உலக ரோஜா தினம்

Vinkmag ad

இன்று பிப்ரவரி, 7
உலக ரோஜா தினம்.

அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா.
ரோஜாக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் கண்டு பிடிக்கப்பட்டது.

ஃப்ரான்ஸ் நாட்டின் தேசிய மலர் ரோஜா ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. இதில் வண்ண மலர்களும் உண்டு. இவற்றின் அழகு மற்றும் நறுமணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.

பழங்கால கிரேக்கர்களும் ரோமானியர்களும் ரோஜாவைத் தமது காதல் தேவதைகள் என்று சொல்லப்படுகிற ஆபிரோடைட் மற்றும் வீனஸ் இன் அடையாளம் என்று கருதினார்கள். ரோம் நகரத்தில் ரகசிய அல்லது அந்தரங்கமான விஷயங்களின் விவாதம் நடக்கும் அறையின் வாசலில் ஒரு காட்டு ரோஜா வைக்கப்படும்.
ரோசா இதன் பொருள் ஒரு ரகசியத்தை பாதுகாப்பாக வைத்திருத்தல் இந்தப் பழங்கால ரோமானிய பழக்கத்திலிருந்தே உண்டானது.

ஆரம்ப காலக் கிறிஸ்துவர்கள் ரோஜாவின் ஐந்து இதழ்களை கிறிஸ்துவின் ஐந்து காயங்கள் என்று கருதினார்கள். சிவப்பு ரோஜா கிருத்துவ உயிர்த்தியாகிகளின் ரத்தத்தின் குறியீடு என்பதாக இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறகு கன்னி மேரியுடனும் ரோஜாக்கள் சம்பந்தப் படுத்தப்பட்டன.
1800 களில் ஐரோப்பாவில் சீனாவிலிருந்து தொடர்ந்து பூக்கும் ரோஜாக்கள் அறிமுகத்துடன் ரோஜா வேளாண்மை தானாகவே ஆரம்பமானது.

ரோஜாவின் இத்தர் எனப்படும் ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானகம் பிரெஞ்சு மக்களிடையே மிகவும் உபயோகப்படுத்தக் கூடியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ரோஜா ஸ்கோன் எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானகம் பயன்படுத்தப்படுகிறது.

ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.

News

Read Previous

தஞ்சை குடமுழுக்கு கவிதை

Read Next

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் விழா வாழ்த்துக் கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *