அறிவியலைப் பரப்புவதில் புத்தகங்களின் பங்கு மகத்தானது

Vinkmag ad

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை-இன்றும் பொருந்தி வருகிறது..

 

அறிவியலைப் பரப்புவதில் புத்தகங்களின் பங்கு மகத்தானது

 

அறிவியல் கண்ணோட்டம் (Scientific temper)  என்பது ஒரு வாழ்வியல் முறை. தனது டிஸ்கவரி ஆப் இந்தியா நூலில் ஜவஹர்லால் நேரு இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தி நம் வாழ்வில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். கேள்வி கேட்பது, கூர்ந்து நோக்குவது, கருதுகோள்களை உருவாக்குவது, ஆய்வு செய்வது ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவியல் வழிமுறைதான் அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படை. எண்ணற்ற வறட்டுக் கோட்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் வென்று நிலைத்துநிற்பது மட்டுமல்ல, விழிப்புணர்வு, உண்மையான தகவல்கள், பகுத்தறிவு, அறிவுதளத்தில் அமையும் விவாதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் அறிவியல் கண்ணோட்டம் மிகவும் அவசியமானது.

அறிவியல் அல்லது அறிவியலுடன் தொடர்புடைய விஷயங்களை சாதாரண மக்களிடம் எடுத்துச் செல்ல உதவும் தகவல் தொடர்பு, அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடையே ஏற்படுத்துவதில் முக்கியமான பங்கினை வகிக்கக்கூடியது. விக்ஞான் பிரச்சார், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பிற்கான தேசிய கவுன்சில்(NCSTC)  ஆகியவற்றின் மூலமாக இந்தியா முழுதும் அறிவியல் கருத்துகளைப் பரப்பி பிரபலப்படுத்துமாறு அறிவியல் தொழில்நுட்பத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. பல்வேறு கருவிகள், செயல்நுட்பங்கள், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அறிவியல் கருத்துகள் மக்களைச் சென்றவதற்கு இந்த நிறுவனங்கள் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் அறிவியல் தொழில்நுட்பத்துறை வலியுறுத்தியுள்ளது.

அறிவியல் தகவல் தொடர்பில் முக்கியமான சாதனங்களாகவும் மக்களிடையே அறிவியல் கருத்துகளை எடுத்துச் செல்லவும் அறிவியல் புத்தகங்கள் பயன்படுகின்றன. அதனால்தான் அறிவியல் நூல்களையும் செய்திமடல்களையும் கொண்டு வருவதை விக்ஞான் பிரச்சார் நிறுவனம் தன் முக்கியமான நடவடிக்கையாக கருதுகிறது. பிரபலமான விஞ்ஞானிகள், கல்வித்துறையைச் சேர்ந்த சிறந்த வல்லுநர்கள், பிரபலமான அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் எல்லாம் விக்ஞான் பிரச்சாரின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக நிற்கின்றனர். உரிய நேரத்தில் நவீன அறிவியல் தகவல்கள் மக்களிடம்  போய்ச் சேர்வதை இந்த புத்தகங்கள் உத்தரவாதப்படுத்து கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப் படுகின்றன. அறிவியல் கட்டுரைகளை எழுதித் தரும் எழுத்தாளர்களுடன் உள்ளடக்கம் குறித்து விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

விக்ஞான் பிரச்சார் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மற்ற இந்திய மொழிகளிலும் 300  புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. விஞ்ஞானிகளின் வரலாறுகள், இயற்கை வரலாறு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், உடல்நலன், அறிவியல் வரலாறு போன்ற தலைப்புகளில் அவை கொணரப்பட்டிருக் கின்றன. முக்கியமான பழைய புத்தகங்கள் மீண்டும் பதிப்பிக்கப்படுகின்றன. www.vigyanprasar.gov.in  என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுக்குத் தேவையான புத்தகங்களை நீங்கள் தருவித்துக் கொள்ளலாம். மக்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக புத்தகங்களின் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

விக்ஞான் பிரச்சாரின் மின்னணு நூலகத்தில் பிரபலமான அனைத்து அறிவியல் புத்தகங்களும் முக்கியமான அறிவியல் சாதனைகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கும். அறிவியல் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புவோரின் நலனுக்காகவே இவை இணையதளத்தில் ஏற்றப்படுகின்றன. ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு நீங்கள் அவற்றைப் படிக்கலாம். பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

விக்ஞான் பிரச்சாரின் வெளியீடுகள் அறிவியல் தகவல்களை லட்சக்கணக் கான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கின்றன. தேசியத் திட்டங் களுக்கும் முன்னுரிமைகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை அவை அளித்திருக்கின்றன. இளைஞர்களுக்கு அறிவியல் பயிற்சி அளிப்பதற்கும் நாட்டின் அறிவியல் தளம் மேம்படுவதற்கும் அந்த வெளியீடுகளும்  விக்ஞான் பிரச்சார் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளும் துணைபுரிந்து வருவதை அனைத்து மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு.

-பேரா.கே.ராஜு

News

Read Previous

வெள்ளை மனிதன் வடிக்கும் ஆனந்த கண்ணீரும், கருப்பு மனிதன் சிந்தும் வேர்வையின் சுவை உப்பே!

Read Next

அதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் வஃபாத்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *