முதுவைக் கவிஞருக்கு இரங்கற்பா !

Vinkmag ad
moulaviumarjahfer2கடந்த 01.03.2014 சனிக்கிழமையன்று வஃபாத் ஆன ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்
முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஃபர் மன்பயீ அவர்களின் நினைவாய்
இரங்கற்பா !
( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி
அலைபேசி : 99 763 72229 )
* எங்கள் கிழக்கில்
  இருளோதயம் !
* எங்கள் உரிமையை காக்க
  எழுந்த ….  அரிமா …………
  எங்கேயோ
  எங்களைக் கடந்து !
* மரணம் தொடாத
  மனிதர் இல்லை தான் !
  ஆனாலும் ……………
  அதற்குள்ளாகவா …
  மரணம் உங்களைப் பறித்துப் போனது ?
* உமர் ஜஃபரே !
  வாழ்ந்த நாட்களை
  நல்ல அமல்களால்
  அலங்கரித்தீர்கள் !
  சமுதாய வளர்ச்சிக்கும்
  செல்வழித்தீர்கள் !
   போதுமென்று  ….  இறைவன்
   ஓய்வளித்தானோ ?
   கண்ணீர் பொங்குகிறது !
*   இறைநெறியும் நபிவழியும்
    பேசிக்காட்டிய
     நூலகம்
     மூடிக் கிடக்கிறதே !
*   திடல் பள்ளிவாசலின்
    திடகாத்திரமே !
    நீங்கள் சரிந்ததேனோ ?
    மரணம் வந்து உங்களைச்
    சாய்த்ததேனோ .. ?
*   சொல்லால், கவிதையால்
     தீன் பணியாற்றினீர்கள் !
     ஒளிச்சுடராகத்தானே
       வாழ்ந்து காட்டினீர்கள் !
*   திடல் பள்ளிவாசல் ஜமாஅத்
     ஒருங்கிணைப்பு !
*   கல்வியில் விழிப்புணர்வு
     இதிலெல்லாம்
      கவனம் செலுத்தினீர்கள் !
*   தமது ஜமாஅத்திற்கென
    ஒரு பள்ளிக்கூடம்
     லட்சியமாய் வைத்திருந்தீர்கள்
*   முதுவை நல்ல
     முகவரியை நல்ல இழந்தது !
*    மொழி – தன்
      உறவை இழந்தது !
* இதயமோ …   அமைதியை
   இழந்தது !
எங்கள் பயணத்தில்
நல்ல துணையொன்று
பிரிந்தது !
அல்லாஹ்வின் அழைப்பில்
மறுமைக்கு …
முந்திச் சென்றீர்கள் !
அவனுடைய தயவாலே
இன்ஷா அல்லாஹ்
சுவனமும் காண்பீர்கள் !
துஆ !
*இறைவா !
தலைமைய இழந்த
எங்கள் சகோதரர் உமர் ஜஃபரின் குடும்பத்திற்கு
ஆறுதலைத் தா !
பிரிவைத் தாங்கும் வலிமையத் தா !
* எங்கள் ரப்பில் ஆலமீனே !
உன் அருளுக்காய் ஏந்தும் கைகளை
வெற்றிடம் ஆக்காமல்
உன் ரஹ்மத்தை தந்து நிரப்புபவன் நீ !
அவ்வாறே செய்வாய் யா அல்லாஹ் !
ஆமீன் ! ஆமின் ! யாரப்பில் ஆலமீன் !

News

Read Previous

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று……

Read Next

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?

Leave a Reply

Your email address will not be published.