ரமலான் சிந்தனைகள் – குர்ஆன் என்ன சொல்கிறது?

Vinkmag ad

  1. முஹம்மது அபூதாஹிர்

thahiruae@gmail.com

குர்ஆன்  படைப்பாளன், வணக்கத்திற்குரியவன்”.அல்லாஹ் ஒருவனே  “என்கிறது,அவன் எந்தத் தேவையுமற்றவன், அவனுக்கு நிகர் யாருமில்லை.அவனுக்கு பெற்றோர் கிடையாது,அவனுக்கு பிள்ளைகளும் கிடையாது. என்கிறது.

மனிதர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அடியார்கள்,இயற்கையின் பொருட்கள், சிலைகள்,சமாதிகள் எவற்றின் முன்னும் மண்டியிடக் கூடாது.மேலும் எவற்றிடமும் யாரிடமும் பிரார்த்தனை  செய்திடவும் கூடாது என்பது குர்ஆன் கூறும் ஏகத்துவத்தின் சாராம்சமாகும்.

குர்ஆன் மனித குலம் அனைத்தும் ஒரே ஆத்மாவில்  இருந்து படைக்கப் பட்டது.அவற்றில் இருந்து ஆண் பெண் இரு பாலரையும் அல்லாஹ்படைத்தான்.மனிதர்களில் மிகச் சிறந்தவர் இறையச்சம் உடையவரே என்கிறது குர்ஆன் .

மனிதர்கள் சிந்திக்க வேண்டும். பரந்த பூமி ,விரிந்த வானம்,  உயர்ந்த மலைகள் ,அருந்தும் நீர், அவன் சாப்பிடும் கனிகள்,அவன் படைக்கப் பட்ட விதம் ஆகியன ஒவ்வொன்று குறித்தும் அவன் சிந்திக்க வேண்டும்.சிந்திக்க மாட்டீர்களா என குர்ஆன் பல இடங்களில் கேட்பது கேள்வி மட்டுமல்ல ,சிந்திக்க அழைப்புமாகும் அது.

குர்ஆன் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு நன்றியுடன் நடக்க வேண்டும் என்கிறது.எனக்கும் நன்றி செலுத்து உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்கிறது என்கிறது குர்ஆன்.அவனுடைய அன்னை கஷ்டத்தின் மீது கஷ்டப்பட்டு அவனை பெற்றெடுத்தாள் என்று சொல்லும் குர்ஆன் அவர்களிடம் பணிவு என்ற இறக்கையை தாழ்த்துமாறும் ,அவர்களுக்காக இறைவனிடம் சிறுவயதில் எங்கள் மீது அவர்கள் கிருபை செலுத்தியது போல் அவர்கள் மீது நீ கிருபை காட்டுவாயாக என்று துஆ செய்ய கட்டளையிடுகிறது.

குர்ஆன் மூமினான ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறது .திருமணத்தின் அளவுகோலாக சமூகம் வைத்துள்ள பணத்தை தூக்கி எறிகிறது .அல்லாஹ் நாடினால் அவர்களை செல்வந்தர்களாக்குவான் என்கிறது .இன்றைய திருமணங்களில் பெண் ஆணுக்கு வரதட்சணை கொடுக்கும் கொடுமை இஸ்லாத்திற்கு எதிரானது.குர்ஆன் ஆண் பெண்ணுக்கு மஹர் எண்ணும் மணக்கொடை கொடுத்து மணம் முடிக்க கட்டளையிடுகிறது .

குர்ஆன் அநீதியை எதிர்த்து போராடுமாறு மனித குலத்தை அழைக்கிறது.பெண்களும் குழந்தைகளும்  பலகீனமான மக்களும் எதிரிகளால் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இறைவா உன் புறத்தில் இருந்து எங்களுக்கு உதவியாளரை அனுப்பு என்று பிரார்த்தித்து கொண்டிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க என கேட்கிறது குர்ஆன் .

குர்ஆன் வியாபாரம் செய்பவர்கள் நேர்மையோடு வியாபாரத்தில் நடந்துக் கொள்ள வேண்டும் என்றுக் கூறுகிறது.அளக்கும் போது வியாபாரி சரியாக அளக்க வேண்டும் என்றுக் கூறுகிறது .காசை நிறைவாக வாங்கி தரமற்ற பொருளையோ, அல்லது வாங்கிய காசுக்கு குறைவான பொருளையோ விற்கும் வியாபாரியை குர்ஆன் கண்டிக்கிறது. வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான் அவர்கள் மக்களிடம் வாங்கும் போது அதிகமாக வாங்குகிறார்கள், விற்கும்போது குறைவு செய்து விடுகிறார்கள். என்று .

குர்ஆன் மனித நேயத்தை போதிக்கிறது. யார்  ஒரு ஆத்மாவை வாழ வைப்பாரோ அவர் உலகில் உள்ள அனைத்து மக்களையும் வாழ வைத்தவர் போலாவார்.யார் ஒரு ஆத்மாவை கொள்வாரோ உலகில் உள்ள அனைவரையும் கொன்றவர் போலாவார் என்று சொல்கிறது.

குர்ஆன் பெண்குழந்தை கொலை செய்யப் படுவதை கண்டிக்கிறது.பெண் மகவுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பணிக்கிறது.பெண்ணுக்கு மஹர்  – மணக்கொடை கொடுத்து திருமணம் முடிக்க சொல்கிறது. அவளது தாய்மையின் தியாகத்தை புகழ்கிறது.அவளுக்கு நன்மை செய்ய வேண்டும் பிள்ளைகளுக்கு பனிக்கிறது.அவள் மீது அவதூறு சொல்பர்களுக்கு கசையடி கொடுக்க கட்டளையிடுகிறது .

குர்ஆன் தொடங்குவதே படிப்பீராக என்றுதான் தொடங்குகிறது .பேச மனிதனுக்கு இறைவனுக்கு கற்றுக் கொடுத்தான் என்று சொல்லும் குர்ஆன் பேனாவை கொண்டு எழுதவும் அவனுக்கு அவன்தான் கற்றுக் கொடுத்தான். என்கிறது .அறிந்துக் கொள்ள்ளுங்கள், என்று குர்ஆன் அழைக்கிறது.நீங்கள் உணர மாட்டர்களா ?அறிய மாட்டீர்களா?,சிந்திக்க மாட்டீர்களா? என்று குர்ஆன் கேட்கிறது.அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் அறிஞர்கள்தான் என்று கூறும் குர்ஆன் அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ்தான் மனிதர்களில் ஒருவரை விட மற்றவர் கல்வியில் முந்தி இருப்பதாக சொல்கிறது. கல்வியை பாதுகாக்கும் மனனத்தை ஊக்குவிக்கிறது.குர்ஆனை மனனம் செய்யுமாறு கட்டளையிடுகிறது.

குர்ஆன் கொடுக்கல் வாங்கல் கடனுக்கு செய்துக் கொண்டால் அதை எழுதி வைக்க வேண்டும் என்றும், எழுத தெரியா விட்டால் எழுத தெரிந்தவர் அவருக்கு நேர்மையோடு எழுதி தர வேண்டும் என்று சொல்கிறது.

குர்ஆன் இலஞ்சத்தை கடுமையாக எதிர்க்கிறது., உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.என்று குர்ஆன் சொல்கிறத.

மது,சூதாட்டம்,விபச்சாரம்,வட்டி ஆகிய தீமைகளை குர்ஆன் கடுமையாக கண்டிக்கிறது. அல்லாஹ் ஆகுமாக்கிய ஹலாலான பொருட்களை தாரளமாக உண்ணுதல்,திருமணம் செய்துக் கொள்ளல்,நேர்மையாக வியாபாரம் செய்தல்,ஆகியவற்றை குர்ஆன் ஊக்குவிக்கிறது.

நன்மையை ஏவி தீமையை தடுக்க சொல்கிறது.தருமம் செய்ய சொல்கிறது,பெற்றோருக்கு,உறவினர்களுக்கு,பிள்ளைககளுக்கு மேலும் அண்டை வீட்டுக்காரர்களுக்கு நன்மை செய்ய சொல்கிறது.

சமூகத்தில் அனைத்து மக்களுடனும் சுமூகமாக சேர்ந்து வாழ பணிக்கிறது.ஒரே இறைவனை வணங்குதல்,மனிதர்கள் தங்களில் யாரையும் அல்லாஹ்வை விட்டு விட்டு பாதுகாவலர்களாக.எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறது.

.தாம்  இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப் பட்டதாக கூறும் குர்ஆன் அவர்களை மனிதர்கள் தங்கள் வாழ்வில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.அவர்கள்  அல்லாஹ்விடமிருந்து வந்த இந்தக் குர்ஆனை மக்களுக்கு விளக்கினார்கள்.அதன் படி அவர்களும் வாழ்ந்தார்கள். ஆம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என வினவப் பட்ட போது குர்ஆனாக இருந்தது என்றுக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மனித குலத்திற்கு தாம் நல்லுரையாக அருளப் பட்டதாக கூறும் குர்ஆன் மனிதர்கள் இந்தக் குர்ஆனை படித்து ஆராய வேண்டும் என்கிறது.இதனை மறுப்பவர்களை நோக்கி கேட்கிறது அவர்கள் இதனை ஆராய வேண்டாமா? அவர்களின் இதயங்கள் மீது தாழ்ப்பாள்கள் போடப் பட்டுள்ளதா ? என கேட்கிறது.

“இக்ரா “என்று தொடங்கும் குர்ஆன் வசனம் ஓதுவீராக ,கற்ப்பீராக,படிப்பீராக என்று பல பொருள்கள் விரியும்.குர்ஆன் இறக்கப் பட்ட இந்த ரமலான் மாதத்தில் குர்ஆனை ஓதுவதோடு அன்றி அதன் பொருளையும் படித்து நம் வாழ்வில் கடைப் பிடித்து ஒழுக வேண்டும் .

(குறிப்பு :அல்லாஹ் என்பது ஏக இறைவனை குறிக்கும் அரபிச் சொல்லாகும்)

v

 

 

News

Read Previous

அரசு அருங்காட்சியகம் – சென்னை

Read Next

என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *