இ -புக் பயனும் மின்கவி சேவையும்

Vinkmag ad
சமீபகாலமா புத்தகப்பிரியர்கள் மத்தியில் அதிகமா உச்சரிக்கப்படும் சொல் இ -புக் . சுமார் 1971 ஆம் ஆண்டு Hart  என்பவரால் இபுக் என்பது உருவாக்கப்பட்டது . வெளிநாடுகளில் பிரபலம் அடைந்தாலும் இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தால் kindle e -reader  என்னும் கருவியின் மூலம் இந்தியா எங்கும் இ  புக் மோகம் பரவ தொடங்கியது .
அதுவரை இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் புத்தகவடிவில் மட்டுமே படிக்கும் நிலை மேலோங்கி இருந்தது இன்றளவும் இருக்கிறது . நவீன மாற்றங்கள் முன்னேற அனைவரின் கைகளில் android தவழ இ-புக் மெல்ல மெல்ல உயிர்பெற்றது .
இன்று amazon  நிறுவனம் பிரத்தியோகியமாக  ebook  க்கு  என ஒரு தனி பிரிவு  கொண்டுள்ளது . ஆங்கில புத்தகங்கள் மட்டுமே அதிக அளவில் ebook  ஆக மாற்றம் பெற்று அழியா படைப்பாய் இன்று உலாவுகிறது .
எனினும் தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு போதுமான இ-புக்  விழிப்புணர்வின்மையால் இன்றளவும் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தர்களின் படைப்புகள் மட்டுமே புத்தக கண்காட்சியை அலங்கரிக்கிறது .
அழகா கவிதை ,சிறுகதை ,நாவல் போன்றவை எழுத தெரிந்த சுயஎழுத்தாளர்களின் படைப்புகள் வெறும் காகித பொருளாகவே இன்றளவும் இருந்து வருகிறது . முட்டிமோதி பல ஆயிரங்கள் செலவுசெய்து புத்தக வடிவில் தங்கள் படைப்புகள் காண சுயஎழுத்தாளர்கள் தவம் கிடைக்கும் நிலையே இங்குள்ளது .
அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரமில்லா சுயஎழுத்தாளர்கள்  என்ற இருவகை இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில்  “மின்கவி”  என்ற e publishing service ஐ  தொடங்கி நடத்தி வருகிறோம் .இதன் மூலம் சுய எழுத்தாளர்களும் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு தனக்கென ஓர் அங்கீகாரம் பெறச்செய்வதே மின்கவி நோக்கமாகும் .
மேலும் பழங்கால அறிய சிறந்த புத்தகங்கள் , தம் தாய் ,தந்தையின் புத்தகமென கிடைப்பில் போட்டு  அழியும் தருவாயில் உள்ள படைப்புகள்  போன்றவற்றை மின்புத்தகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம் .
தன் தலைமுறைக்கு விட்டு செல்லும் நிலம் ,பொன், மட்டுமே சொத்துக்கள் அல்ல . நன்னெறிபோதிக்கும் நலப்படைப்புகளும் விலைமதிப்பில்லா சொத்துக்களாகும் .
நாளும் படித்திடுவோம் இனி நாமும் படைத்திடுவோம்….!!! 
புத்தகங்களை மின் புத்தகமாக  மாற்றம் செய்ய
contact :
M Vignesh
Founder and E-Dev  @ மின்கவி
9626227537

News

Read Previous

வீரகேரளர் ஆட்சியில் கொங்குநாடு

Read Next

வைரஸ் எனும் எதிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *