பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

Vinkmag ad

 

பேராசியர். டாக்டர் திருமலர். மீரான் பிள்ளை, திருவனந்தபுரம்

 

  இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நீண்ட நெடிய காலம் கல்லூரிக் கல்விப்பணி ஆற்றி இப்போது பணிநிறைவு பெற இருந்தாலும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைசார்ந்த பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் முதுநிலை ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளராகப் பொறுப்பேற்று ஆய்வுப்பணியைத் தொடரவிருக்கும் நண்பர் பேராசிரியர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை அவர்கள் பெருந்தமிழியல் – புதிய பார்வைகள் என்னும் அரிய இந்நூலை நமக்கு தந்திருக்கிறார்.

பொதுவாக இவர் ஆய்விற்குத் தேர்ந்தெடுத்த புத்தகங்களின் ஒரு பகுதி முதல் ஆயிரம் ஆண்டுகளுக்குள் வந்த தமிழின் இலக்கிய இலக்கணப் பரப்புகளில் செழிப்பை உருவாக்கியவை. தொல்காப்பியர் கால மகளிர், புறநானுறில் சமூக மேம்பாடு, வாழ்வாங்கு வாழ வள்ளுவர் இடும் கட்டளைகள், பட்டினத்தாரில் பெண்கள், பெருங்கதை கூறும் வாழ்வியல், கம்பனில் மனிதயியம் என்பவைகளைச் சுட்டலாம். இவற்றை புதிய கோணத்தில் நூலாசிரியர் அணுகியிருக்கிறார் என்பதே இந்நூலுக்குரியச் சிறப்பு.

நூலின் மற்றொரு பகுதி கழிந்த சில நூற்றாண்டுகளில் தமிழின் மிக முக்கிய ஆளுமைகளாக இருந்த சமயத் தளத்தில் திருநாவுக்கரசர் சேக்கிழார். குமர குருபரர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தேசிய சமூக விடுதலை பேசிய பாரதி, திராவிட இயக்கத்தளத்தில் பாரதிதாசன், திரைப்பட ஆளுமையாக இருந்த பட்டுக்கோட்டை, கண்ணதாசன், உள்ளத்தில் உள்ளதை கவியாக்கிய கவிமணி, பொதுவுடமைத் தளத்தில் நின்று கவிதை பாடும் சிற்பி என அவர்களை மையமிட்டுச்  செல்கின்றது.

இங்ஙனம் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் மரபின் வெவ்வேறு கூறுகளை அதன் புதிய கோணங்களில் குறிப்பாக உளவியல் பாகுப்பாய்வு என்கிற முறையியலைக் கையில் எடுத்துக் கொண்டு, மதிப்பீடு செய்திருப்பது தமிழாய்வுப் பரப்பிற்கு நல்லதொரு புதிய வரவாகும். பாராட்டுக்கள்

 

Publishers :

Bhaaratham Pathippakam

No 49/1 Nousham

Valiya Palli Junction

Manakkad

Thiruvananthapuram – 695 009

Tel : 938 78 17708

விலை ரூ. 90

 

நன்றி
ஏழைதாசன்

சித்திரை

ஏப்ரல் 2012.

News

Read Previous

பிரியாவிடை

Read Next

பகைவனுக்கு அருளிய தகைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *