மீலாது நபி *** வாருங்கள் எல்லோரும் கொண்டாடுவோம்

Vinkmag ad
 -மீலாது நபி *** வாருங்கள் எல்லோரும் கொண்டாடுவோம்-
தலைப்பைக் கண்ட அடுத்த வினாடியே,
பத்வா கொடுக்க உங்கள் மனம் துடிக்கிறது என்றால்,
வாரீர் என் தோழரே.!
தயவு செய்து உங்களையும், உங்கள் ஆய்வு முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை நீங்கள் ஆராயுங்கள்.!
எது ஒன்றையும் ஒருவர் எப்படி செய்கிறார் என்பதைப் பொறுத்தே அது சரியா அல்லது தவறா என பார்க்க வேண்டும்.!
நம்மால் ஒரு செயலை சரியாக செய்ய முடியவில்லை என்பதற்காக, ஒட்டு மொத்த உலகமும் அந்த செயலை தவறாகவே செய்யும் என்கிற ரீதியில் பொது தீர்ப்பு அளிப்பது ஆபத்தானது.
வர இருக்கும் மீலாது நபி நாளில்,
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வு மற்றும் அவரின் வழிகாட்டுதல்கள் குறித்தும் இந்த நாளில் , முஸ்லிம்களுக்கும் – நம் சகோதர சமூக மக்களுக்கும் பரவலாக எடுத்துரைப்போம்.
சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து முக்கிய பிரமுகர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் பொது நபர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பேச வைப்போம்.(அறிஞர் அண்ணாவின் மீலாது உரைகளின் ஆழிய கருத்துக்கள் குறித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம்.)
வழக்கம் போல விவாதத்திலேயே – வீணாக போய்க் கொண்டிருக்காமல்,
விவாதம் என்பதை தாண்டி கலந்துரையாடல் மூலமாக பரஸ்பரம் நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயல்வோம்.
இஸ்லாம் கொண்டாட்டங்களைத் தடுக்கவில்லை.
கொண்டாட்டம் என்கிற பெயரில் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்கிற வழிகாட்டுதலைத் தந்துள்ளது.
அதன் அடிப்படையில் செய்யப்படுகிற எந்த செயல்பாடுகளையும் – நாம் நமது சுய முடிவின் அடிப்படையில் தடுப்பதற்கு உரிமையில்லை.
நம் நாட்டில் இஸ்லாம் குறித்து எதுவுமே தெரியாத கோடானு கோடி மக்கள் உண்டு.
அவர்களுக்கு எல்லாம் நாம் என்றைக்கு நமது அழைப்புப் பணியை கொண்டு சேர்க்கப் போகிறோம்.?
சிந்திப்போமாக.!
இறைவனே வழங்கியுள்ள அழகிய வாய்ப்பை,
இஸ்லாம் அனுமதித்துள்ள வழிமுறையைக் கொண்டு –
நல்ல வகையில் பயன்படுத்த முயல்வோம்.
நம்மமுடைய வறட்டு பிடிவாதம் காரணமாக
வாய்ப்புக்களை வீணாகி விடாமல் பார்த்துக் கொள்வோம்.
மற்றவர்கள் தவறான செயல்பாடுகளை செய்கிறார்கள் என்பதாக, காலம் முழுவதும் குற்றப் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு,
அந்தந்த செயல்பாடுகளை
எப்படி சரியாக மற்றும் முறையாக செய்வது என
நம்முடைய செயல்பாடுகள் மூலம் நாம் மற்றவர்களுக்கு காட்டித் தர முயலலாமே.!
மாற்றம் குறித்து வெறுமனே பேசிக் கொண்டு இருப்பவனை விட, மாற்றத்திற்காக களத்தில் இறங்கி,
அறிவுப் பூர்வமாகவும், இங்கிதமாகவும் நடப்பவர் பின்னே இணைந்து செயலாற்ற ஆயிரம் நல்ல இதயங்கள் உண்டு இங்கே.!
நம்முடைய இங்கிதமற்ற அணுகுமுறையால் அதை வீணாக்கி விட வேண்டாமே.!!
எச்சரிக்கை –
“மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான்”
என்பது நபி மொழி.
வாங்க பாய் – இந்த நாள்ல நாளில் நாலு பேருக்கு இறைத் தூதரைக் குறித்து அறிமுகப்படுத்த முயற்சி செய்யலாம்.!!!
நாமும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றி வாழ உறுதியேற்போம்.—–
– Abbas Al Azadi

 

Abbas bin haneefa <abbas.sio@gmail.com>

News

Read Previous

இட நெருக்கடியில் வாரச்சந்தை

Read Next

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *