அஞ்சு வண்ணத்தார் வாணிகம்”

Vinkmag ad

அஞ்சு வண்ணத்தார் வாணிகம்

1000

 

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் காணப்படும் பழைய பாடற் திரட்டு.

 

இப்பாடலில் நாகப்பட்டினம் வர்ணிக்கப்படுகிறது, அங்குள்ள வியாபார நடவடிக்கைகள் குறிப்பிடப்படுகின்றன. மேற்கே இருந்து குதிரைகள் கொண்டு வரப்படுகின்றன, வடக்கிலிருந்து  பிடவை கிழக்கேயிருந்து பொன்தெற்கிலிருந்து முத்துக்கள் எடுத்து வரப்படுகின்றன. இங்ஙனம் கப்பல்களிலே பல்வேறு வகையான பண்டங்கள் நாகைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

 

 

இப்பண்டமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் அஞ்சு வண்ணத்தார்.  இதன் பயனாக அஞ்சு வண்ணத்தவர் சிறப்புடன் வாழ்கின்றனர். அது காரணமாக அங்கு அறம் வளர்கிறது. அத்தகைய சிறப்புடைய ஊரிலே உள்ள கடற்கரையிலே சந்தனம் குவிந்து கிடக்கின்றது. ஏனைய பொருள்களும் அங்கும் இங்குமாகச் சிந்திக் கிடக்கின்றன. உப்பும் அங்கு உண்டு, இத்தகைய கண்கவர் காட்சி மிக்கது நாகை என்னும் நாகப்பட்டினம். இந்த நாகப்பட்டினத்திலே அஞ்சுவண்ணத்தார் Anju Vannar என அழைக்கப்பட்ட  முஸ்லிம் மக்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினார் என்பதையே இப்பழைய பாடல் குறிக்கிறது.

 

– (நூல்: செ.திவான் and Meera Abraham)

 

 

இந்த வரலாறு மீட்டு எடுக்கப்பட வேண்டும். நாம் மீண்டும் அந்தப் பொற்காலத்திற்குச் செல்ல வேண்டும். வணிக சமூகமாக மாற வேண்டும்.

 

ஆழமாக உரையாடுவோம், விவாதிப்போம். அவற்றினூடாக,
வெளியேறும் வழிகளையும் விடைகளையும் கண்டடைவோம்.
வரலாறு நமக்காகக் காத்திருக்காது.
நாம்தான் வரலாற்றில் தலையீடு செய்ய வேண்டும்.
அப்போதுதான் மாற்றம் சாத்தியப்படும்.

 

நாம் ஏகாதிபத்தியத்திர்கும், முதலாலிதுவத்திர்கும், கார்ப்பிரேட் கம்பெனிக்கும்*  நமது அறிவையும், திறமையும், உழைப்பையும் சோர்ப்ப விலைக்கு அடிமையானது போதும். இந்த உழைப்பையும், திறமையும் கொண்டு நாம் பாதையை மாற்றுவோம்…அதற்காக களம் கணுவோம்,  … வரலாறு படைப்போம்!!
இன்ஷாஅல்லாஹ்


நூர் முகம்மது

 

News

Read Previous

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..

Read Next

சார்ஜாவில் சார்ஜா இஸ்லாமிய வங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *