எஸ்.பி.பி என் நினைவுகள்….

Vinkmag ad

எஸ்.பி.பி
என் நினைவுகள்….

கிண்டி பொறியியல் கல்லூரியில் என் மாமா படித்தபோது
எஸ்பிபியும் அங்கே ஒரு மாணவர்.
ஆம் ; அறுபதுகளிலேயே அவர் ஒரு பொறிஇயல் பட்டதாரி.

கல்லூரி ஆண்டு விழாவிற்கு எம்ஜிஆர் வந்திருந்தார் ன.
அந்த மேடையில் எஸ்பிபி பாடுவதைக் கேட்டார்.
தம்பி என்னை வந்து பார் என்று சொல்லிவிட்டுப் போனார்.
எஸ்பிபி போய்ப் பார்த்தார்.

அடிமைப்பெண் படத்தில்
ஆயிரம் நிலவே வா என்ற பாடலைப் பாடுவதற்கு வாய்ப்பு அளித்தார்.

அதற்கு முன்பு எஸ்பிபி
சில திரைப்படங்களில் பாடியிருந்தாலும்,
இந்த ஒரே பாடலில் உலகப் புகழ் பெற்றார்.

அடுத்து எத்தனையோ மொழிகளில் எத்தனையோ ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கின்றார் . ஏழுமுறை குடியரசுத் தலைவர் விருது பெற்று இருக்கின்றார்.

எனக்குப் பிடித்த சில பாடல்கள்..

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்
அவர் பாடிய

அவள் ஒரு நவரச நாடகம்
ஆடும் நடையே நாட்டியம்

என்ற பாடல் கேட்கத் திகட்டாதது.

நேற்று இன்று நாளை படத்தில்
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று என்ற பாடல்..

பொட்டு வைத்த முகமோ
என்பதுபோல சிவாஜிக்கு எத்தனையோ பாடல்கள்..

சங்கராபரணம் படத்தில் அவர் பாடிய பாடல்கள் வேறு யாராலும் பாட முடியாது.

தொரகுணா…. இதுவண்டி சேவா
ராகம் தானம் பல்லவி
சங்கரா…நாத சரீராபரா

நிழல்கள் படத்தில்
இது ஒரு பொன்மாலைப் பொழுது..

இலங்கை வானொலியின்
பாடல்கள் தரவரிசைப் பட்டியலில் ஓராண்டுக்கும் மேலாக முதல் இடத்தில் இருந்த பாடல்.

ராஜபார்வை படத்தில்
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

47 நாட்கள் படத்தில்
மான் கண்ட சொர்க்கங்கள்…

மின்சார கனவு படத்தில்..
தங்கத்தாமரை மகளே…
வெண்ணிலவே வெண்ணிலவே..

மண்ணில் இந்தக் காதல் அன்றி என்ற பாடலில் ஒரு நீண்ட வரியை
மூச்சு விடாமல் தொடர்ந்து பாடி
புதிய வரலாறு படைத்தார்.

ஜேசுதாசுக்கு
ஹரிவராசனம் உள்ளிட்ட ஐயப்பன் பாடல்கள் போல
எஸ்பிபிக்கு சிவஸ்துதி
அழியாப் புகழைத்
தேடித் தந்திருக்கின்றது..

எஸ் பி பி யின் உடல் மறைந்தாலும்
அவரது குரல்
நாள்தோறும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அருணகிரி
9444 39 39 03

News

Read Previous

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Read Next

கண்ணீர்க்கடலின் சுநாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *