இராமேஸ்வரம் ( தலவரலாறு )

Vinkmag ad

   இராமேஸ்வரம் ( தலவரலாறு )

 
     —  இராமபிரான் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களை ஒழித்து சீதையை மீட்டு கொண்டு
வரும் வழியில் இராமேஸ்வரத்தில் உள்ள கந்தமானத்தில் தங்கினார். சிவனை  வழிபட வேண்டும் என்று
முனிவர்கள் கூறியதால்  லிங்கம் ஒன்று கொண்டு வர அனுமனை கேட்டுக் கொண்டார். அனுமன் லிங்கம்
கொண்டு வரத்  தாமதமானதால் சீதை மணலால் லிங்கத்தை பிடித்து வைக்க  அதையே  இராமபிரான்
பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இராமர் சிவனை லிங்க வடிவில்
பிரஷ்டை செய்து வழிப்பட்டதால் இரமேஸ்வரம் என்றும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  இராமர் சிவனை
லிங்க வடிவில் வழிப்பட்டதால்   இரமேஸ்வரம் என்றும் அவர் வணங்கிய லிங்கமே இராமலிங்கம்,
இராமேஸ்வர் என்று வழங்கப்படுகிறது. மலையேறிக் கடலாடு என்ற முறையில் கேதாரம், முக்கியமாக
காசிக்கு செல்வர்களின் புனித யாத்திரை இராமேஸ்வரத்தில்தான் பயனுற முடிவு பெறும், இமயத்தின்
கேதார்த்திற்கும் அப்பால் இருந்து வழிந்தோடி வரும் கங்கை நீரை காசியிலிருந்து எடுத்து  அதை 
இராமேஸ்வர இராமநாதருக்கு அபிஷேகம் செய்வதும், இராமேஸ்வர தீர்த்தத்தையும் மணலையும் காசிக்கும்
கேதாரத்திற்கும் கொண்டு  போய் அபிஷேகம் செய்வதும், மணலை கரைப்பதும் முக்கியமான காரியம்
எனக் கருதும் வழக்கமும் நம் இந்துக்களுக்கிடையில் இருக்கிறது
 
                                                                                      பிராத்தனை  
  பிதுர் கடன் செய்தல், காலஞ் சென்ற மூதாதையர்கள் நினைந்து வழிபடல், பூர்வ ஜென்ம பாவங்கள் விலக
    இத்தலத்தில் வழிபடுகிறார்கள்.  கிரக தோஷங்கள் விலக இத்தலம் சிறப்பானது என்று கருதப்படுகிறது.
    இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு முக்தியும், மன நிம்மதியும் கிடைக்கும். சேது தீர்த்தத்தில் நீராடி
    இராமேஸ்வரத்திரையை வழிபட்டால் மக்கட் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு, இறந்தவர்களின்
   ஆஸ்தி இங்கு கரைக்கப்படுகிறது.
 
                                                    நேர்த்தி கடன்.
  கடலில் குளித்து விட்டு கோயிலிலுள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட பாவங்கள்
  விலகி புண்ணியம்  என்பது நம்பிக்கை. கலச அபிசேகம், சங்காபிசேகம், கங்கை அபிசேகம்,
  பன்னீர் அபிசேகம் செய்யலாம். சுவாமி…, அம்பாளுக்கு வேஷ்டி, சேலை படைத்தல், அன்னதானம்
  வழக்கமான அபிசேகம் ஆராதனைகள்.
 
                                            சந்நிதிகள்.
 
இராமநாதர் சந்நிதி  :        இது மூலஸ்தானம். இங்குள்ள இலிங்கம் சீதையால் ஆக்கப்பெற்றது.
 
விசுவநாதர்  சந்நிதி  :        அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கம். இராமநாதர் சந்திதிக்கு வடமுறம்
                                                   இருக்கிறது. கோயில் முதல் பூசை இந்த சந்நிதியில்தான் தொடங்கும்.
 
விசாலாட்சியம்பிகை ;     விசுவநாதர் தேவியான விசாலாசியம்பிகை. இந்த அம்பிகைக்கும்
                                                   விசுவநாதருடன் சேர்ந்தே முதற் பூசை நடக்கிறது.
 
உற்சவ மூர்த்திகள்   ;         மான் மழுவேந்திய இரு கரங்களும் கூப்பிய இரு கரங்களும் தொடையில்
                                                  வால் ஓட்டியும் உள்ள நந்திகேசுவரர் விக்கிரம் மிகவும் அற்புதமான சிற்பம்.
 
பர்வர்த்தினி சந்நிது  :        மூலவரின் தேவியார் இவர். மதுரையிலிருப்பது போல் சுவாமி சந்நிதிக்கு வலது
                                                  பக்கம் இருப்பதால் மகத்துவம் அதிகம். இங்குள்ள ஸ்ரீ சக்கரம் அவசியம் காணவும்
 
    
தீர்த்தங்கள்               :         தீர்த்தங்கள்  விசேசமானவைகள். சிறப்பு வாய்ந்த கோடி தீர்த்தம் உட்பட கோயிலுக்குள்
                                                 22 புண்ணிய தீர்த்தங்கள். மற்றும் வெளியே 31 புண்ணிய தீர்த்தங்கள் உண்டு.
 
 
இத்தலத்து பதிகங்கள் ;    திருஞான சம்பந்தர் இராமேஸ்வர திருப்பதிகம்.
                                                  திருநாவுக்கரச்ர் இராமேஸ்வர திருப்பதிகம்.
                                                  வால்மீகி இராமாயணம்.
                                                  அருணகிரி நாதர் திருப்புகழ்,
 
          இராமேஸ்வரத்தின் புராணப் பெயர்.     திருவி   ராமேச்சுரம் சேதுபந்தம்
                                              
                                   
       அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை.,,,
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

………………..
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

News

Read Previous

மகளிர் தினம்

Read Next

சர்வ தேச மகளிர் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *