ஹஜ் யாத்ரீகர்களின் சவூதி வருகை இமிக்ரேஷன்

Vinkmag ad

ஹஜ் யாத்ரீகர்களின் சவூதி வருகை இமிக்ரேஷன் இனி அவரவர்களின் நாடுகளிலேயே நடத்த சவூதி அரசு திட்டமிட்டுள்ளது.

✈ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சவூதியில் இமிக்ரேசனில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஹஜ் யாத்ரீகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இப்பிரச்சனையை சரிசெய்ய இனி ஹஜ் யாத்ரீகர்கள் அவரவர்களின் நாடுகளில் எந்த விமான நிலையங்களில் இருந்து பயணிக்கிறார்களோ அந்த விமான நிலையத்திலேயே சவூதி பாஸ்போர்ட் அதிகாரிகள் இடம் பெற்றிருப்பர். அவர்கள் அங்கே வைத்தே இமிக்ரேஷனையும் பூர்த்தி செய்வர். மேலும் கைரேகை உள்ளிட்ட நடை முறைகளும் அவரவர்களின் தாய் நாட்டிலேயே நடத்தப்படும். இதனால் சவூதி வந்திறங்கும் ஹஜ் யாத்ரீகர்கள் எந்தவித சிரமமும் இன்றி விரைவாக விமான நிலையத்திலிருந்து வெளியேறிவிடலாம்.

கடந்த வருடம் மலேசியாவிற்கு மட்டும் இத்திட்டம் செயல் படுத்தப் பட்டு வெற்றி பெற்றதை அடுத்து. இனி அதிக ஹஜ் யாத்ரீகர்கள் பயணிக்கும், இந்தோனேஷியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 27 நாடுகளில் இதனை செயல்படுத்த சவூதி அரசு திட்டமிட்டுள்ளது.

News

Read Previous

புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?

Read Next

அப்பா என்றால்…

Leave a Reply

Your email address will not be published.