ஈஸ்டர் தீவில் மனித குடியேற்றம் நிகழ்ந்தது எப்படி?

Vinkmag ad
ஈஸ்டர் தீவுகள் உலகின் மிக தொலைவில் உள்ள மனித குடியேற்றம் நிகழ்ந்த தீவு. 64 சதுரமைல் பரப்பளவே உள்ள அதன் ஜனதொகை 9000 பேரை தாண்டியதில்லை. ஈஸ்டர் தீவுகளை தாண்டி மனிதர் வசிக்கும் இடம் என்றால் கிழக்கே 2300 மைல் தொலைவில் சிலே உள்ளது, வடகிழக்கே டஹிட்டி 2500 மைல் தொலைவில் உள்ளது. 54 பேர் மட்டுமே வசிக்கும் பிட்கெயின் தீவு தான் மேற்கே 1400 மைல் தொலைவில் உள்ளது.
Inline image 1

இப்படி அனைத்து தீவுகூட்டங்களில் இருந்தும் தனிமைபட்டு இருக்கும் ஈஸ்டர் தீவுகளில் கற்கால மக்கள் எப்படி குடியேறினார்கள்? நாலாயிரம் கிமி தொலைவு தாண்டி காம்பஸ் போன்ற எந்த உபகரணமும், பாய்மரபடகு போன்ற எந்த படகும் இன்றி எப்படி அங்கே மனிதர்கள் குடியேறி நாகரிகம் அமைந்தது?

ஈஸ்டர் தீவுகளில் மனிதன் குடியேறியது கடல் பரவலில் மிக பெரும் சாதனை என்கிறது பி.பி.எஸ் தொலைகாட்சி. ஈஸ்டர் தீவுகளில் குடியேறிய பாலினேசியர்கள் மிக பெரும் கடல்பயணிகள். இந்திய, பசிபிக் சமுத்திர தீவுகளில் கல் கருவிகளை கொண்டு அமைக்கபட்ட படகுகளில் மடகாஸ்கர் முதல் ஹவாயி வரை
பரவியவர்கள். பிற்காலத்தில் கடல்பயணம் செய்த ஐரோப்பியர்களில் கூட துணிந்தவர்களே கடலில் இறங்கினார்கள். ஆனால் பாலினேசிய குடிகளில் அனைவரும் இயல்பாக கடலில் கண்காணாத இடங்களுக்கு பயணித்து குடிபெயரும் துணிவை பெற்றிருந்தனர்.

நட்சத்திரங்கள், கிரகங்கள் உதவியுடன் மரபடகுகளில் ஏறி பெரும் தொலைவுகளை பாலினேசியர்கள் கடந்தனர். 1976ல் இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய பாலினேசியர்கள் கால படகு ஒன்றை கட்டி, காம்பஸ் முதலிய எந்த உபகரணமும் இன்றி ஹவாயி தீவில் இருந்து டஹிட்டி தீவுகளுக்கு சுமார் நாலாயிரம் மைல்கள் பயணித்து இத்தகைய பயணம் சாத்தியம் என ஒரு குழு நிருபித்தது.
பாலினேசியர்களின் படகுகள்
Inline image 2

கிமு 5500 வாக்கில் ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே உள்ள தீவுகூட்டங்களில் இருந்த பாலினேசியர்கள் மெதுவாக படகுகளில் பயணித்து அங்கே இருந்த பசிபிக் சமுத்திர தீவுகளில் குடிபெயர்ந்தார்கள். டஹிட்டி தீவுகளுக்கு இவர்கள் வர கிபி 300ம் ஆன்டு ஆனது. அதன்பின்  கிபி 400ம் ஆண்டுவாக்கில் இவர்களில் ஒரு சிறுகுழுவினர் ஈஸ்டர் தீவுகளில் குடியேறினார்கள்.

ஈஸ்டர் தீவுகளில் பாலினேசியர்கள் சர்க்கரைவள்ளிகிழங்கு பயிரிட்டது புது குழப்பத்தை ஏற்படுத்தியது. சர்க்கரைவள்ளிகிழங்ங்கு அன்று தென்னமெரிக்காவில் மட்டும் விளையும் கிழங்கு. ஆக ஈஸ்டர் தீவுகளில் குடியேறி அதன்பின் தென்னெமெரிக்கா சென்று மீண்டும் அங்கிருந்து ஈஸ்டர் தீவுகளில் இவர்கள் குடியேறி இருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எப்படியோ கிபி 400ம் ஆன்டு ஈஸ்டர் தீவுகளில் குடியேறிய பாலினேசியர்கள் அதன்பின் கிபி 1500ம் ஆன்டுவாக்கில் பல்கிபெருகி 9000 ஜனதொகை எனும் எண்ணிக்கையை அடைந்தனர். இந்த காலகட்டத்தில் கிபி 1200 முதல் 1500 வரை இவர்கள் நாகரிகம் உச்சகட்டத்தை அடைந்தது. கல்லால் ஆன கருவிகளை கொண்டு ஈச்டர் தீவுகளில் காணப்படும் ம்வோயி என்ற சிற்பங்களை படைத்தனர். சக்கரத்தை கூட கண்டுபிடித்திராத இம்மக்கள் பல டன் எடையுள்ள இக்கற்சிலைகளை எப்படி நகர்த்தினர், நிற்கவைத்தனர், செதுக்கினர் என்பது இன்ன்றும் வியப்புகுரிய விஷயமாகும்.
Inline image 3
(ஈஸ்டர் தீவுகளின் மாவோயி கற்சிலைகள். பல டன் எடையுள்ள இவை உலோகங்களின், சக்கரத்தின் பயன்பாட்டை அறியாத கற்கால மக்களால் செதுக்கப்பட்டு மரங்களை வெட்டி போட்டு அதன்மேலே உருட்டப்பட்டு தேவையான இடத்துக்கு நகர்த்தப்பட்டன)

எப்படியோ 1500ம் ஆன்டுவாக்கில் ஜனதொகை உச்சத்தை அடைந்ததும் அவர்களுக்கு உணவுபஞ்சம் ஏற்பட்டது.தீவின் பரப்பளவு 64 சதுரமைல் மட்டுமே. அதில் உள்ள மரங்கள் அனைத்தும் வெட்டிவீழ்த்தப்படன.உணவுக்காக கடும் போர் மூன்டு கடைசியில் மனிதமாமிசம் சாப்பிடும் நிலைக்கு அவர்கள் சென்றார்கள். இந்த காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் ஈஸ்டர் தீவுகளில் வந்து இறங்கினார்கள். அதன்பின் அடிமை வியாபாரம் செய்ய வந்தவர்கள் தீவுமக்கள் அனைவரையும் அடிமைகளாக பிடித்து சென்று விற்ரார்கள். நீண்ட நெடிய போராட்டத்துக்குபிறகு அவர்கள் வம்சாவளியினர் தம் தாய்மண்ணுக்கு திரும்பி சிலிநாட்டின் மாநிலமாக ஈஸ்டர் தீவுகலை அறிவித்து இன்று சுற்றுலா மூலம் வருமானம் ஈட்டி வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் பாரம்பரிய சின்னமான கற்சிலைகளை பார்க்க வருடா வருடம் ஐம்பதாயிரம் டூரிச்டுகள் இந்த தீவுகளுக்கு வருகின்ரனர்.பண்பாடு வாழவைக்கும் என்பது ஈஸ்டர் தீவுவாசிகள் விவகாரத்தில் உண்மையாகிவிட்டது.
நன்றி: பிபிஎஸ் தொலைகாட்சி வலைதளம்
Thanks to :
செல்வன்

News

Read Previous

தேரிருவேலி அலி பாதுஷா த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

Read Next

இஸ்லாத்தில் இல்லறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *