவாளத்தில் துண்டு துண்டாக வெட்டப் பட்டு கிடந்ததை கண்டு ஏன் பேசாமல் இருந்தனர்?

நாதியற்ற சிறுமியின் குடும்பத்திற்கு நீதிக் கேட்டு முஸ்லிம் சமூகம் குரல் எழுப்பியதைக் கூட மதவாதமாக சித்தரிக்கிறது தங்கள் அச்செல்லாம் நச்சைப் பரப்பும் பத்திரிக்கைகள் .

கடைசியில் காவல்துறை மிக வேகமாக (?) குற்றவாளிகளை கண்டுப் பிடித்து கைது செய்தனர் .” இவர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா?” எனபது வேறு விஷயம். அதை  நீதி மன்றம் முடிவு செய்யும் .

 

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதே மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் ஐந்து மனித மிருகங்களால் வன்புணர்ச்சி செய்யப் பட்ட செய்தி வந்திருக்கிறது

இந்தப் படுகொலைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் .

ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் அடிமைத்தனம், பழைமைவாதம் என் புறக்கணிக்கப்பட்டமை ,அல்லது அவை பெண்களுக்கு மட்டுமே அவசியம் எனக் காட்டப் பட்டு ஆண்களுக்கு அவை தேவையில்லை என்று விதி விலக்கு அளிக்கப் பட்டமை ,

கற்பழித்த கயவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று தடுத்த வர்மா கமிஷன்கள்

குற்றம் செய்யும் மனிதர்களுக்காகவே வக்காலத்து வாங்கும்  மனித உரிமை கமிஷன்கள்,

கல்வியை காசு சேர்க்க மட்டுமே உதவும் கருவியாக காட்டும் சமூக அமைப்பு முறைகள்

கற்பழிக்கும் கயவர்களை காப்பாற்ற போராடும் முற்ப் போக்கு  (?) எழுத்தாளர்கள் ஆகியோரே ஆவர்.

வன்புணர்ச்சி செய்த வக்கிரம் பிடித்தவனை  கண்டுப் பிடிப்பது ஒரு புறமிருக்கட்டும் .அப்படியே கண்டு பிடித்தால் மட்டும் என்ன செய்து விடுவார்கள் ?.அவனுக்கு சிறை தண்டனை என்ற பெயரில் பாதுகாப்பான அறைகளில் வைத்து மூன்று நேரம் இலவசமாகய் சாப்பாடு போட்டு பின்பு சில ஆண்டுகளில் விடுதலை செய்து விடுவார்கள் .வினோதினி மீது ஆசிட் வீசியவனுக்கு தண்டனை  அபராதமும் ஆயுள்தண்டனை மட்டுமே.இது விரைவாக வந்தத் தீர்ப்பாம். கற்பழித்து சட்டத்தின் பிடியின் சிக்காமல் இருப்பவனும் சிக்கியவனுக்கும் இந்த நாட்டின் சட்டத்தின்  மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் .திறமையான வழக்கறிஞர்கள் .மனித உரிமை கமிசன்கள், மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவு தங்களுக்கு என்றென்றும் உண்டு  என்றும்  அவர்களுக்கு நன்கு   தெரியும் .

தவ்பீக் சுல்தானா மட்டுமல்ல ,வினோதினி ,டெல்லி மாணவி ,ஈழம் குஜராத் ,ஈராக் ,ஆப்கன் ,காஷ்மீர் , மணிப்பூர் என உலகெங்கும் கற்பழிக்கப்பட்ட படுகொலை செய்யப் பட்ட அனைத்து ப் பெண்கள் குறித்தும் நான் என் ஆழ்ந்த கவலையை, கண்ணீரை பதிவு செய்கிறேன். மனித சமூகத்தில் பாதியான பெண்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க இனம் மதம் மொழி கடந்து மனிதாபிமானத்துடன் குரல் கொடுக்க அனைத்து மக்களும் முன் வர வேண்டும் .

நீதி மன்றம் என்பது குற்றவாளியை நீதியின்  அடிப்படையில்தான் பார்க்க வேண்டுமே தவிர கருணை அடிப்படையில் பார்க்கக் கூடாது .மரண தண்டனை மட்டுமே இந்த கற்பழிக்கும் கயவர்களுக்கு சரியான தண்டனையாகும் .புராண காலம் ,நவீன காலம் என்று சட்டத்தை காலத்திற்கேற்ப பிரித்துப் பார்த்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை காலத்திற்கு ஒவ்வாதவை என ஒதுக்கித் தள்ளும் ஒவ்வொரு நொடியும் தவ்பீக் சுல்தானாப் போன்ற பால்ய வயது சிறுமிகள், இளம் பெண்கள் ,பச்சிளம் பெண் சிசுகள் பாலியல் பலாத்காரம் ,மற்றும் படு கொலை செய்யப் படுவதை  தடுக்க முடியாது .

பயிர் பாதுகாப்புக்கு  பூச்சியை கொள்கிறீர்கள் ஏன் அபலைப் பெண்களின் உயிர்ப் பாதுகாப்புக்கு, அச்சுறுத்தல் அல்ல உயிரையே பறித்தவர்கள் இவர்கள் .இன்னும் எவ்வளவு காலம் பொது மக்கள் வரிப் பணத்தில் பாதுகாப்பாக சிறைகள் என்ற அறைகளில் வைத்து சாப்பாடு போடுவீர்கள் .சுதந்திரம் குற்றவாளிகளுக்கு அல்ல .

 

 

 

News

Read Previous

பழந்தமிழரின் அளவை முறைகள்…!

Read Next

அம்மாவும் சும்மாவும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *