ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

Vinkmag ad

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம்

ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

(AUTO LOAN SCHEME)

தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது?

இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகிறது.

2 வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு?

அ. கேஸ் பொருத்தப்பட்ட (LPG) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ 1.21 இலட்சம்

ஆ சரக்கு (carrier) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை         ரூ 1.28 இலட்சம்

இ பிற ஆட்டோ வாங்க கொடுக்கப்படும் கடன் தொகை ரூ. 1 இலட்சம் இக்கடன் தொகையில் 95 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் ஏற்கும் மீதமுள்ள 5 விழுக்காடு தொகையைப் பயனாளி ஏற்க வேண்டும்

3. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

அ. மேற்குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆ. ஆட்டோ ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (licence) வைத்திருக்க வேண்டும்.

இ. ரூ. 800/- அல்லது ரூ. 1000/- தொகையை பங்கு மூலதனமாக ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.

ஈ. தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) வங்கியில் வைப்பு நிதியாக (Fixed Deposit) ரூ. 5000/- செலுத்த வேண்டும். (இதற்கு வட்டி தரப்படும்). முற்றும் தொடர் வைப்பு நிதியாக (Recurring Deposit) பிரதி மாதம் ரூ. 500/- நான்கு வருட காலத்திற்குச் செலுத்த வேண்டும்.

4. கடனுதவி பெற வருமான உச்ச வரம்பு உண்டா?

  ஆம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், நகர்புறம் எனில் ரூ. 54,500/- க்கு மிகாமலும், கிராமப் புறம் எனில் ரூ. 39,500/- க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

5. இத்திட்டத்தின் கீழ் டாம்கோ நிறுவனம் வழங்கும் கடனை விட ஆட்டோ விலை அதிகமிருப்பின் என்ன செய்வது?

 மீதமுள்ள கடன் தொகையை ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கம் அல்லது தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) ஆகியவற்றிலிருந்து பெறலாம்.

6. கடன் தொகையில் பயனாளி எத்தனை விழுக்காடு பங்கு தொகை        அளிக்க வேண்டும்?

 வழங்கப்படும் கடன் தொகையில் பயனாளி 5 விழுக்காடு அவருடைய  பங்கு தொகையாக அளிக்க வேண்டும். மீதமுள்ள 95 விழுக்காடு கடன் தொகை டாம்கோ நிறுவனத்தினரால் வழங்கப்படும்.

7. கடனுதவி பெறுவதற்கு பிணையம் (Surety) ஏதும் தர வேண்டுமா?
ஆம். பயனாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் பிணையம் மற்றும் ரூ. 5000/- வைப்பு தொகை செலுத்த வேண்டும்.

8. கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கான ஆண்டு வட்டி 6 விழுக்காடு மட்டுமே ஆகும்.      

9. கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனை 4 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

10. கடன் எவ்வாறு திரும்ப வசூலிக்கப்படுகின்றது?

ஆட்டோ தொழிற் கூட்டுறவுச் சங்கம் பயனாளியிடமிருந்து பிரதி மாத தவணை தொகையை வசூலித்து தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாட்கோ) வங்கிக்கு செலுத்தும். தவணை தவறினால் பயனாளி தாய்கோ வங்கிக்கு செலுத்திய வைப்பு நிதியிலிருந்து ஈடுகட்டப்படும்.

நன்றி : நர்கிஸ்

ஜனவரி 2012

http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-TNMEDC.pdf

News

Read Previous

விதவை

Read Next

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

Leave a Reply

Your email address will not be published.