எவரையும் கேவலமாக நினைக்காதீர்கள்.

Vinkmag ad

எவரையும் கேவலமாக நினைக்காதீர்கள்.
****************

பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஆண்டு விழாவில் நாடகங்கள் நடத்தப்படும். அந்த நாடகங்களில் ஒருவர் பிரதமராக வேடமேற்பார். இன்னொருவர் அமைச்சராக வேடமேற்பார். பிச்சைக்காரராக ஒருவர், போலீஸ்காராக ஒருவர், கடைக்காரராக ஒருவர் என எல்லோரும் வெவ்வேறு வேடங்களை ஏற்றுக்கொள்வார்கள்.

எல்லோருமே அவரவருக்குத் தரப்பட்ட பாத்திரத்தில் நடிப்பார்கள்.மாணவர்களின் நடிப்பாற்றலைப் பார்த்து மூன்று நடுவர்கள் மதிப்பெண் போடுவார்கள்.

விழாவின் இறுதியில் பரிசுகளும் வழங்கப்படும்.

சில சமயம் என்ன நடக்குமெனில் பிரதம மந்திரியாக, நீதிபதியாக வேடமிட்டவருக்குப் பரிசு கிடைக்காது. நன்றாக நடிக்காமல் சொதப்பியிருப்பார்கள் அவர்கள். அதே சமயம் பிச்சைக்காரராக வேடமிட்டிருப்பவர் தம்முடைய அபாரமான நடிப்பால் பரிசை வென்றுவிடுவார்.

இந்த உலகத்தில் ஒருவர் மிகப் பெரும் ஜமாஅத்தின் தலைவராக வலம் வரலாம். மிகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞராக முத்திரை பதிக்கலாம். ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாமாக இருக்கலாம். ஒருவர் அதே பள்ளிவாசலில் கூட்டிப் பெருக்குகின்ற சாதாரண ஊழியராக இருக்கலாம். ஆனால் நாளை மறுமை நாளில் யாருக்கு எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது எவருக்கும் தெரியாது.

நடுவர்கள் அனைத்தையும் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதருக்கு அருகிலும் இரண்டு வானவர்கள் இருக்கின்றார்கள். வலப் பக்கத்தில் ஒருவர். இடப் பக்கத்தில் ஒருவர். இரண்டு வானவர்களும் அந்த மனிதர் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் சரியாகப் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள். (பார்க்க: அத்தியாயம் 50 காஃப் 17, 18)

நாளை மறுமை நாளில் யாருடைய கணக்கில் என்ன வரும் என்பதை யாருமே அறிய மாட்டார்கள். அந்த நாளில் எவருக்கு எந்த அந்தஸ்து கிடைக்கும் என்பதை எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

எனவே எந்தவொரு மனிதரையும் அற்பமாக நினைக்காதீர்கள். எந்தவொரு மனிதரையும் இழிவுபடுத்தாதீர்கள். எவரையும் கேவலமாக நடத்தாதீர்கள்.

அல்லாஹ்வின் பார்வையில் யாருக்கு எந்த அந்தஸ்து கிடைக்க விருக்கின்றது என்பது எவருக்குமே தெரியாது. இந்த உலகத்தில் மிகப்பெரும் ஜமாஅத்தின் தலைவராக, பெரும் மார்க்க வழிகாட்டியாக வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்கள் எந்த நிலைமைக்கு ஆளாவார்கள் என்பது எவருக்கும் தெரியாது. மறுமை நாளில் எல்லாமே தெளிவாகும்.

எனவே இந்த உலகத்தில் அல்லாஹ் உங்களை எந்த நிலைமையில் வைத்திருந்தாலும் பொறுமையயை மேற்கொள்ளுங்கள். நன்றி செலுத்தியவாறு இருங்கள்.

– மௌலானா யூசுப் இஸ்லாஹி
மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

சகோ.அஸீஸ் லுத்புள்ளாஹ்

News

Read Previous

விண்வெளி விஞ்ஞானத்தில் பெண் முன்னோடிகள்

Read Next

மாற்றத்தின் தூதர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *