கூனிங்கான்

Vinkmag ad

முதுகுளத்தூரில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் கூனிங்கான் நயினுங்கான் இளந்தரிக்கான் ரெகுநாதக்கான் கோரங்கான்
என்ற ஐந்து வகையறாக்களில் மூத்த வகையறாதான் கூனிங்கான்

✒️இன்றைய பெரிய பள்ளிவாசலின் அன்றைய பெயர் மசாயிகு பள்ளிவாசல்
இந்த மசாயிகு பள்ளியை ஒட்டி அமைந்தது கூனிங்கான் குடியிருப்பு பகுதிகள் பொதுவாகவே வழிபாட்டுத்தலங்களை மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே அமைத்துக் கொள்வார்கள் அந்த வகையில் மசாயிகு பள்ளி கூனிங்கான் குடியிருப்பு பகுதியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது

✒️பெரிய துங்கன் ராவத்தர் மகன் கூனிங்கான் அம்பலத்தின் பிள்ளைகள்
பெரிய சையதுமீரா
நடு செய்யதுமீரா
சின்ன சையதுமீரா
இவர்கள் மூவரின் கிளைகளாக நாம் விரிவடைந்திருக்கிறோம்

✒️இந்த மூவரின் family tree யை ஆவனமாகப் பதிவு செய்து வருகிறோம் அந்த அடிப்படையில் ஒருங்கினைக்க உருவாக்கப்பட்டதுதான்
இந்த கூனிங்கான் வேர்களைத்தேடி….. குழு

✒️நம் ஊரில் உள்ள எல்லா வகையறாக்களின family tree யை பல வருடங்களாக ஆவனப்படுத்தி வருகிறேன் இதில் கூனிங்கான் வகையறாவில் நானும் வருவதால் கூடுதலான தகவல்களை ஆவனபடுத்த முயன்று வருகிறேன்

✒️மெயின் ரோட்டிலிருந்து பள்ளிவாசல் நடுத்தெருவில் நுழையும்போது இடது கைப்பக்கம் உள்ள குடியிருப்பு பெரிய சையதுமீரா மக்களுடையது
வலது பக்கம் உள்ளது நடுச் சையதுமீரா மக்களுடையது
அதற்குப் பின்னுள்ளது சின்ன சையதுமீரா மக்களுடையது

✒️முதுகுளத்தூர் முஸ்லீம் சமூகத்திலும் பொதுச் சமூகத்திலும் இவர்களின் பங்களிப்பு மிகுதியானது

✒️எல்லா மனிதக்கூட்டங்களிலும் உள்ள சண்டை சச்சரவு குத்து வெட்டு கோர்ட் கேஸ் இவற்றிற்கு இந்த வகையறாவும் விதிவிலக்கல்ல…
அவற்றையும் தாண்டி வேர்களை தெரிந்து கொள்வது நம் கடமை

✒️தொடந்து தகவல்களைப் பதிகிறேன் குழுவில் உள்ள சொந்தங்கள் நம் கூனிங்கான் வகையறா குறித்த உங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

 

Jahir Hussain

+91 94439 19706

 

News

Read Previous

காத்திருக்கிறேன்…

Read Next

தன்னம்பிக்கை நாயகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *