உதித்து வா உதயசூரியனே!!

Vinkmag ad

உதித்து வா உதயசூரியனே!!

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் சமூகநீதிக்கான குரலினை, எழுத்தினை அவரது பணியினை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது.

தன் முதல் மனைவியின் தாலிச்சரட்டை தாலிக்கயிறாக்கி முரசொலி பத்திரிக்கைக்கான அச்சுக்கூலியினை அவர் வழங்கியபோது, அவர் தாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றோ, அதிகாரத்தினை கைப்பற்ற வேண்டும் என்றோ நினைத்திருக்கவில்லை.

தமிழ்மொழியினை இந்தி விழிங்கிட எத்தனித்த போது அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தது ரயில் மறியல் போராட்டம் தான்.

ஆனால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து களத்தினை சூடுபடுத்திட தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்து ஆயிரக்கணக்கான இடங்களில் அன்று நடைபெற்ற மறியல் களத்தில் வரலாற்றில் கல்லக்குடியின் பெயரை அழுந்தப்பதிவு செய்த காலத்திலும் அவரின் எண்ணத்தில் அதிகார மையத்தின் ஆசை இருந்திருக்கவில்லை.

மனைவி உடல்நலமின்றி படுத்த படுக்கையாய் கிடந்த போதும் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கூட்டத்திற்கு போக வேண்டும் என்கிற முடிவெடுத்து தலைவர் கலைஞர் அவர்கள் கிளம்புகிறார்.

படுத்த படுக்கையாய் உயிருக்கு போராடும் மனைவியைவிட அன்று அந்தக்கூட்டம் அவருக்கு பெரிது.

ஒப்புக்கொண்ட கூட்டம் முடிந்து போக்கு லாரி ஒன்றில் இடம்பிடித்து அதிகாலை தன் ஊர் வந்து சேர்கிறார் தலைவர் கலைஞர்.

சாலையில் இறங்கி வீட்டை நெருங்குகையில் வீட்டில் கூட்டம்.

உள்ளே நுழைகையில் அழுகைச்சத்தம் காதில் ரீங்காரமிடுகிறது.

முகம் முழுதும் மஞ்சள் பூசி நெற்றி நிறைய பொட்டு வைத்து தலைமாட்டில் விளக்கெறிய தன் மனைவியினை கண்ட தலைவர் கலைஞர் அவர்கள் இருக்கிற கூட்டத்தின் அழுகையினை ஆரவாரங்களை சற்றும் கவணிக்காதவராய் தன் மனைவியின் பூத உடலருகே போய் முழங்கால் மண்டியிட்டு அவர் நெற்றியில் அழுந்த முத்தமிடுகிறார்.

தனது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியில் அந்நிகழ்வினை குறிப்பிடும் போது அன்று சுற்றத்தார் என்ன நினைத்திருப்பார்கள் என்கிற கவலை இல்லை.

அன்று என்னிடம், அவளுக்கு தருவதற்கு முத்தத்தினைத்தவிர வேறில்லை என எழுதினார்.

தன் வாழ்நாளின் பெரும் பகுதியினை தமிழ் தமிழ் என்றே பேசி, எழுதி, வாழ்ந்த அந்த தலைவன் இன்றிருக்கும் நிலை உள்ளபடியே மனம் கனக்கிறது.

தலைவர் கலைஞர் மேல் ஆயிரம் விமர்சனங்கள் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர் தமிழுக்காற்றிய, தமிழகத்தில் சமூக நீதிக்காய் ஆற்றிய பணிகளினை யாரும் மறுத்துவிடவோ மறந்துவிடவோ முடியாது.

கல்வியில்…
வேலைவாய்ப்பில்…
சமூகநீதியில்…
என அளப்பறிய பங்கினை தமிழகத்திற்கு வழங்கிய உதயசூரியன் இன்று அசைய இயலாமல்..

இயற்கைக்கு மாறாக செயல்படுதல் கூடாது என்பதே அறிவு.

ஏதாவது அதிசயம் நடந்து மீண்டும் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக மேடையில் அமர்ந்து என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புக்களே! என அழைக்க வேண்டும் என நினைக்கும் பகுத்தறிவு பாடம் நடத்திய தலைவர் கலைஞரின் பிள்ளைகள் மட்டுமல்ல இன்று தானும் கூட அப்படி ஒரு நிகழ்வினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்…

சமூக நீதிக்கு எதிரான சக்திகள் முன்னெப்போதையும் விட வேகமாய் எழ நினைக்கிறது.

சாமானியனுக்காகவும் பேசிய அதிகார மொழிகள் சாலைகளை எட்டுவழியாக்க ஏறி மிதிக்கிறது

சாமானிய மக்களும் பொறியாளராக , மருத்துவராக ஒளி பரப்ப வேண்டுமென்று நீ கொண்டு வந்த ஒற்றைச்சாளர முறை கரைந்து நீட்டாக நீண்டு ஏழைகளின் குரல்வளை அழுத்துது.

நீ ஓடியாடி வாழ்க்கையினைத் துவங்கிய அந்த திருவாரூர் தஞ்சை காவிரி டெல்டா பகுதிகள் இன்று ராட்சத துளையிடும் கருவிகளால் துண்டாடப்படுகிறது

எண்ணெய்ப் பிசுக்கொட்டும் ஈரத்துணியோடு உன்னை வளர்த்த மண்ணின் விவசாயிகள் வீனாய்போய்விடுவோம் என்கிற அச்சத்தில் போராட்ட களத்தில்

உடைமை வர்க்கத்திற்கு மட்டுமான ஓளியினை ஊரெங்கும் பரப்பிய உதயசூரியனே!

உதித்துவா…
த.ப.கோ .. அந்தியூர் …

News

Read Previous

முழங்கால் வலி

Read Next

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *