வடம்

Vinkmag ad

முன்னுரை

 கிராமத்துக் கோவில் தேரினை  வடம் கொண்டு  இழுப்பது அக்கிராம மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு.அதில் சாதி, அந்தஸ்த்து   ,உரிமைக்கு இடமில்லை இறைவன்

ஊர் பெயர்கள் ஒரு கிராமத்தின் சூழல் , அங்குள்ள குளம, நதி, மலை , அதிகமாகக் காணப் படும் மரங்கள் . வரலாற்றில் நடந்த சம்பவம்  அடிப்படையில்  அமைகிறது. கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் தென்மராட்ச்சியில்  சுமார் 3 மைல்  தூரத்தில்  வரணிக் கிராமம் அமைந்துள்ளது  இக்கிராமத்தில் சுட்டிபுரம் அம்மன் கோவில் பிரசித்தம் பெற்றது . இன்னும்  பல அம்மன், முருகன், பிள்ளயார் கோவில்கள் இப் பகுதியில் உண்டு .கிராமத்துக்கு கிராமம் கலாச்சாரம் , நம்பிக்கை, சமூக கோட்பாடுகள் மாறு படும், வரணி என்பதற்கு பல விளக்கங்கள் சொல்லப்படுகிர்து

மாவிலங்கு மரத்துக்கு வரணி என்ற பெயர் உண்டு. முன்பு ஒரு காலத்தில்   மாவிலங்கு மரங்கள் நிறைந்த ஊரா இருந்தது என்பர் ஒரு சிலர் மருத நிலப் பரப்பை கொண்டது வரணி.

 வரணி வடக்கில் உள்\\ள  சிமிள் அம்மன் கோவில் படிபடிய்க வளர்ச்சி பெற்ற கோவி\ல். கோவிலுக்குள் செல்ல  சாதி சார்ந்த பலத்த கட்டுப்பாடுகள் இருந்தன

வரணி கிராம  சபை தலைவர் விநாயகமூர்த்தி   வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். சிமிள் அம்மன் கோவிலின் தர்மகர்த்தா. முற்போக்கு கொள்கைகளுக்கும் அவருக்கும் வெகு தூரம். மரபு வழிவந்த செயற் பாடுகள் பேணப் பட வேண்டும் என்பது அவர் போக்கு. அவரின்  சொல்லுக்கு அக்கிராமத்தில்  மதிப்புண்டு, காரணம் அவர் அந்த கிராமத்தில் ஒரு குட்டி ஜமீந்தாராக இருந்தார் . பல காணிகளும், பணமும் அரசியல் ஆதரவும் அவருக்கு இருந்ததால் அவர் சொன்னதே அக் கிராமத்தில் சட்டம். பலர் அவரி நெற் காணிகளில் தலித் இனத்தவர்கள் பலர் கூலிகளாக  வேலை  செய்தனர்

சிலரின் பண உதவியோடு அம்மன் கோவிலுக்கு பல இலட்சம் பெறுமதியான  தேர் ஒன்றினை சித்திர வேலை  பாடுகளோடு  வினாயகமூர்த்தி  செய்தார்  . புதுத் தேர் திருவிழாவை பிரமாண்டமான செலவில் ஏற்பாடு செய்திருந்தார். கிராமம் முழுவதும் அலங்காரிகப் பட்டது . பக்கத்து கிராமங்கைளில் இருந்து மக்கள் திரண்டு  திருவிழாவுக்கு  வந்தனர்  காவடி ஆட்டம் வேறு நடந்தது   . அக்காவடிகளில் ஓன்று தூக்குக் காவடி   தேர் சிற்களில் பக்தர்கள் நெரிபட்டு இரத்தம் சிந்தி  ஊயிர் இழக்காமல் இருக்க ஒரு ஆட்டின் காதை வெட்டி அதில் உள்ள இரத்தத்தை தேரின் சிற்களில்  பூச கோவில் பரிபாலன சபை முடிவெடுத்தது. அதற்கு கிராமத்து முற்போக்கு குழு அங்கத்தினர்கள்    எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேரின் வடத்தை  ஊரின்  ஊரில் உள்ள வேளாள சாதி மக்களே இழுக்க வேண்டும் என்று  இழுப்பவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது . அதில்  விநாயகமூர்த்தியின் அரசியல் நண்பரும் உதவி அமைச்சருமான அனுராதபுரத்தை சேர்ந்த  ரத்திநாயக்கா பெயரும் உள்டங்கியது.  ரத்திநாயக்கா ஒவ்வொரு வருடமும் வரணிக்கு வந்து, விநாயகமூர்த்தியின் வீட்டில் தங்கி நின்று, அம்மன் கோவில் திருவிழாவில் பங்கு கொள்வார். அவருக்கு  பல சிங்களவர்களைப் போல் பத்தினி அம்மன் மேல் பலத்த நம்பிக்கை

  அவ்வூரில் வாழும் வேளாளர் அல்லாத இன மக்களுக்கு  தேரின் வடம் பிடிக்க உரிமையில்லை. அவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப் பட்டது .

பொதுவுடமை கட்சி அங்கத்தினர் அனேகர் வேளாலர் இனத்தை சேராதவர்கள் . தேர் திதிருவிழாவின்  போது தம்மையும்   வடம் பிடித்து தேரை  இழுக்விட வேண்டும் என்று கிராம சபைக்கு மனு செய்தனர் அனுமதி தராவிட்டால் தேருக்கு முன் நிலத்தில் படுத்து தேரை அசைய விடாமல் செய்யப் போவதாக கிராமத்து  பொதுவுடமை கட்சி  அங்கத்தினர்கள் தீர்மானித்து  கிராம சபைக்கு அறிவித்தனர். கிராம சபை  என்ன  செய்வது  வென்று தெரியாது  திகைத்து நின்றனர் . அப்போது  சபையில் ஒருவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது வேளாள  மக்கள் மட்டும் வடத்தை இழுப்பதை மற்றவர்கள் எதிர்பதினால் சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனத்தில்  தேரின்  வடத்தைக் கட்டி    இழுத்தால் என்ன  என்று கிராம சபையோடு கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தனர் .அந்த  முடிவின் ஒரு  ஜேசிபி  வாகனத்தை  யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்ண்டு வர முடிவு எடுக்கப் பட்டது . இந்த வாகனம் நிலத்தை தோண்டி சீர்படுத்தவும் . கட்டிட வேலை களுக்கு பாவிப்துண்டு.   ஜேசிபி  வாகனத்தை   சில மணி நேரம் வாடகைக்கு எடுக்கும் பொறுப்பு  கிராம சபையின்  உப தலைவர் வினாசித்தம்பியிடம் , கொடுக்கப்பட்டது

 பகதர்கள் வடத்தை இழுப்பதுக்கு  பதிலாக  ஜேசிபி  வாகனத்துடன்  இரு வடங்களையும்  கட்டியபடி புதுமையாக தேர்  அசையத் தொடங்கியது. பக்தர்களின் கரகோசம்  கிராமத்தை  அதிர  வைத்து.  தேர் ஆடி அசையத் தொடங்கிது தொடங்கியது. வினாகமூர்த்தி ஊரில வேளாளர் இல்லாத  இல்லாத குறைந்த சாதி   மக்களுக்கு தான் ஒரு பாடம் படிப்பித்து விட்டதாக பெருமைப்பட்டார்.’

தேர் திருவிழா முடிந்தது.

 ஜேசிபி  வாகனத்தை செலுத்திய அதன் சொந்தக்காரன்   தனக்கு வரவேண்டிய பணத்தை  வினாயக மூர்த்தியிடம் கேட்ட போது கிராம் சபையின் அங்கத்தினர் ஒருவர் சாரதியை அடையளாம் கண்டுவிட்டார்

“எடேய் நீ  செல்லன் மகன் முத்தன் தானே?

“ஓம் ஐயா”

 “நீ எங்கள்  வேளாள சாதி இல்லையே? நீ சாராயத் தவறணை வைத்திருந்த செல்லன் மகன் தானே?   எப்படி உனக்கு பணம் வந்தது அதிக பணம் கொடுத்து விலை கூடிய ஜேசிபி வாபானம் வாங்க ’?

“என் அண்ணர் சின்னன் துபாயில் மெக்கானிக்காக  பல காலம் வேலை செய்கிறார். அவர் அனுப்பிய பணத்தில்  எங்கள் குடிசையை  கல் வீடாக மாற்றி, இந்த  ஜேசிபி வாகனமும் , ஒரு காரும் வாங்கி வாடகைக்கு விடுகிறோம்  . வாகனத்தை ஓட்டிய சாரதியும் உரிமையாளனுமான முத்தன் சொன்னான் . முத்தனின் தந்தை செல்லன் ஒரு காலத்தில் கள் இறக்கி பிழைத்தவன்.  அதன் பின்  சாராயத் தவறணை வைத்திருந்தவன்.

விபரம் அறிந்த வினாயகமூர்த்தி வாயடைத்துப் போய் நின்றார்.. கிராம சபை தலைவர் பேசிய கூலியை  முத்தனுக்கு  கொடுத்தார் .

( உண்மை சம்பவத்தை  வைத்து புனைவும் கலந்து எழுதப்பட்டது)

****

News

Read Previous

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Read Next

போர்களத்தில் ஒரு திருமணம்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *