பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி : அரசுப் பள்ளி 90 சதவீதம்

Vinkmag ad

பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி

 

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு 2013 – 14 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக உதவித் தலைமையாசிரியர் ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.

முதல் மதிப்பெண் :  எஸ். வர்ண சங்கீதா ( 486 / 500 )

இரண்டாவது மதிப்பெண்  : ஆர். மெகரிலா ( 485 / 500 )

மூன்றாவது மதிப்பெண் :  எஸ். ரேவதி ( 482 / 500 )

302 பேர் தேர்வு எழுதியதில் 260 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இப்பள்ளி 96.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டை விட 10 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

வரும் காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாதவாறு புதிய நிர்வாகக்குழுவினர் செயல்பட ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

News

Read Previous

மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம்

Read Next

குவைத் பற்றிய தொடர் கட்டுரை (1) — வித்யாசாகர்

Leave a Reply

Your email address will not be published.