இந்திய தேசத்தின் ஜனநாயக மாண்பினை பாதுகாக்க வாக்குச்சீட்டு தேர்தல் நடைமுறையே சாத்தியமாகும்!

Vinkmag ad
இந்திய தேசத்தின் ஜனநாயக மாண்பினை பாதுகாக்க வாக்குச்சீட்டு தேர்தல் நடைமுறையே சாத்தியமாகும்!
எலக்ட்ரானிக் ஓட்டு மிஷின் மூலம் நடத்தப்படும் தேர்தல் நடைமுறைகள் விரைவாகவும்,இலகுவாகவும்,நேர்மையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையை உபி கோவா உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல்கள் தகர்த்து விட்டன.
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மத்திய அரசின் அனைத்து துறைகளும் பாஜகவின் கொள்கை பரப்பும் துணை அமைப்புகளாகவும்,இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளை சிதைக்கும் மோசடி அமைப்புகளாகவும் செயல்பட ஆரம்பித்து விட்டன.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கிய அம்சமே தேர்தல் நடைமுறைகளும் தேர்தல் ஆணையமும் தான்.
கொலையாளிகள்,கொள்ளைக்காரர்கள்,ஊழல்வாதிகளை முதல்வர்கள்,அமைச்சர்கள்,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி உயர்த்தும் வகையில் தற்போதைய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வரும் வரை தேர்தல் ஆணையத்தின் மீதும்,வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதும் மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது இல்லாமல் போனதற்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்துள்ள மோ(ச)டி தான் காரணமாகும்.
ஓட்டு மிஷினில் மோசடி நடக்க வாய்ப்பில்லை என்று கூறி வந்த தேர்தல் ஆணையத்தின் முகத்தில் கரியை பூசும் வகையில் டெல்லி சட்டமன்றத்திற்குள் ஆம் ஆத்மி உறுப்பினர் ஒருவர் ஓட்டு மிஷினில் எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்று நிரூபணம் செய்து விட்டார்.
இதுபோன்ற மோ(ச)டிகளுக்கு இடம் தரக்கூடாதென்று உலகின் மிகப்பெரிய வல்லரசு என சொல்லப்படும் அமெரிக்காவே ஓட்டு மிஷினை தூக்கி எறிந்து விட்டு,வாக்குச்சீட்டு நடைமுறையை கொண்டு வந்து விட்டன.
தேர்தல் ஆணையத்தின் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள தேர்தல் ஆணையம் மீண்டும் ஓட்டு மிஷின் நடைமுறைக்கு ஆதரவு தெரிவிக்குமானால்…அதை கடுமையாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு பாஜக அல்லாத அனைத்துக்கட்சிகளுக்கும் உண்டு.
தற்போது இந்திய தேசத்தின் ஜனநாயக மாண்பினை பாதுகாக்க உண்மையான தேர்தல் நடைமுறை தேவைப்படுகிறது.அதற்கு வாக்குச்சீட்டு தேர்தல் நடைமுறையே சாத்தியமாகும்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி

News

Read Previous

மௌத்தை மறந்து வாழும் மனிதர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்!

Read Next

வெள்ளரிக்காய்

Leave a Reply

Your email address will not be published.